http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Wednesday, February 23, 2011

மஹா சிவராத்திரி





One of the most religious Hindu festivals, Maha Shivaratri falls on the fourteenth day of the dark fortnight of Phalguna (February- March), and is dedicated to the worship of Lord Shiva, one of the principal Hindu deities. Maha Shivratri is the night when he is said to have performed the Tandava Nritya or the dance of primordial creation, preservation and destruction. The festival is observed for one day and one night only. Maha Shivratri is universally observed by all pious Hindus with fasting, singing of bhajans, recital of Sanskrit shlokas, offering of prayers, flowers, fruits and food that is  specially prepared in honor of the deity and his divine consort, goddess Parvati. In keeping with the mood for the occassion, here we present you with a fabulous section on Maha Shivratri that includes splendid e-cards, wallpapers, recipes, quiz, pictures to color as also well-researched articles on the history of Maha Shivratri, rituals associated with the festival and much much more. If you like our Maha Shivratri section and want to have your dear ones have a peek into it too, Spread the spirit of the occasion to all. Jai Shiv Shambhu!Please wait while images are being loaded.....by Wowmailz                  
                                                                                                                              Please wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by Wowmailz                  Please wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by WowmailzPlease wait while images are being loaded.....by Wowmailz







மஹா சிவராத்திரி


மஹா சிவராத்திரி - 02.03.2011 - புதன் கிழமை
சைவத்தின் பெருவிழாவாக, சிவ பெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.
சிவராத்திரியின் சிறப்புகள்:வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்) அஸ்திரத்தை பெற்றதும்,கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்ததும்,
பகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும்,
தன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்ததும்,
பார்வதி தேவி தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் கூறுகின்றது.
பூஜைகள்:சிவராத்திரியன்று சிவத் தலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
ஒரு வில்வ இலை கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது கோடிக்கணக்கான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
அன்று சாப்பிடாது விரதம் இருந்து கண் விழித்து சிவன் தோத்திரங்களை சொல்வது மிகவும் சிறந்தது.
தான தர்மங்கள் செய்வது, தெய்வத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, பல வகையான நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது போன்றவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்கள் சிவனை சிவன் ராத்திரியன்று வழிபடுவதால் ஏற்படும் புண்ணியத்திற்கு நிகராகாது என வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
சிவராத்திரி இருவகைப்படும். ஒன்று மாத சிவராத்திரி. மற்றது மகா சிவராத்திரியாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து (அனுஷ்டித்து) வருகின்றனர்.
மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி" ஆகும்.
வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
முதல் கால பூஜைஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாவது கால பூஜை
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாவது கால பூஜைஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதைலிங்கோத்பவ காலம் என்றும் 
இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜைஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும்சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.
விரத முறை :விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
புராண விளக்கம் 1 :ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதை அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றனர்.
புராண விளக்கம் 2 :மற்றொரு கல்பத்தின் முடிவில் இன்னொரு பிரளயம் வந்தது. பிரபஞ்சம் நீரில் மூழ்கியது. திருமால் வராக உருவெடுத்தார். அவ்வராகம் நீரில் புகுந்து பிரபஞ்சத்தையெடுத்து வெளிக்கொணர்ந்து நிறுத்தியது. திருமால் செருக்கோடு தம் இடம் சென்றார். அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தார். படைப்புத் தொழில் தொடங்கியது. அகந்தையால் பிரமன் தாமே கடவுள் என்றார். திருமால் தாமே கடவுள் என்றார். சர்ச்சை நீண்டது. அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓர் அக்கினிப்பிழம்பாய் அடிமுடி அயறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நின்றார் சிவபெருமான். பிரமன் அன்னமும், விஷ்ணு வராகமுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர். ஆதியும் அந்தமும் காணமுடியவில்லை. இருவரும் அகந்தை நீங்கி அப்பெருமானைத் துதித்தனர். அப்பெருமான் பிழம்பு வடிவான லிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார். அவ்வெளிப்பாட்டிற்கு லிங்கோத்பவரென்று பெயர். பிரம விஷ்ணுக்கள் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர்.
இச்சரித்திரத்தை,
'யத் பாதாம்போருஹத்வம்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநா ஸஹ
ஸ்துத்வா ஸ்துத்யம் மஹேசாந மவாங்மநஸகோசரம்
பக்த்யாநம்ர தநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத்விபு:"
(சிவபெருமான் முடியைத் தேடப்போன பிரம்மாவோடு கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையும் தேடப்படுகின்றன; வாக்கு மனசுக் கெட்டாத சிவபெருமானை துதித்துப் பக்தியினால் வணங்கினவராகிய விஷ்ணுக்குச் சிவபெருமான் அருள்பாலித்தார்) என வேத(சரப)மும் எடுத்துரைக்கிறது. இச்சம்பவமும் இரவில் நடந்தது. ஆகையால் அவ்விரவு சிவராத்திரி எனப்பட்டது.
'ச்யதி துக்காதிகமிதி சிவா' சிவ என்பதற்குத் துக்கங்களை அழிக்கின்றது என்று பொருள். 'ராதி சுகமிதி ராத்ரி' ராத்திரி என்பதற்குச் சுகத்தைச் செய்கின்றது என்று பொருள். ஆதலால் சிவராத்திரி என்பது துக்கங்களைப் போக்கிச் பக்தியைக் கொடுப்பது என்று பொருள்படும்.
திரயோதசி உமா ஸ்வரூபம். சதுர்த்தசி ஸ்வரூபம். அவ்விரண்டு திதியுங்கூடிய இரவு சிவலிங்க ஸ்வரூபம்.
புராண விளக்கம் 3:
ஒரு சமயம், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மேரு மலையையே மத்தாகக் கொண்டு ஒரு புறம் அசுரர்களும், மறு புறம் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்துதான், மஹா லக்ஷ்மியும், காமதேனு, குபேர சம்பத்துக்களும் கிடைத்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். இறுதியாக ஆலகால விஷம் தோன்றியது. அண்டசராசரங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது. அனைவருக்கும் அனுக்ரஹிக்கும் சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்துக்கொண்டார். விஷத்தை அருந்தினார். பயந்த பார்வதி சிவனின் தொண்டையோடு அந்த விஷத்தை நிறுத்தினார். விஷம் ஏறியவர்கள் உறங்கக் கூடாது என்பது வைத்ய விதி. அதற்கேற்ப அண்டசராசரங்கள் அனைத்தும் சிவபெருமானை இரவு முழுதும் சிவபெருமானைப் போற்றின. அந்த இரவு தான் சிவராத்திரி. சிவன் உலகைக் காத்த இரவு என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிவராத்திரி.
மற்றுமொரு புராண விளக்கம் :காட்டில் இரவில் மாட்டிக்கொண்ட ஒருவன் மிருகங்களுக்கு பயந்து, ஒரு மரத்தின் மேலேறி, பயத்தால் அம்மரத்தின் ஒவ்வொரு இலைகளையும் கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவனை சிவகணங்கள் வந்து வணங்கி வேண்டும் வரங்களை வழங்கின.
சிவகணங்கள் வந்த காரணமென்ன எனில், அவன் ஏறியது வில்வ மரம். வில்வ மரத்தின் கீழே சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கத்திற்குத் தான் வில்வ இலைகளை எறிந்திருக்கின்றான். சிவகணங்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்கின்றான் என எண்ணி அருள் பாலித்திருக்கின்றன.
அவன் இரவு முழுவதும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்திருக்கின்றான். அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் சில புராணங்கள் கூறும்.
எந்த ஒரு இறை சிந்தனையும் இல்லாமல், வெறும் வில்வ இலைகளை மட்டுமே அர்ச்சனை செய்ததாலேயே ஒருவனுக்கு சிவ அனுக்ரஹம் கிடைத்தது என்றால், சிவ சிந்தனையோடு, சிவனுக்கு உரிய பொருட்களை சிவலிங்கத்திற்கு பக்தி சிரத்தையோடு செய்தோமாகில் சிவ கடாட்சம் மிக நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
விரதமிருந்து பேறு பெற்றவர்கள் :சிவராத்திரி தலை சிறந்த சிவவிரதம்.
பிரமன் சிருஷ்டித் தொழிலையும்,
மஹாவிஷ்ணு காக்கும் தொழிலையும், லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும்,
இந்திரன் விண்ணுலக அதிபதி பட்டத்தையும்,
குபேரன் அளவற்ற நிதியையும்,
குமரன் அழகான மேனியையும்,
கன்மாடபாதனென்னும் வேந்தன் பிரமகத்தி நீக்கத்தையும் பெற்றனர்.
*****************************************************************
கலியுகம் நாம ஸ்மரணைக்கு உகந்த யுகம். இறைவனின் நாமங்களைச் சொன்னாலே நற்கதி கிடைக்கக் கூடிய காலம். அந்த சிவ நாம ஸ்மரணையின் நற்பலன்களை மிக அழகாக பாடலாக இயற்றி, ராகம் அமைத்து, தேன்குரலில் பாடியவர்நெய்வேலி ஸ்ரீமதி பிருந்தா ஜெயந்தி (94436 66819) அவர்கள். அந்தப் பாடலை இங்கே ஆடியோவாகக் கேட்கலாம்.


I am forwarding wonderful photos on  12 Jyothir Lingas.
This was sent by a friend of mine yesterday.

This arrived in my box right at the eve of Mahasivaratri and hence thought it fit to share with you all on this most auspicious day.
Pl.clik &view
https://mail.google.com/mail/?ui=2&ik=f708b47655&view=att&th=12e7c51438133edf&at

Monday, February 21, 2011

மாமலையாவது நீர்மலையே




இமயமலைக்கருகில் உள்ள திவ்யதேசங்களில் ஒன்று "வதரி' எனப்படும் பத்ரி! நேபாள நாட்டின் அருகே உள்ளது சாளக்ராம திவ்ய தேசம்! ஆந்திரத்தில் இருக்கின்றது திருமலை! வடார்க்காட்டில் உள்ள சோளசிம்ஹபுரத்தை திருமங்கையாழ்வார் "கடிகைத் தடங்குன்று' என்கிறார். இவையெல்லாமே நெடிதுயர்ந்த மலைச் சாரல்களில் உள்ள திவ்ய தேசங்கள். ஆனால், இவற்றோடு ஒப்பிடும்போது, அளவில் மிகச் சிறிய மலையை, "மாமலையாவது நீர் மலையே' என்கிறார் அதே ஆழ்வார்.
ஒரு முறை திருமங்கையாழ்வார், தொண்டை நாட்டு திருத்தலங்களில் ஒன்றான திருநீர்மலை வந்திருந்தார். அப்போது மலையைச் சுற்றி நீர் நிரம்பியிருந்தது. அதனால் அவர் பெருமாளை தரிசிக்க முடியவில்லை. "எம்பெருமானை சேவிக்காமல் போவதில்லை' என்ற உறுதியுடன் இருந்தார். ஆறு மாத காலம் நீர் வடியவில்லை. பின், நீர் வடிந்தவுடன், திருமாலைப் போற்றிப் பாடிவிட்டு, மற்ற திவ்யதேசங்களை சென்றடைந்தார். இன்றளவும், ஆழ்வார் தங்கிய மலை, "ஆழ்வார் மலை' என்று அழைக்கப்படுகிறது.
நீர்மலை என்பது வடமொழியில் "தோயாத்ரி' ஆகும். "நீரினால் சூழப்பட்டது' என்பது இதன் பொருள். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமாலின் திருப்பெயர், "நீர்வண்ணன்' ஆகும். பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம், "தோயாத்ரி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று, "திருநீர்மலை' ஆகும். இத்தலம், சென்னை பல்லாவரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ளது. பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். பூதத்தாழ்வார் "அணிநீர் மலை' என்றிதனைப் புகழ்கின்றார்.
இங்கு நீர் வண்ணப் பெருமாள் நின்ற நிலையிலும், நரசிம்மர் அமர்ந்த நிலையிலும், ரங்கநாதர் பள்ளி கொண்டவாறும் சேவை சாதிக்கின்றனர்.
என்றாலும் இக்கோயில், "நீர்வண்ணப் பெருமாள் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. ஆண்டாள், ராமன், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரின் சந்நிதிகள் மலையடிவாரத்தில் உள்ளன. மலையில், ரங்கநாதர், நரசிம்மர், திருவிக்ரமன் இருப்பினும், ரங்கநாதரே பிரதான மூர்த்தியாக உள்ளார்.
திருவிக்ரமன் எனப்படும் உலகளந்த பெருமாள், தோயகிரி விமானத்தின் கீழும், சாந்த நரசிம்மர், சாந்த விமானத்தின் கீழும் அமர்ந்த நிலையில் உள்ளனர். தாயார் திருநாமம் ரங்கநாயகி.
ஒரு முறை வால்மீகி முனிவர் ரங்கநாதரை தரிசிப்பதற்கு முன் திருக்குளத்தில் இறங்கி கால் கழுவினார்; அப்போது ஸ்ரீராமனை மனதால் நினைத்தார். உடனே ரங்கநாதர் ராமனாகவும், ஆதிசேஷன்- இலக்குவனாகவும் தரிசனம் அளித்தனர். இவ்வாறே திருமாலின் ஆயுதங்களும், ஏனைய பரிவாரங்களும் பரத, சத்ருக்ந, சுக்ரீவ, ஆஞ்சநேயராக காட்சியளித்தனர்.
திருப்பாற்கடலுடன் சம்பந்தம் உள்ளதால் இங்குள்ள தீர்த்தம் "க்ஷீர புஷ்கரிணி' என்றும், நரசிம்மரைக் கண்டவுடன் பிரகலாதன் ஆனந்தக் கண்ணீருடன் சேவித்ததால் "காருண்ய புஷ்கரிணி' என்றும், கங்கை இங்கு கலப்பதால் "சித்த தீர்த்தம்' என்றும், பரமபதத்தினின்று நித்ய சூரிகள் எனப்படும் தேவர்கள் விரஜா நதி தீர்த்தத்தை தங்கக் குடத்தில் கொண்டுவந்து இங்கு சேர்த்தபடியால், "சுவர்ண புஷ்கரிணி' எனவும் பெயர்கள் பெற்றது.
பல மன்னர்கள் இந்தத் தலத்திற்கு மானியங்கள் அளித்துள்ளனர். இதற்கான சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. மாமலையை தரிசிப்போம்! மங்கலங்கள் அனைத்தும் பெறுவோம்!







Location :  Thiruneermalai (Pallavaram) near Chennai
Perumaal :  Neervannan, Shanta Narasimhan, Ranganathar, Trivikrama,
Thaayaar :  Animamalarmangai, Ranganayaki
Theertham : Manikarnika Tataakam
Paasuram  : ThirumangaiAzhwar
Vimaanam : Toyagiri Vimanam
Travel Base : Chennai

Description : This Dhivya Desam is located in the outskirts of
Chennai, near Pallavaram. It is a complex of two temples, one on top
of a small hill reached through a flight of stairs, with three
shrines, and one at the bottom of a hill, with one shrine. The Dhivya
Desam in the city of Chennai is Thiruvallikkeni. Located near
Meenambakkam nearby is Tirisoolam, with an ancient temple (from the
Chozha period)   dedicated to Shiva.
The name Neer malai arises from the legend that when ThirumangaiAzhwar
visited this shrine, a moat of water surrounded the hill, and that he
had to wait in the village down below for a six month period until the
water receded.



Legend has it that Valmiki worshipped the three forms of Perumaal on

the hill, and upon meditating upon Rama after climbing down the hill,

Ranganathar manifested himself as Rama, Lakshmi as Janaki, Adiseshan
as Lakshmanan, the conch and the discus as Shatrugna and Bhararata,
Viswaksena as Sugreeva, Garuda as Hanuman, and appeared before him.

Deities: The temple at the bottom of the hill enshrines Neervannan or
Neelamukilvannan in a standing posture facing south, while Thaayaar
who is in her own sanctum, is Animaamalar Mangai. There is also a
sanctum for Chakravarti Thirumagan in this temple. This temple has a
single prakaram and a three tiered rajagopuram.

The hill temple accessed via a flight of 200 steps has three sancta.
The first of the Moolavar images is that of Shanta Narasimhan, in a
seated posture facing east. The second is that of Ranganathar, in a
reclining position, facing south. Thaayaar here is Ranganayaki facing
east, in her own sanctum. The third sanctum is that of Trivikraman
(Nadandan) in a standing posture facing east. (Thus in terms of
iconography all three positions described by 'irundhaan', 'ninraan',
'kidandhaan' are seen here in the hill temple).The  Dhivya Desams
enshrining Trivikrama are Thiru Oorakam (Kanchipuram) , Thirukkovilur,
Kaazhicheeraamavinnagaram and  Thiruneermalai.

Festivals: Two worship services are carried out each day here. Annual
festivals are held in Panguni and in Chittirai with emphasis on
Panguni Utthiram and the tamil new year.




images.jpg
images (1).jpg
images (2).jpg

images (3).jpg

images (4).jpg

images (5).jpg

images (6).jpg

images (7).jpg

images (8).jpg

images (9).jpg

images (10).jpg

images (11).jpg

images (12).jpg

images (13).jpg

images (14).jpg

images (15).jpg
P1030427.JPG

P1030428.JPG

P1030429.JPG

P1030431.JPG

P1030437.JPG

P1030441.JPG

P1030442.JPG

 திருமங்கை ஆழ்வார் வழிப்பறி செய்து அன்னதானம் செய்து வந்தார். அதுவும் புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகளைக் கூட ஒன்று விடாமல் பிடுங்கிக்கொள்வார்.   இங்கே திருமங்கை ஆழ்வாரின் சரித்திரம் முக்கியமா என்று தெரியவில்லை என்றாலும் அண்ணன் கோயில், அதைச் சுற்றிய பதின்மூன்று திருப்பதிகளிலும் திருமங்கை ஆழ்வாரின் இந்த வழிப்பறி நடந்த க்ஷேத்திரம் என்பதாலும் இதற்கருகே இருந்த திருவாலி, திருநகரியில் முக்கிய நிகழ்ச்சியான பெருமாளும், தாயாருமே புதுமணத் தம்பதிகளாய் வந்து கொண்டிருந்தபோது, திருமங்கை ஆழ்வாருக்கு வந்திருப்பது எவர் என்பது தெரியாமல் அவர்களையும் வழிப்பறி செய்தார்.  


அப்போது மஹாவிஷ்ணுவின் காலில் இருந்த மெட்டிமட்டும் கழற்ற முடியாமல் போக  அவர் காலில் இருந்த மெட்டியைக் கழற்றுவதற்காகத் திருமங்கை ஆழ்வார் பல்லால் கடித்து எடுப்பார்.  தன் திருவடிகளில் மறைமுகமாய்ச் சரணம் அடைந்த திருமங்கை ஆழ்வாருக்கு அப்போதுதான் எட்டெழுத்து மந்திர உபதேசம் கிடைக்கும். இந்த நிகழ்வு இன்றும் இந்தத் திருப்பதிகளில் மாபெரும் உற்சவமாக நடைபெறுகிறது.   பெருமாளின் குதிரைவாகனம் திருமங்கை ஆழ்வாரின் குதிரை வாகனத்தைக் கண்டு பயந்தாற்போல் ஓடுவதும், ஆழ்வார் துரத்தும் காட்சியும் காணக்கிடைக்காத அற்புதம்.  இது குறித்து வேளுக்குடியின் சொற்பொழிவு கலந்த வர்ணனையோடு கேட்டால் இன்னும் அருமை. ஆழ்வார்களில் மனைவியோடு காட்சி அளிக்கும் ஒரே ஆழ்வார் 







நின்றான், இருந்தான், கிடந்தான் என்று ஆழ்வார்கள் பாடிய புண்ணிய விஷ்ணு கோவில்கள் காஞ்சியில் பல உண்டு.


இந்த புண்ணிய கோவில்களின் வரலாற்று சிறப்பை மிகவும் அழகாகவும்,விறுவிறுப்பாகவும் முனைவர் இரா. நாகசுவாமி Vishnu Temples of Kanchi என்ற தலைப்பில் புத்தகமாக படைத்திருக்கிறார்.

ஆர்வம் உள்ளர்வர்கள் இங்கே காணவும்!

http://www.dkprintworld.com/product-detail.php?pid=1280857016