http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Thursday, August 25, 2016

கோபாலா கோவிந்தா கிருஷ்ணா முராரி...




குழந்தைகள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்!


கிருஷ்ண ஜெயந்தி விரதம்!

கிருஷ்ண ஜெயந்தி
ஆண்டுதோறும்
கிருஷ்ணரின்பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும்.


ஆவணிமாதத்தில்
தேய்பிறையின்
எட்டாம்நிலையில்
(அஷ்டமி) ரோகிணி
நட்சத்திரம் சேர்ந்த
நாளில் இவ்விழா
நிகழ்கிறது.

நமதுபண்டிகைகளில்
கிருஷ்ணஜெயந்திக்கு
என்றுமே தனி இடம் உண்டு.

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம்
தலைதூக்குகிறதோ,
அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

அந்த வகையில்
அதர்மத்தை அழிக்க பகவான்
கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து
பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக்கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி
அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு
கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய்விளக்கு ஏற்ற
வேண்டும்.

குழந்தைகளை கண்ணனாகவும்,ராதையாகவும் அலங்கரிக்கவேண்டும்.

தேங்காய், பழம்,
வெற்றிலை பாக்கு
போன்ற பூஜை பொருட்களுடன்
கண்ணனுக்கு பிடித்தமான சீடை,
முறுக்கு, தட்டை,லட்டு,
அதிரசம், முந்திரி,
பாதாம்,பிஸ்தா,
குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல்,
இனிப்பு பூரி,
மோர் குழம்பு, ரவா லட்டு,தேன்குழல், சர்க்கரை
கலந்தவெண்ணை,
பாசிப் பருப்பு பாயாசம் போன்ற
பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.

நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும்.

நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.

தஹிகலா என்றால் என்ன தெரியுமா?

பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலப்பது என்பர்.

வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான்.

இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான்.

அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.

தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.

அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள்.

பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது.

இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.


https://www.facebook.com/narayanan.viji.3/videos/1770768389845018/?autoplay_reason=gatekeeper&video_container_type=1&video_creator_product_type=2&app_id=350685531728















































கிருஷ்ணனின் 64 பண்புகள் தெரியுமா?

கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இவை தனி மனித சுதந்திரம். தனி மனித விருப்பம். பாரம்பரியமிக்க நம் நாட்டில் நம் முன்னோர் வகுத்த, வழி முறைகளின்படி கொண்டாடப்படும், போற்றப்படும்ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திபண்டிகை நாளில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி மேலும் அறிவோமாக.
கி.மு. 2228-ல் மதுராவில் தேவகி, வாசுதேவன் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மனித சமுதாயத்தினை மேம்படுத்தவும், ஆன்மீகம் தழைக்கவும் வேண்டி பிறந்த இக்குழந்தையே ஸ்ரீகிருஷ்ண பகவான்.
தெய்வீக அவதாரமான இவரை இன்றும் கோடானு கோடி மக்கள், வழிபட்டும், பெயரினை ஜபம் செய்தும், தவம் செய்தும் வருகின்றனர். ஸ்ரீகிருஷ்ண புராணம் படிக்கவும், கேட்கவும் திகட்டாத இனிமை.
ஒரு குழந்தையாக, போர் வீரராக, மாடுகள் மேய்ப்பவராக, தேரோட்டியாக, குருவாக உலகம் போற்றும் கீதையினை போதித்தவராக பல ஸ்தானங்களில் 125 வருடம் வாழ்ந்தவர். அனைவரின் மனதினையும் கவர்ந்தவர். அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலை நாட்டியவர்.
அவர் வாழ்வில் அவர் சந்திக்காத கடின சூழ்நிலைகளே இல்லை. ஆனால் அவர் ஒரு முறை கூட சோகப்படவில்லை. மலர்ந்த, சிரித்த முகம் மாறியதே இல்லை. அருளின் மொத்த உருவ அமைப்பு அவர்.
பிறப்பு கி.மு. 2228 (ஜூலை 19/20) கிருஷ்ண பட்சம், அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில் நடு நிசியில் பிறந்தவர். வாசு தேவரால் கோகுலத்தில் நந்தபாலன், யசோதையிடம் சேர்க்கப்பட்டவர். காரக முனிவரால் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டப்பட்டார்.
மூன்று வயதிற்குள்ளாக புட்டனா சகதசூரா, த்ரினிவத்ரா என்ற அரக்கர்களை அழித்தவர்.
3-6 வயதில் பிருந்தாவனில் பகாசுரா, அக்ரசுரா, தேனுகா என்ற அரக்கர்களை அழித்தவர்.
7-10 வயதிற்குள் கோவர்த்தன மலையை தூக்குதல், மதுராவில் மல்யுத்தம், கம்சனை அழித்தல் என்ற சாகசங்களையும் புரிந்தவர்.
10-28 வயதில் மதுராவை ஆண்டவர். கார்கமுனியால் காயத்ரிஜபம் ஏற்றல், 64 கலை கற்றவர், அரக்கர்களிடமிருந்து மதுராவினை காத்தவர்.
29-83 வயதில் துவாரகையை நிறுவியவர்.
84-125 வயதில் அர்ஜுனின் கீதோபதேசம், விஸ்வரூப தரிசனம் பிரிகிர் மகாராஜாவை கருப்பையில் காப்பாற்றியவர்.
கிருஷ்ணரை நாம் ஏன் கடவுள் என்று கூறி வழிபடுகின்றோம்?
கிருஷ்ணர் இதுவரை ஒன்பது அவதாரங்கள் எடுத்துள்ளார். விஞ்ஞான ரீதியாக 5000 வருடங்களுக்கு முன்னால் இப்பூமியில் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான நிரூபணங்கள் உள்ளன.
அவர் ஆட்சி செய்த துவாரகா நகரம் குஜராத் கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.ஒரு 7 வயது சிறுவனாக மிகப்பெரிய கோவர்த்தன மலையினை தன் கையால் தூக்கி மக்களை காத்தவர்.
அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் பொழுது தனது விஸ்வ ரூப தரிசன காட்சி அளித்தவர். தாய் யசோதைக்கு தன் வாயைத் திறப்பதின் மூலம் பிரபஞ்சத்தினை காட்டியவர்.
இன்றும் பகவத் கீதை உலகில் எவரும் எக்காலத்திலும் கடைபிடிக்க வேண்டிய புனித சாரமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்காலத்தினையும் உணர்ந்தவர்.
பிரம்ம சம்ஹிதாவில் இறைவன் பிரம்மா
கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணனே கடவுள். நிரந்தர ஒளிவிடும் ஆன்மீக உடல் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார். கீத மஹாத்மியத்தில் இறைவன் சிவன் கூட ஒரே ஒரு கடவுள் கிருஷ்ணா, தேவகியின் புதல்வர் என குறிப்பிட்டுள்ளார்.
மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீகிருஷ்ண அவதாரமே அதிகம் எழுதப்பட்டுள்ளது. பேசப்படுகின்றது. வழிபடப்படுகின்றது. எனவேதான் கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களின் மாபெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண பகவானின் பண்புகளாக 64 பண்புகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த பண்புகளே இவரை கடவுளாக நம்மை வழிபடச் செய்கின்றது. அவற்றையும் காண்போம்.




* ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடன் பார்ப்பவரின் கண்களை தானாக ஈர்க்கும் பரவசம் அளிக்கும் தோற்றம்.
* அனைத்து சுப, மங்கல பண்புகள் பெற்றவர்.
* சிவந்த கண்கள், பாதங்கள், அண்ணம், உதடுகள், நகங்கள்.
* பரந்த-நெற்றி, குறுகிய-கழுத்து ஆழ்ந்த-குரல், நீண்ட- மூக்கு, கைகள், கால்கள் போன்ற பண்புகளைப் பெற்றவர்.
* ஸ்ரீகிருஷ்ணரை பார்த்த உடனேயே பார்ப்பவர் மனமகிழ்ச்சி பெறுவர்.
* அவரது தோற்றம் சுடரொளி கொண்டது. நீல வண்ணமானவர்.
* வலுவானவர். எத்தனையோ அரக்கர்களையும், அசுரர்களையும் அழித்தவர். கோவர்த்தன மலையைத் தூக்கியவர்.
* எப்பொழுதும் இளமையாய் காணப்படுபவர்.
* பல மொழிகள் அறிந்தவர், விலங்குகள், பறவைகள் சம்பாஷனை கூட புரிந்தவர்.
* உண்மையானவர்.
* இனிமையாக பேசுபவர்.
* அர்த்தமுள்ள சொற்களை சரளமாக பேசுபவர், நல்ல நடத்தை கொண்டவர்.
* மிகவும் கற்றவர். தார்மீகக் கொள்கைகளை செயல்படுத்துபவர்.
* அதீத புத்திசாலி தனமும், கூர்மையான நினைவும் கொண்டவர்.
* ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மேதை.
* கலை நயம் கொண்டவர்.
* மிக அதிக புத்தி கூர்மை உடையவர். பல்வேறு வேலைகளை தனி ஒருவராய் ஒரே நேரத்தில் செய்பவர்.
* சிறந்த நிபுணர். கடினமான பணியினை விரைவில் செய்யும் திறன் கொண்டவர்.
* கடமைப்பட்டவர். அவர் ஒருவரது சிறிய உதவியினையும் மறவாதவர்.
* மிக உறுதியான கொள்கைகள் உடையவர்.
* காலம், சூழ்நிலை அறிந்த நிபுணத்துவம் கொண்டவர்.
* வேதங்களின் சாரமானவர்.
* புனிதமானவர்.
* மிக அதிக சுய கட்டுப்பாடு உடையவர்.
* வேகம் கொண்டவர். மன உறுதி கொண்டவர். நினைத்த இலக்கை அடையும் வரை தொடர்ந்து வேலை செய்பவர்.
* எவரும் தாங்க முடியாது என நினைக்கும் பிரச்சனைகளைக் கூட பொறுக்கும் குணம் படைத்தவர்.
* மன்னிக்கும் குணம் கொண்டவர்.
* அவரது மனம், திட்டம், நடவடிக்கை, செயல்பாடு இவற்றினை புரிந்து கொள்வது மிகக் கடினம்.
* அமைதியானவர். எந்த கொந்தளிப்பும் இல்லாதவர்.
* உலகின் அனைத்துப் பிரிவினரும் அவருக்கு சமமே.
* பரந்த மனப்பான்மை கொண்டவர்.
* மத ஒழுக்கம் கொண்டவர்.
* மாவீரர். எதிரிகளை கதிகலங்கச் செய்பவர்.
* கருணை கொண்டவர். மற்றவர் துயர் துடைப்பவர்.
* மரியாதை தெரிந்தவர். ஆன்மீக குரு. அந்தணர். ஒரு சாதாரண நபர் அனைவரையும் மரியாதையோடு நடத்துபவர்
* மென்மையானவர். சுதந்திரமானவர்.
* எளிமையானவர்.
* பணிவு கொண்டவர்.
* தன்னை சரணடைந்த ஆத்மாக்களை காப்பவர்.
* எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பவர்.
* தன் பக்தர்களுக்கும், அனைவருக்கும் நல்லதையே நினைப்பவர்.
* அன்புக்குக் கட்டுப்பட்டவர்.
* எப்போதும், எல்லோருக்கும் சுபமானவர்.
* மிகவும் சக்தி வாய்ந்தவர்.
* மிகவும் புகழ் பெற்றவர்.
* மிகவும் பிரபலமானவர். அனைவருக்கும் பிரியமானவர்.
* பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வருபவர்
* சிறப்பு தகுதிகள், உயர் சக்திகள் உள்ள தெய்வங்களை கண்டு பெண்கள் ஆராதிப்பர். அவ்வகையில் பெண்களால் போற்றப்படுபவர்.
* அனைவராலும் வணங்கப்படுபவர்.
* புகழ், செல்வம், அழகு, அறிவு என்ற செழுமைகள் நிறைந்தவர்.
* இவரே சிறந்தவர்.
* பிரபஞ்சங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்ட உயர்சக்தியானவர்.
* எப்போதும் மாறாதவர்.
* எல்லா நேரங்களிலும், அனைத்து இடங்களிலும் நடப்பவைகளை அறியும் தன்மை படைத்தவர்.
* எப்பொழுதும் புதிதாய், புத்துணர்வாய் இருப்பவர்.
* அழியா பொன்னுடல் கொண்டவர்.
* ஆன்மீக அதிசய ஆளுமை பெற்றவர்.
* அபரிமிதமான வல்லமை பெற்றவர்.
* தன்னிடமிருந்து கணக்கிலடங்கா பிரபஞ்சங்களைத் தோற்றுவிப்பவர்.
* பல அவதாரப் பிறப்புகளின் மூலம் இவரே.
* இவர் அழிக்கும் எதிரிகள் கூட இவரால் இரட்சிக்கப் படுகிறார்கள்.
* உடலிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் இவரிடம் கவரப்படுகின்றன.
* அற்புதமான நடவடிக்கைகள் கொண்ட வாழ்க்கையும், குறிப்பாக வியக்கும் குழந்தை பருவமும் கொண்டவர்.
* எப்பொழுதும் பக்தர்களால் சூழப்பட்டவர்.
* தனது புல்லாங்குழல் இசையால் அனைத்து ஜீவன்களையும் கவர்ந்திருப்பவர்.
* இவரது பிரம்மாண்ட அழகு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.



















Monday, July 11, 2016







தமிழன் அறிந்திருந்த ஆன்மிகம் மற்றும் அறிவியல் தகவல்கள்...


********* ********* ************
தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................படியுங்கள் பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!
கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?
மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?
அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.
திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.
தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?
தொல்காப்பியமும் திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.
சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.
வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் ......‪#‎தமிழன்டா‬*********

மேலும் ஒரு தகவல்.
இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!
சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.
எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!!
மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.
கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.
நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்
காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்
சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும்.
இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.
1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)
2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)
3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)
4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)
5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)
6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)
7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)
8) ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174)
கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.