அங்கயற்கண் நாயகி மதுரை மீனாட்சி.
^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^^^^^^^^^^^^
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கை
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே
சைவ ஆகமங்களில் முதலதாக உள்ள காமிகாமத்தில் நகர் பேதங்களில் ‘சர்வதோபத்ரம் என்ற அமைப்பில் எழுந்த நகரம் மதுரை என்பது பொருத்தமானது. ஆகமங்களில் கூறியபடி சுற்றிலும்
ஆதிசக்தியின் அங்கயற்கண் அலர்ந்ததால் உயிர்கள் உருக்கொண்டன.மலர்ந்த கண், மூடி மொட்டாகி விட்டால் உலகும் உயிர்களும் உருத்தெரியாமல் அழிந்து விடும் என்பதாலேயே அங்கயற்கண்ணி அன்றலர்ந்த கண்களை ஒருபோதும் இமைக்காமல் இவ்வுலகைக் கட்டிக்காத்து வருகிறாள்.
தான் இட்ட முட்டைகளைத் தன் பார்வையினலே பொரியச் செய்யும் ஆற்றல் பெற்ற மீனைப்போல தான் உருவாக்கிய அண்டத்தைத் தன் கருணை விழிகளால் காத்தருள்பவள் அங்கயற்கண்ணம்மை இம்மையில் இருக்கு மாந்தரை இமைப்பொழுதும் கண் துஞ்சாமல் காத்தருளும் அங்கயற்கண்ணி மீனாட்சி அருளாட்சி புரியும் அற்புதத் தலம்..... மதுரை அங்கயற்கண்ணி என்பது நல்ல அருந்தமிழ்ச் சொல். மீனாட்சி என்பது தமிழும் வடமொழியும் நேரடியாகக் கலந்த சொல்.மீன் என்பது தமிழ்ச்சொல். அட்சி என்பது வடசொல்.கண்ணையுடைவள் என்பது அதன் பொருள். மீனைப் போன்ற கண்ணை உடையவள் என்ற பொருளில் மீன்+ ஆட்சி என்பது மீனாட்சி என்றாகியது. அங்கயற்கண்ணி என்பதே தூய தமிழ்ச் சொல் அன்னை தென் மதுரையைத் தேர்ந்தெடுத்தது எதற்காக?
அரசு என்றால் எப்படி அமைய வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு அறுதியிட்டுக் காட்டுவதற்கு ஆசைப்பட்டாள், உமையவள்.ஆலவாய் என அழைக்கப்படும் அழகிய மதுரையை மேன்மையுடன் ஆண்டு வந்த மலையத்துவச பாண்டியன்.மகப்பேறு வேண்டி தன் மனைவி காஞ்சனனாலையுடன் ஒரு புத்திரகா மேட்டி யாகத்தை நடத்தினான். வேள்வித் தீயிலிருந்து ஒரு குழந்தையின் குரல் ''அம்மா... அப்பா..'' எனக் கூவி அழைத்தது. குண்டத்து நெருப்பில் குழந்தையா? ஆச்சரிய, அற்புத அனுபங்களைக் கடந்து அரசனைத்திகில் தீண்டியது.அக்கணமே யாக நெருப்பில் ஊடுருவி, அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து அரசியின் மடியில் கிடத்தினாள்.அது ஒரு பெண் குழந்தை என்பதையும்,அதன் நெஞ்சில் வித்தியாசமாக மூன்று மார்புகள் முகிழ்த்திருந்ததையும் கண்டாள்.
அரசன் குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி எழுந்து நின்றான்.
''அம்மையே, இது என்ன சோதனை?
பச்சிளம் பாலகிக்கு எதற்காக மூன்று முத்துக்கள்.?''
---- எனக் கதறினான்.
ஆகாய வெளியிலிருந்து அசரீரி ஒலித்தது. ''மலையத்துவசனே, மனம் மயங்காதே. இந்த அங்கயற்கண்ணி அழகுறத் திகழ்வாள்.கரம் பிடிக்க இருக்கும் கணவனைக் கண்டவுடன் இவள் நெஞ்சில் கிளைத்திருக்கும் மூன்றாவது மொட்டு,தானாக மாயமாகி விடும்.''
மலையத்துவசன் மனம் தெளிந்தான்.தங்களுக்குக் கிடைத்த அந்தப் பொக்கியஷ்த்துக்கு தடாதகை எனப் பெயரிட்டான்.மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால்,அங்கயற்கண்ணி எனவும்,
மீனாட்சி எனவும் அவள் அழைக்கப்பட்டாள்.உரிய காலத்தில் பாலகி அங்கயற்கண்ணி பருவம் எய்தினாள்.மலையத்துவசனுக்கு பின் அரசுக்கட்டிலில் அமர்ந்தாள்.அன்றிலிருந்து அவள் மதுரை மீனாட்சி என அழைக்கப்பட்டாள்.
அவளை எதிர்த்த அரசர்கள் அத்தனை பேரும் மண் கவ்வினர்.
அன்னையின் திருவுளப்படி ஆட்சி புரிந்தனர்.செருக்கு எங்கு தலை தூக்கினாலும், அது சடுதியில் ஒழிக்கப்பட்டது. நீள்விழியாளால் நீதி மீட்கப்பட்டது.நெறி பிழைத்தது.மக்கள் மனம் மகிழ்ந்தனர்.அங்கயற்கண்ணி கைலாயத்தையும் கைப்பற்ற விழைந்தாள்.கன்னியின் படை கலகலப்புடன் கைலாயத்தை அடைந்தது.கைலாயநாதன் தன் கணங்களோடு கன்னியை எதிர்க்க வெஞ்சமர்க்களம் வந்து சேர்ந்தாள்.
அரையில் யானைத் தோல் அணிந்து, அரவம் ஊர்ந்திடும் உடம்புடன்,சடைமுடி தரித்து சமருக்கு வந்தவனைக் கண்டதும் அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது. தடாதகைப் பிராட்டிக்கு தான் யார் என்று அப்போது தான் புரிந்தது.தன் கைத்தலம் பற்றப் போகிறவன்
கைலாயநாதன் தான் என்பதை உணர்ந்த அவள் நாணம் மேலிட தரை பார்த்து தலை சரித்தாள்.
அங்கயற்கண் நாயகி மதுரை மீனாட்சி.# 2
''அங்கயற்கண்ணியே, ஆலவாய் வந்து உன்னை மணக்கிறேன்'' என்று ஈசன் இயம்பினான்.
போருக்குச்சென்ற கன்னி,பொங்கும் காதலுடன் நாடு திரும்பினாள்.
தன் கிளியைக் காதல் தூதாக அனுப்பினாள்.
மதுரையில் மண விழா.
காதல் கொண்ட கன்னியைக் கல்யாணத்துக்கு முன்பே பார்த்து இரசிக்க, கைலாயநாதன் கடம் பவனத்தில் ஒரு சுயம்புவாய் எழுந்தருளினான். பிரம்மதேவன் நடத்தி வைக்க, திருமால்,திருமகளின் கைத்தலத்தை கைலாயநாதனிடம் பற்றித் தர,யோகநாதன் மலைமகள் கழுத்தில் மங்கலநாணைப் பூட்டி போகநாதனாக மாறினான்.
அங்கயற்கண்ணியை மணந்தவுடன் ஈசனிடம் இருந்த ரிஷபக் கொடி,மீன் கொடியாக
மாறியது. பாம்புகள் பரிதிக் கதிராய் கதிராய் சுடர்விடும் அணிகலன்களாயின. கொன்றை மாலை வேப்பம் தோலுடை பீதாம்பரம் ஆனது.சடைச் சந்திரன் வைர முடியாக மாறியது.
கைலாயநாதன் சுந்தரபாண்டியனாக மாறினான்.அவனது கணங்கள் அத்தனையும்
மானுட வடிவம் கொண்டன. காதல் தூது சென்ற கிளி,தடாதகையின் தோளில்
தொற்றிக்கொண்டது. ஈசன்,சுந்தரபாண்டியனாகவும்,ஈஸ் வரி மீனாட்சியாகவும் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.மதுரைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாம் முத்லில் கிளி கொஞ்சும் மீனாட்சியைத் தரிசித்து விட்டே
சோமசுந்தரர் சந்நிதியை நாடுவர்.
மீனாட்சி சந்நிதிக்கு முன்பாக பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இந்தக் குளத்தில்
மலர்ந்த பொன் தாமரையைக் கொண்டு ஈசனை இந்திரன் வழிபட்டதால் குளத்துக்கு
பொற்றாமரைக் குளம் என்று பெயர்.இக்குளக்கரையில் ஒரு நாரைக்கு நற்கதி
அளித்தான் ஈசன்.அன்று முதல், பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் உட்பட எந்த
நீர்வாழ் உயிரனமும் கிடையாது என ஈசன் விதித்தான்.
8-4-2009 திருக்குட நன்னீராட்டு பெருவிழா கண்ட ஆலயம் கண்கொள்ள
அழகுடன் மிளிர்க்கிறது. சிற்பங்கள் சீர்செய்தும், வண்ணங்களின் பூச்சு மேலும்
மேலும் அழகையினை கூட்டுகிறது.
இந்தக் குளத்தில் தான் திருவள்ளுவரின் திருக்குறள்களை அங்கீகரித்து சங்கப்
பலகை மிதந்தது. பொற்றாமரைக் குளத்துக்கு ஆதி தீர்த்தம் எனவும், முக்தி தீர்த்தம்
என்றும், சிவகங்கை எனவும், உத்தம தீர்த்தம் என்றும் பல பெயர்கள் உண்டு.
அன்னையின் சந்நிதிக்கு வலப்புறத்தில் விநாயகரும்,இடது புறத்தில் முத்துக்குமார
சுவாமியும் கோயில் கொண்டுள்ளார்கள்.
பிள்ளைகளை வணங்கி விட்டு அன்னையின் முன் நின்று கண்மூடி,கை கூப்பி நின்று
அகிலாண்டேஸ்வரியை அகத்தில் வணங்கிக் கண் திறந்தால்
அட்டா.... என்னவொரு அற்புத தரிசனம்.
அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அவள் திருமேனியைப்
பிரமிப்பூட்டும் ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன.உயர்ந்த வலது கையில் பூச்செண்டின் மீது வீற்று அன்னையை அனவரதமும் கொஞ்சும் பச்சைக் கிளி. தாழ்ந்த இடது கை, வளைந்த இடுப்பை உரசித் தாண்டி அவள் திருப்பாதங்களில் பணியத் தூண்டும். அன்னை மீனாட்சி ஓர் அழகுப் பெட்டகம்.அவளுடைய வசீகரமான திருவிழிகள் தாய் மீனைப் போல குழந்தைகள் மீது எல்லையற்ற கருணையைப் பொழிகின்றன.அந்தக் கருணை முகத்தைக் கண்ணுற்றத்ம்,காலம் காலமாக சேர்ந்து வந்த கவலையெல்லாம் கரைந்தோடும். அன்னையின் சந்திதியிலிருந்து வடக்குப் பக்கம் சுவாமியின் சந்நிதிக்குப் போகும் வழியில் ஏழடி உயர முக்குறுணிப் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.
கம்பத்தடி மண்டபம் என அழைக்கப்படும் மண்டபத்தில் நந்தியும், கொடிக் கம்பமும் அழகுற அமைந்துள்ளன. இதற்கு எதிரே உள்ள சந்நிதியில் சொக்கலிங்கப் பெருமான் என்றும் சோமசுந்தரர் என்றும், அழைக்கப்படும் ஈசன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் ஈசனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் இந்த ஊரில்தான் அரங்கேறியுள்ளன. ஈசன் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் இந்திரனால் வழங்கப்பட்டது. எட்டு கல்யானைகளும்,முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்கும் இந்தக் கருவறை போல வேறு எந்தக் கோயிலின்தனிச்சிறப்பு. ஈசனின் பிரகாரத்தில் இடப்புறம் அமைந்திருக்கும் துர்க்கை காண்போரை மயக்கும் மோகனச் சிரிப்பைக் கொண்டவள், சக்தி வாய்ந்தவள். நடராஜரின் கூத்தில் கால் மாற்றி ஆடிய வெள்ளி அம்பலம் மதுரை மீனாட்சி கோயிலில் தான் உள்ளது.நடராஜருக்கு எதிர் நடனம் ஆடிய பத்ரகாளிக்கு ஒரு பிரம்மாண்டமான சிற்பம் கோயில் சுவாமி சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
அற்புதமான வேலைப்பாடுகள் நிரம்பிய அகோர வீரபத்திரர் சிற்பமும்,பத்ரகாளி சிற்பத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது.தவிர, அக்கினி வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் சிற்பங்களும் இரு வேறு தூண்களில் செதுக்கப்பட்டு காண்பவர் கண்களைக் கவர்கின்றன.
ஆயிரம் கால் மண்டபமும்,அதனுள் அமைந்திருக்கும்அருங்காட்சியகமும், சிற்ப வேலைப்- பாடுகளுக்கு மிகப் புகழ் பெற்றவை. பார்ப்பவர்க்கு பிரமிப்பு ஏற்படுத்தும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மதுரைக் கோயில்.பல்வேறு மண்டபங்களில் கற்சிற்பங்கள் அமைந்துள்ளதுன. ஒரு சில சிற்பங்கள் தவிர ஏனைய சிற்பங்கள் விஜயநகர் நாயக்கர் காலத்து சிற்பங்கள் கலைக்கு நயத்துடன் விளங்குகிறது.இவைகள் கி.பி. 16-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 நூற்றாண்டு
“அங்கயற்கண்ணி என ஒரு காதில் ஓதின்,
ஆயிரம் கால் மண்டபமும்,அதனுள் அமைந்திருக்கும்அருங்காட்சியகமும், சிற்ப வேலைப்- பாடுகளுக்கு மிகப் புகழ் பெற்றவை. பார்ப்பவர்க்கு பிரமிப்பு ஏற்படுத்தும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மதுரைக் கோயில்.பல்வேறு மண்டபங்களில் கற்சிற்பங்கள் அமைந்துள்ளதுன. ஒரு சில சிற்பங்கள் தவிர ஏனைய சிற்பங்கள் விஜயநகர் நாயக்கர் காலத்து சிற்பங்கள் கலைக்கு நயத்துடன் விளங்குகிறது.இவைகள் கி.பி. 16-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 நூற்றாண்டு
முடிய உள்ளவை என குறிப்பு காட்டுகிறது.
அட்டசக்தி மண்டபச் சிற்பங்கள், மீனாட்சி சுந்தரேசுவர் கோயில் வழிபாட்டு மரபில் அம்மன் சன்னதி வழியாகச் செல்வது மரபாகும். இங்கு சக்தியின் எட்டு வடிவங்களில் காணலாம். கெளமரி, ரெளத்திரி, வைஷ்ணவி, மாகலட்சுமி, யஞ்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி என இரு வரிசைகளிலும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறது. கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு வேறுபாடுகளை கொண்டு காண முடியும்.
முதலிப்பிள்ளை மண்டபத்தில் தாருகாவனத்து ரிஷிகளின் ஆவணத்தை சிவபெருமான் அழித்த கதை,பிச்சாடனர்,மோகினி, மனைவியர் ஆகியோர் சிவபெருமான் பிச்சையேற்றும் பெம்மானாக வருவதும், அவ்வழகில் மயங்கி ரிஷிகளின் மனைவியர்களை சிற்பங்கள் நேர்த்தியாக காட்டுகிறது.
சங்கிலி மண்டத்தில்(பொற்றாமரைக் குளத்தின் மேற்கே) பஞ்ச பாண்டவர்களை காண முடிகிறது. அர்சுனன் பாசுபத அஸ்திரத்திற்குச் சிவனை நோக்கித் தவமிருப்பதையும், மண்டபத்தின் கிழக்கே பொற்றாமரைக் குளத்தின் வடக்குப்பக்கம் இக்கோயில் உருவாகக் காரணமாக இருந்த தனஞ்சயன் எனும் வணிகன், குலசேகர பாண்டியனது சிற்ப சிலையும், திருவிளையாடல் புராணத்தின் அடிப்படை சிற்பங்களும் உள்ளது.
கம்பத்தடி மண்டபம். கொடிக் கம்பம் இருப்பதால் கம்பத்தடி மண்டபம் என அழைக்கப்படுகிறது. கி.பி. 1564 ஆம் ஆண்டு கிருஷ்ணப்ப நாய்க்கரால் கட்டப்பட்டுள்ளது. 1877 ஆம் ஆண்டு நகரத்தார் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் 25 வடிவங்களில் சிவபெருமானது வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
1. ஏகபாத மூர்த்தி,
2. இடபாரூடர்,
3. அர்த்தநாரீசுவரர்,
4. அரிஹரன்,
5. சக்கரதானர்,
6. ஜலந்திரவதை மூர்த்தி,
7. தட்சிணாமூர்த்தி,
8. கஜசம்கரமூர்த்தி,
9. சண்டேச அனுக்கிரக மூர்த்தி,
10. பிச்சாடனர்,
11. வீரபத்ர மூர்த்தி,
12. கிராதாச்சுன மூர்த்தி,
13. ரிஷிபாந்திக மூர்த்தி,
14. சோமாஸ்கந்த,
15. சுகாசனர்
16. கல்யாண சுந்தரசுவர்,
17. திருபுராந்தக மூர்த்தி,
18. காலசம்ஹார மூர்த்தி,
19. பாசுபத மூர்த்தி,
20. நடராசர்,
21. காமதகன மூர்த்தி,
22. சந்திரசேகர மூர்த்தி,
23. உமா மகேசுவரர்,
24. லிங்கோத்பவர்,
25. விநாயக, இராவண அனுக்கிரக மூர்த்தி.
இச் சிற்பங்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண சிற்பம் உலகப் புகழ் பெற்றது. கம்பத்தடி மண்டபத்தில் அக்னி, வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஊர்த்துவதாண்டவர், காளி சிற்பங்களும் உள்ளன.
ஆயிரங்கால் மண்டபம். கி.பி. 1570 ஆம் ஆண்டு முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவரது அமைச்சர் அரியநாத முதலியாரால் கட்டப்பட்டதாகும். தமிழகத்தில் சிலகோயில்களில் மட்டும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளன. அவற்றுள் புகழ்பெற்றதது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள ஆயிரங்கள் மண்டபமே. புதுமண்டபம் கி.பி. 1635 ஆம் ஆண்டு திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.. இம்மண்டபத்தில் திருவிளையாடற் புராணம், சிவபுராணம் தொடர்பான சிற்பங்கள் இருக்கின்றன். நான்கு பெரிய கோபுரங்களையும்,எட்டு சிறிய விமாங்களையும் கொண்டது.அன்னைக்கே திருமணம்
நடந்த தலம் என்பதால் திருமணத்துக்குத் காத்திருக்கும் கன்னிகளுக்கு மதுரை மீனாட்சியின் அருள் தப்பாமல் உண்டு. ஆலவாய் என்ற பெயரைக் கேட்டாலே முக்தி அடைய முடியும் என்ற சிறப்பு இந்த மதுரைக் கோயிலுக்கு கோயிலுக்கு மட்டுமே உண்டு.
துயர் கெடும்,பகை மாளும்,
தொலையாத செல்வம் உண்டாகும்.
சொர்க்கமும் எளிதாம் ''
-என திருவிளையாடற் புராணம் சொல்கிறது.
ஆலவாய் அழகியை அனுதினமும் தொழுவோம்... அருள் மழையில் நனைவோம்!
அங்கயற்கண்ணீயே சரணம், சரணம்
Madurai
Meenakshi Amman Temple
name
Madurai
Meenakshi Amman Temple
description
The Madurai Meenakshi Sundareswarar temple is
one of the greatest Siva temples. The presiding deity is Chokkanathar,
Sundareswarar and the Ambal Ankayarkanni, Meenakshi The sthala vriksham is
Kadambamaram and the Theertham Potramaraikulam Sambandar and Appar composed the
Pathigam. Legend has it that Siva is said to have been worshipped by Indra in
the Kadambavana forest and hence Sundareswarar's vimanam at this shetram is
known as Indra Vimanam. Legend has it that Meenakshi (Parvati) re-born as the
daughter of Malayadwaja Pandyan married Siva (born as Soundara Pandyan) here.
Together Siva (Soundara Pandyan) and Meenakshi are said to have ruled over
Madurai. There are several legends surrounding this temple. Legend has it, that
the divine nectar falling from Lord Siva's locks, gave the city its name
'Madhurapuri', now known as "Madurai". This temple is a treasure
house of architectural beauty built by the Nayak Rulers, and has several towers
and Mandapams. The four tall gopurams stand on the massive outer walls of the
temple, one on each side. Out of them the Southern Gopuram is the tallest.
Besides these, there are four smaller gopurams. The temple tank Potramaraikulam
is located inside the temple and is closely associated with the legendary Tamil
literary institution known as the Sangam. There are two specimens of ingenious
‘musical pillars’ in the Ayirankkal Mandapam. Each musical pillar has a central
column surrounded by groups of slender columns chiseled from the same stone.
Each of these thin pillars when struck produces different musical notes. During
the Chittirai Tiruvizha (Apr 15-May 15) the entire city takes on a festive look
when Meenakshi and Sundareswarar are taken in colorful processions and the
divine marriage and the coronation are enacted. The float festival here is also
of great importance.