http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Wednesday, March 15, 2017

கன்னியாகுமரி.









அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் மற்றும் கோயில் எழுந்து அருளிய வரலாறு:
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி

இந்த ஆலயம் சுமார் 3000 வருடம் பழமையான ஆலயம். இந்த ஆலயம் உலகில் உள்ள 108 சக்தி பிடத்தில் ஒன்று. இந்த ஆலயத்தை கட்டியவர் பரசுராமர்.இதுவே துர்க்கை அம்மனுக்கு எழுப்பபட்ட ஆலயம்.

பானாசுரன் என்னும் அரக்கன் பிரம்மனிடம் தனக்கு மரணம் நேரக்கூடாது, அப்படி நேர்ந்தால் அது கன்னி பெண் கையால் மட்டும் தான் நேர வேண்டும் என்று தவம் செய்தான். அவன் கேட்ட மாதிரியே அவன் ஆசை நிறைவேறியது. இதனால், ஆணவம் தலைக்கு ஏறிய பானாசுரன், இந்திரனை அவன் அரியாசனத்தில் இருந்து துரத்தினான். தேவர்களை கொடுமை செய்தான். இதனால், அனைவரும் சிவனையும், விஷ்ணுவையும் நாடினார்கள். அவன் வரம் வாங்கியுள்ளதால் அவனை அழிக்க முடியாது என்பதால் விஷ்னு சக்தியிடம் வேண்ட சொன்னார்.சக்தியிடம் அனைவரும் நடந்த அனைத்தையும் கூறினார்கள். இதனால் சக்தி கன்னி பகவதி பெண்னாக தோன்றினார். பகவதி மீது அன்பு வைத்த சிவன் பகவதியை மணக்க விருப்பம் தெரிவித்தார்.பகவதியும் மணக்க சரி என்று விருப்பம் தெரிவித்தனர். பகவதிக்கும், சிவனுக்கும் திருமணம் நடந்தால் பானாசுரனை அழிக்க முடியாது என்பதால் நாரதர் இந்த திருமணம் நடக்ககூடாது என்று முடிவு செய்தார். அதனால், நாரதர் முதலில் பகவதியை குழப்ப முடிவு செய்தார். நாரதர் பகவதியிடம் சென்று பானாசுரன் சிவனை விட பெரிய வலிமையானவன் என்று குழப்பினார். இதனால், சிவனின் வலிமையை அறிய உலகில் யாராலும் செய்ய முடியாத 3 நிபந்தனைகளை பகவதி தன்னை திருமணம் செய்ய நிறைவேற்ற வேண்டும் என்று சிவனிடம் கூறினார்.

1.கண் இல்லா தேங்காய்.
2.நரம்பு இல்லா வெற்றிலை.
3.அடி தண்டு இல்லா கரும்பு.

இதை எல்லாம் தன்னை திருமணம் செய்ய வரும் போது கொண்டு வரவேண்டும்.பின்பு காலை சேவல் கூவும் முன் வர வேண்டும் என்று பகவதி கூறினார்.
சிவன் அனைத்தையும் தன் வலிமையால் செய்தார்.திருமணத்திற்கு சிவன் சுசீந்திரத்தில் இருந்து கிளம்பினார். இதை கவனித்த நாரதர் 12.00 மணிக்கே சேவல் வடிவம் எடுத்து கூவி விட்டார். இதனால், காலம் கடந்து விட்டது என்பதால் சிவன் மறுபடியும் சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார். ஆனால் அங்கு பகவதி காத்து கொண்டு இருக்கிறார். திருமண சமையலுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் சமைக்காமல் இருக்கிறது. சிவன் வராததால், பகவதி கோபத்தில் எல்லா சமையல் பொருட்களையும் தூக்கி விசிவிட்டனர். கோபத்தில் தீயசக்தியை அழிக்க தவம் செய்தனர். பகவதி தவத்தில் இருந்த பகவதியை பார்த்த பானாசுரன் பகவதியை திருமணம் செய்ய வேண்டும் என்றான். இதற்கு பகவதி மறுப்பு தெரிவித்ததால், பானாசுரன் தன் வலிமையால் பகவதியை அடைந்து விடலாம் என்று நினைத்து பகவதியிடம் தன் வீரத்தை காட்டினான் பானாசுரன். பகவதி தன் சக்தியால் பானாசுரனை அழித்து விட்டாள். பின்பு அந்ந கடற்கரையிலேயே தெய்வமாக அனைவருக்கும் அருள் பாலிக்கிறார் பகவதி அம்மன். கன்னி+கழியாத+குமரி என்பதால் கன்னியாகுமரி என்று அந்த மாவட்டத்திற்கு பெயர் வந்தது.

ஸ்ரீ துர்க்கை என்ற பெயரில் எல்லாம் சாத்தியம்.

******************ஸ்ரீ துர்க்கை போற்றி******************

மந்திரம்:அம்மே நாராயணா, தேவி நாராயணா, லஷ்மி நாராயணா, பத்ரே நாராயணா.

பகவதி அம்மன் மூக்கில் ஓரு நாகரத்தின மூக்குத்தி உள்ளது. இந்த நாகரத்தினம் ராஜநாக பாம்பின் வயிற்றில் உருவாகுவது. அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதன் ஒளி கடல் வரைக்கும் விசும். ஒரு முறை கப்பல் காரன், கலங்கரை விளக்கம் என்று நினைத்து அந்த ஒளியை நோக்கி வந்து பாறையில் மோதிவிட்டான். அதனால் வருடத்திற்கு 5 முறை மட்டும் தான் அந்த கதவு திறக்கப்படும்.

தேர் திருவிழா :மே/ஜீன்.
நவராத்திரி திருவிழா:செப்டம்பர்/அக்டோபர்.

நடை திறப்பு:
காலை:4.30-11.30.
மாலை:4.00-8.30.

ஆலயத்தின் உள்ளே தொலைபேசி,புகைபட கருவி மற்ற அனுமதி கிடையாது.











🔥🔥🔥51 சக்தி பீடங்கள்🔥🔥🔥

சக்தி தரிசனம்- 02

#எவைசக்திபீடங்கள்?

தேவி பாகவதம் என்ற நூல், அம்பாளுக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் தந்திர சூடாமணி என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் என்று தெளிவாக இருக்கின்றன. இந்த நூலை பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற பதிவில் கூறியபடி அம்பாளின் 51 உடல் பாகங்கள் விழுந்த இடமே சக்தி பீடங்களாக உருவானதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த சக்தி பீடங்களையும், அவை அமைந்த இடங்களையும் வரிசையாகப் பார்க்கலாம். 51 சக்தி பீடங்களில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு நம் பெருமை கொள்ள வேண்டியது.

1. காமாட்சி-காஞ்சிபுரம்
(காமகோடி பீடம்), தமிழ்நாடு

2. மீனாட்சி-மதுரை
(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு

3. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.

4. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா

5. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்),
தமிழ்நாடு

6. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு

7. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா

8. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா

9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு

10. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு

11. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.

12. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு

13. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

14. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

15. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா

16. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு

17. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.

18. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா

19. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்

20. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு

21. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு

22. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா

23. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு

24. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா

25. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா

26. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு

27. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு

28. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு

29. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு

30. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்

31. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்

32. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்

33. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்

34. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்

35. ஸ்தாணுபிரியை-குருக்ஷத்ரம்-(உபதேசபீடம்) ஹரியானா

36. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்

37. மாணிக்காம்பாள் திராக்ஷ்ராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா

38. அம்பாஜி-துவாரகை- பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்

39. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு

40. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்

41. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்

42. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு

43. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்

44. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்

45. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.

46. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத

47. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்

48. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்

49. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்

50. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்

51. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா

இனிவரும் நாட்களில் இந்த 51 சக்தி பீடங்களை தரிசனம் செய்து அன்னை ஆதிபராசக்தியின் அருளை பெறுவோம் வாருங்கள்...

🔥சங்கடம் தீர்த்திடும் சதுர்முக தேவியே போற்றி போற்றி🌺🌺🌺

Tuesday, March 14, 2017

பழனி மலை முருகன் பற்றிய அதிசய தகவல்கள்.



பழனி மலை முருகன் பற்றிய அதிசய தகவல்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆவது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார்.

மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது இத்தலம் ‘பழனி’ என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை ‘ஞானப் பழம் நீ’ என அழைத்ததால், ‘பழம் நீ’ என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியதே என்பர்.

இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் ‘திரு ஆ இனன் குடி’ என்று பெயர் பெற்றது.

திரு – லட்சுமி

ஆ – காமதேனு

இனன் – சூரியன்

கு – பூமாதேவி

டி – அக்கினிதேவன்

இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு ‘திருவாவினன் குடி’ என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.

மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.

இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி – பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும் பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.

பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது.

அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய்,தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம் அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும் இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார் இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

போகர் இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
















*திருத்தணி முருகன் கோவில்*











*திருத்தணி முருகன் கோவில்*
🌠 முருகப்பெருமான் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணி திருத்தலமாகும்.
🌠 தெற்கில் காஞ்சிபுரம், மேற்கில் சோளிங்கபுரம், கிழக்கில் திருவாலங்காடு, வடக்கில் திருக்காளத்தி மற்றும் திருப்பதி ஆகிய திருத்தலங்கள் சு ழ நடுநாயகமாக அமைந்துள்ளது திருத்தணி.
🌠 சுமார் 4000 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு அபராஜிதவர்ம பல்லவன், பராந்தகச் சோழன், மதுரை கண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், விக்கிரம சோழன், வீரகம்பன உடையார், வீரபிரதாப சதாசிவதேவ ராயர், விஜயநகர மன்னர்கள் மற்றும் கார்வேட் ஜமீன்தார்கள் ஆகியோரால் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தல வரலாறு :
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன், முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்டு கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலையாகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.
கோயிலின் அமைப்பு :
🌠 திருத்தணி திருக்கோவில் சாளுக்கியர் காலக் கட்டிட பாணியிலானது. தற்போது 101 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
🌠 ஆலயத்தின் கிழக்கில் இருக்கும் இந்த ராஜ கோபுரம், சுமார் 25 கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தால்கூட தெரியும் அளவுக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
🌠 திருக்கோவில் நான்கு பிரகாரங்கள் கொண்டது. மலையின் மீது படிகள் ஏறிச் சென்றால் முதலில், தேரோடும் வீதியான நான்காம் பிரகாரத்தை அடையலாம். இங்கு வாகன மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன உள்ளன. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்துக்குச் செல்லும் நுழை வாயிலின் அருகே கற்பு ர அகண்டம் உள்ளது.
🌠 நான்காம் பிரகாரத்தின் கிழக்கு வாசல் வழியாக சில படிகள் ஏறி, மூன்றாம் பிரகாரத்தை அடையலாம். இங்கு கொடிமர விநாயகர், உமா மகேஸ்வரர், உச்சிப் பிள்ளையார் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன.
🌠 இங்கு மயிலுக்குப் பதிலாக ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்கிறது. இது மூலவர் சன்னிதியை நோக்கி அல்லது கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறது.
🌠 கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சன்னிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத் சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
🌠 திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.
முருகனின் சிறப்பு :
🌠 ஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து இருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம்.
🌠 முருகப் பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள்.
🌠 தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்...