http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Tuesday, September 28, 2021

சிவபெருமான் பற்றிய 182 தகவல்கள்

சிவபெருமான் பற்றிய 182 தகவல்கள் 1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை..... திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.... ஐப்பசி பவுர்ணமி 3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்..... தட்சிணாமூர்த்தி 4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்) 5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்..... திருக்கடையூர் 6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்...... பட்டீஸ்வரம் 7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்......... திருமூலர் 8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்....... திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்) 9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது........... துலாஸ்நானம் 10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது......... கடைமுகஸ்நானம் 11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்..... கோச்செங்கட்சோழன். 12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்.... நடராஜர்(கூத்து என்றால் நடனம்) 13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்... சிதம்பரம் 14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்... காசி 15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்... திருவண்ணாமலை 16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் 17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்... மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது) 18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்... சின்முத்திரை 19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்... சுந்தரர் 20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்... ஸ்ரீசைலம்(ஆந்திரா).. 21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்... ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில் 22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.... திருவண்ணாமலை 23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்.... திருமங்கையாழ்வார் 24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்.... பரணிதீபம் (அணையா தீபம்) 25. அருணாசலம் என்பதன் பொருள்... அருணம்+ அசலம்- சிவந்த மலை 26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம் 27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்... பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் 28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு... 1997, டிசம்பர் 12 29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்... திருவண்ணாமலை (கிளி கோபுரம்) 30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன் 31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்..... 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை) 32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்.... அனுமன் 33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகம் 34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்.... அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்) 36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108 37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்... காரைக்காலம்மையார் 38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்...... அப்பர்(திருநாவுக்கரசர்) 39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்.. ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்) முயலகன் 40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்.... குற்றாலம் 41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்... சங்கார தாண்டவம் 42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? வெள்ளியம்பலம்(மதுரை) 43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்... பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்) 44. நடராஜருக்குரிய விரத நாட்கள்.... திருவாதிரை, கார்த்திகை சோமவாரம் 45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்.... களி. 46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்... தாயுமானசுவாமி 47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்.... காளஹஸ்தி 48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்... பிருங்கி 49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும் பத்தாம் திருமுறை 50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்... திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.. 51.விபூதி என்பதன் நேரடியான பொருள்... மேலான செல்வம் 52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்... கஞ்சனூர் 53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? 12 54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்.... சுந்தரானந்தர் 55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்.. . ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்) 56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி.... திலகவதி 57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்... சேரமான் பெருமாள் நாயனார் 58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்... வள்ளலார் 59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை...... மங்கையர்க்கரசியார் 60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்தனபாண்டியன் 61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்... மகேந்திரபல்லவன் 62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ... தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்) 63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? எட்டு 64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? மாசி தேய்பிறை சதுர்த்தசி 65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? 4 கால அபிஷேகம் 66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்..... நமசிவாய 67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? சிவாயநம 68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை... திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம) 69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? அருவுருவம் 70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்.... ராமேஸ்வரம் 71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்... தட்சிணாமூர்த்தி 72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? 12 73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்... குற்றாலம் குற்றாலநாதர் கோயில் 74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்... வில்வமரம் 75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி... மானசரோவர் 76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 81 77.பதிகம் என்பதன் பொருள்... பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு 78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்... சிவஞானபோதம் 79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை.... டமருகம் அல்லது துடி 80.அனுபூதி என்பதன் பொருள்.... இறைவனுடன் இரண்டறக் கலத்தல் 81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை..... மதுரை மீனாட்சி 82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்..... மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை 83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்.... தடாதகைப் பிராட்டி 84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது. நான்மாடக்கூடல், ஆலவாய் 85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்... கடம்ப மரம் 86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம். கடம்பவனக் குயில் 87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்.... திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் 88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்... குமரகுருபரர் 89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்.... மகாகவி காளிதாசர் 90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்... சித்ராபவுர்ணமி.. 91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்... ரோஸ் பீட்டர் 92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? ஜுரகேஸ்வரர் 93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்? மாணிக்கவாசகர் 94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்... இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்) 95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்.... சூலைநோய்(வயிற்றுவலி) 96.அம்பிகைக்கு உரிய விரதம்.... சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை) 97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்.... தோணியப்பர்(சீர்காழி) 98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்... திருநாவுக்கரசர் 99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்...... சுந்தரர் 100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்... சேக்கிழார் 101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்... சேந்தனார் 102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்.. சண்ட தாண்டவம் 103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்... குருந்த மரம்(ஆவுடையார்கோவில்) 104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்... திருவானைக்காவல் 105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்.... சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் 106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்... திருமூலர் 107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்.... காஞ்சிபுரம், திருவாரூர் 108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர். சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'. 109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்... பூசலார் நாயனார் 110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்.... தி ருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி) 111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் 112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்... பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்) 113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்.... அகத்தியர் 114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்.... தட்சிணாமூர்த்தி 115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்... திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் 116. தஞ்சாவூரில் உள்ள மூலவர் பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார் 117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.... சேந்தனார் 118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்... திருமூலர் 119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்.... திருஞானசம்பந்தர் 120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்... திருநாவுக்கரசர்.. 121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்.... சுந்தரர் 122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்... மாணிக்கவாசகர் 123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்.... திருமூலர் 124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்.... அபிராமி பட்டர் 125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்... குலசேகராழ்வார் 126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்.... இடைக்காட்டுச்சித்தர் 127. கோயில் என்பதன் பொருள்.... கடவுளின் வீடு, அரண்மனை 128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்.... சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் 129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்? முன்வினைப்பாவம் 130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்? சிவபெருமான் 131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்... சாமவேதம் 132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்... ஆனாய நாயனார் 133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்? பாணபத்திரர் 133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்... திருவையாறு 134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்... ராஜராஜசோழன் 135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்.... சோமாஸ்கந்தர் 136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்... விநாயகர் அகவல். 137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்.... மூர்த்திநாயனார் 138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்..... காளஹஸ்தி 139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்... திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது) 140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்... மதுரை சொக்கநாதர் 141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்... திருச்சி தாயுமானவர் 142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்... திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி) 143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்... திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) 144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்? காளஹஸ்தி 145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்... திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில் 146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்... திருவண்ணாமலை 147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்... திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்) 148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்..... திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்) 149. சிவபெருமானின் வாகனம் ரிஷபம்(காளை) 150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்.... சந்தியா தாண்டவம்.. . 151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்... கேதார்நாத் 152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்? மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்) 153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்.... திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர் 154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது.... பிட்சாடனர் 155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்.... திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) 156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்...... நமிநந்தியடிகள்( திருவாரூர்) 157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்.... திருவானைக்காவல் 158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்..... கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்) 159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்? காரைக்காலம்மையார் 160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்.... திருநாவுக்கரசர் 161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்... திருக்கருக்காவூர் 162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்.... திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் 163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள ்... ருத்ராட்சம் 164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்.... சிவன் 165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர். அனங்கன்(அங்கம் இல்லாதவன்) 166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்.... ருத்ரபசுபதியார் 167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்... ருத்ரபசுபதியார் 168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது? சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்) 169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை..... 14 170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது? கேதார்நாத் 171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்..... பதஞ்சலி முனிவர். 172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்..... வியாக்ரபாதர், பதஞ்சலி 173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்......... சிவபெருமான் 174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர் குஞ்சிதபாதம் 175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்...... ரத்தினசபாபதி 176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்.... சித்தாந்த அட்டகம் 177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்..... கோமுகி 178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்? ஆறுகாலம் 179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்....... விரைந்து அருள்புரிபவர் 180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்..... லிங்கோத்பவர் 181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை? 64 182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்.... சோமாஸ்கந்தர்

Monday, September 27, 2021

ஆன்மீககுறிப்புகள்.

🌼ஆன்மீக குறிப்புகள்.🌼 🌟கடவுளின் அவதாரங்கள் ஒரு பார்வை. 1. *முருகன் - வைகாசி விசாகம்* 2. *ஐயப்பன் - பங்குனி உத்திரம்* 3. *ராமர் - புனர்பூசம்* 4. *கிருஷ்ணன் - ரோகிணி* 5. *ஆண்டாள் - ஆடிப்பூரம்* 6. *அம்பிகை - ஆடிப்பூரம்* 7. *சிவன் - திருவாதிரை* 8. *விநாயகர் - ஆவணி விசாகம்* 9. *பார்வதி - ஆடிப்பூரம்* 10. *அனுமன் - மார்கழி அமாவாசை* 11. *நந்தி - பங்குனி திருவாதிரை* 12. *திருமால் - திருவோணம்* 13. *பரதன் - பூசம்* 14. *லக்குமணன் - ஆயில்யம்* 15. *சத்ருகன் - மகம்* 16. *நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் - பிரதோச நேரம்* 17. *வீரபத்திரர் - மாசி மாதம் பூச நட்சத்திரம்* 18. *வாமனர் - ஆவணி திருவோணம்* 19. *கருடன் - ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்* 🌟33 கோடி தேவர்கள் யார் ? 1. ஆதித்தர் - 12 கோடி பேர் 2. உருத்திரர் - 11 கோடி பேர் 3.அஸ்வினி - 2 கோடி பேர் 4. பசுக்கள் - 8 கோடி பேர் 🌟பூஜை என்றால் என்ன? ஆத்ம சாதகன் அடைந்துவரும் மனபரிபாகத்தின் புறச்செயல் ஆகும் எல்லா கிரியங்களை நிறைவுபடுத்துவது ஆகும் ஆன்ம ஞானத்தை உண்டு பண்ணுவது ஆகும் இது பஞ்சபூதவகையை சேர்ந்தது ஆகும். 🌟ஆறு கால பூஜை . 1. உஷத்காலம் - காலை 6 மணி 2. காலசந்தி - காலை 8 மணி 3. உச்சி காலம் -பகல் 12 மணி 4. பிரதோசம் - மாலை 6 மணி 5. சாயரட்சை - இரவு 8 மணி 6. அர்த்தசாமம் - நடுஜாமம் 10.30 to 11.30 வரை. 🌟தீப ஆராதனை ( கிரியை) 1. கற்பூரம் - இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, சிவத்திலே ஜீவன் கரைந்து இரண்டற்ற தன்மை உண்டாக்குவது ஆகும் அத்தகைய நிலையை நாம் நமக்குள் அகக்கண்ணால் அடைய வேண்டி கற்பூர ஒளியை கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும் நமக்கு அஞ்ஞானத்தை ( அறியாமையை, இருளை) போக்கி மெய்ஞானத்தை ( ஞானஅறிவை, ஒளியை) அருளுவது ஆகும். 2. தேங்காய் - ஆன்மாவின் ( உயிரின் ) மும்மலத்தை ( ஆணவம், கன்மம், மாயை, ) நீக்கி பேரின்பம் பெறவேண்டும் என உணர்த்துதல் ஆகும் மேல்மட்டை - மாயா மலம், உரித்தெடுக்கும் நார் - கன்ம மலம், உள்ளே ஓடு - ஆணவ மலம், வெள்ளைப்பருப்பு - பேரின்பம் ( வீடுபேறு, முக்திபேறு ) ஆன்மா நீர் - ஆண்டவன் திருவருள் ஆகும். பழம் - சாதகனின்( அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டு மெய்ஞானத்தை அடைந்தவன்) நல்வினை பலன்களை குறிக்கும். விபூதி ( திருநீறு) - பசு சாணத்தை சாம்பலாக்கி செய்யப்படுவது ஆகும் உடல் சாம்பல் ( அ) மண் ஆகலாம் என்ற தத்துவத்தை குறிப்பது ஆகும் திருநீறு உடலில் உள்ள அசுத்தம் அகற்றி நோய் கிருமிகளை போக்கி பிணி அகற்றும் மருந்து ஆகும் பதி,பசு,பாசம், என்ற மூன்றாக கோடுகளை படித்த வண்ணம் சைவமும், நின்ற வண்ணம் வைணவமும் இடும் உடம்பில் திருநீறு இடும் இடங்கள் 16 ஆகும் திருநீறை பேணி அணிபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் மேலும் எல்லா நலன்களையும் தர வல்லது திருநீறு ஆகும். குங்குமம் - தேவியின் அருளையும், நிறத்தையும் குறிக்கும் நெற்றி புருவத்தின் மத்தியில் வைப்பார்கள் குங்குமம் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி இரத்தக்கொதிப்பு, இரத்த அழுத்தம் குறைவு, நினைவாற்றல் அதிகரிக்கும், வெப்பத்தைக் குறைக்கும் தன்மை குங்குமத்திற்கு உள்ளது. 🌟கோவிலில் வெள்ளை, சிவப்பு, கோடு இருப்பது எதற்கு?* வெள்ளைக்கோடு ( சுக்கிலம்) சிவமயம், சிவப்புகோடு ( சுரோணிதம்) சக்தியை குறிப்பது இரண்டும் சேர்ந்து உயிரம்சம் இரண்டும் சேர்வதால் தான் உடலும் அதனை தாங்கி இயங்கும் உயிரும் உண்டாகிறது ஆகும். 🌟திருக்கோயில் செல்வது யான், எனது, என்ற செருக்கு போவதற்காகத்தான். மேலும் வாழும்தன்மை பெறுவதற்காகத்தான் இந்த கோவில் வழிபாடுகள் எல்லாம் நம்மை செம்மையாக்கி நல் வழி படுத்துவது ஆகும்.🙏

Wednesday, September 22, 2021

இந்து மதம் குறித்த 6 சுவாரஸ்யமான உண்மைகள்.....

s இந்து மதம் குறித்த 6 சுவாரஸ்யமான உண்மைகள்..... இந்த மதமானது இதன் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்காக பாராட்டப்படும் ஒரு மதம் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, இந்து மதத்தின் நம்பிக்கை முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இதன் பண்புகள் மற்றும் கோட்பாடுகளால், இன்னும் சமுதாயத்தில் பெரிய இடத்தைப் பிடித்து வருகிறது. அதே நேரம் உலகம் எப்போதும் கண்டுகொள்ளும் மற்றும் மனதை ஆட்கொள்ளத்தக்க ஒரு மதம் இந்து மதம். இந்து மதம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை பற்றிப் பார்ப்போம். கலை நிபுணத்துவம், இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை- பண்டைய அரசாட்சி கோயில்கள், அரண்மனைகள் என நம்மை வளப்படுத்தியுள்ள பல இணையற்ற அம்சங்கள் இந்து மதத்தின் நம்பகமான சான்றுகள் ஆகும். இவ்வாறான பல அம்சங்களைப் பற்றி பேசுவதற்கு, இந்து மதத்தின் சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி பார்ப்போம். இவைகள் இந்து மதத்தின் சிறந்த போதனைகளாகவும் உள்ளன. இதோ இந்து மதத்தின் சுவாரஸ்யமான உண்மை போதனைகளைப் படித்து அறிந்து கொள்ளுங்கள். 1.வாழ்வின் குறிக்கோள் மனித வாழ்வின் நோக்கம் பற்றி இந்து மதம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. இந்து மதத்தின் படி, மனித வாழ்வின் முதன்மையான நோக்கம் அக-உணர்வு. அதாவது மனிதன் தன்னை தானே அறிந்து கொள்ளுதல் ஆகும். 2.அதிகளவில் விவாதிக்கப்படும் இந்துமத தலைப்புகள் இந்து மதத்தின் நம்பிக்கைகளில் ஆழமானதாக, தர்மம், கர்மம் மற்றும் மறுபிறவி ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. இவைகள் தான் இந்து மதத்தின் மிகவும் ஆழமான மற்றும் கூர்மையான இன்றியமையாத கோட்பாடுகள் ஆகும். 3.ஆன்மா இந்து மதம் ஆன்ம கோட்பாடுகள் பற்றி விவாதிக்கிறது. இந்து மதக் கோட்பாட்டின் படி, கிரகத்தில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா உள்ளது. இது தான் உடல்களுக்கு சிறந்த திறன்களைக் கொடுக்கும் மிக உயர்ந்த ஆற்றலாக இருக்கிறது. 4.பெண்களுக்கு மரியாதை இந்து மதத்தின் நம்பிக்கையானது பெண்களுக்கு அதிகளவில் மரியாதை செலுத்தும் ஒரு அடையாளமாக உள்ளது. இந்த உண்மையை உறுதிப்படுத்துவதற்காக இந்து மதத்தில் ஆண் மற்றும் பெண் கடவுள்கள் உள்ளனர். 5.கும்பமேளா கும்பமேளா பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில் தான் உலகில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுகின்றனர். 6.ஓம் ஓம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். இது தான் பண்ணிசைப் பாடும் போது உச்ச உணர்வை வெளிப்படுத்துகிறது. ஓம் என்ற முழக்கம் மிகவும் ஆன்மீகமான மறை உண்மையாகும் மற்றும் சுற்றுப்புறத்தில் இது தாக்க அலைகளைக் கொண்டது.

Sunday, September 19, 2021

ஆன்மீகதகவல்கள்

ஆன்மீகதகவல்கள் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..? இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!! சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான். (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ). (2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. ((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே கூறிவிட்டது......

Friday, September 10, 2021

பத்ரிநாத்

திருவதரியாச்சரமம் (பத்ரிநாத்) திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் வடநாட்டுப் பதிகளில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிக்குன்றுகட்கு மத்தியில் பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். வரலாறு எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடமாகவும், பரமபதத்தைத் தரத்தக்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இத்தலம் பற்றி தனி நூலொன்றே யாக்கும் அளவிற்கு வடநாட்டுப் புராணங்களும், வடநாட்டு நூல்கள் கூறுகின்றன. இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை நாராயணன் என்ற திருநாமத்துடனே வந்து உலகத்திற்கு உகந்தருளின இடம் இந்த தலமாகும். திருமந்திரம் பகவான் மூலமாகவே வெளியான இடம். எம்பெருமானைச் சரண்புகுந்து மோட்சம் புகும் பக்தர்கட்கு மிக எளிய வழியான திருமந்திர உபதேசத்தை போதித்துத் தன்னை காட்டிக் கொடுத்த தலம். மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்திரகாச்ரமம் எனப் பெயர் பெறறது. உபதேசம் செய்வதற்கு ஆஸ்ரமம் அவசியமன்றோ. எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக தேர்ந்தெடுத்ததால் பத்திரகாஸ்ரமம் ஆனதாகக் கூறுவர். இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. இதற்கு எதிர்புறம் அமைந்துள்ள நீலகண்ட பர்வதம் காண்பதற்குப் பேரெழில் பொலிந்ததாகும். மூலவர் - பத்ரி நாராயணன், சங்கு சக்கரத்துடன் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். தாயார் - அரவிந்த வல்லி தீர்த்தம் - தப்த குண்டம் ஸ்தல விருட்சம் - பத்ரி, இலந்தை மரம் விமானம் - தப்த காஞ்ச விமானம் சிறப்புக்கள் 1. எம்பெருமான் மலைமேல் எழுந்தருளியுள்ளான். கடல் நடுவே எழுந்தருளியுள்ளான். பரம பதத்தில் எழுந்தருளியுள்ளான். அந்தர்யாமியாக பக்தர்களின் உள்ளத்தில் எழுந்தருளியுள்ளான் அதுபோன்று இங்கு பனிபடர்ந்த சூழலிலும் எழுந்தருளியுள்ளான் சீதள மானவன், க்ஷீராப்தியாக இருப்பவன், தண் என்னும் குளிர் மலர்கள் கொண்ட மாலை பூண்டவன் பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடிவந்தவன். எம்பெருமான் எந்நேரமும் பனிகொட்டிக் கொண்டிருக்கும் இந்த இமயமலைச் சாரலில் பனிபடர்ந்த சூழலில் அமர்ந்தான் போலும். 2. 108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் பகவான் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய ஸ்தலமாகும். மற்றெல்லா ஸ்தலங்களிலும் அவனருள் காட்டி அவனது பலத்தைக் காட்டி நின்றாலும் இங்கு மட்டும்தான் ஆச்சார்ய திருக்கோலத்தில் திகழ்கின்றான். பக்தர்களுக்காகவும் இவ்வுலகிற்காகவும், பிராட்டிக்காகவும், பிற ஸ்தலங்களில் தன்னை வெளிக்காட்டிய எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசம் செய்ய தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்திய ஸ்தலம் இது ஒன்றுதான். எனவேதான் இங்கு தனது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு ஒரு தபஸ்வியின் வடிவில் இலந்தை மரத்தடியில் பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். 3. இங்கு செல்வதற்கு டெல்லியிலிருந்து முதலில் ஹரித்துவார் செல்ல வேண்டும். கல்கத்தா-டேராடூன் ரயில் மார்க்கத்தில் ஹரித்துவார் அமைந்துள்ளது. எப்போதும் பனி பெய்வதால் கடுங்குளிரில் அமிழ்ந்திருக்கும் இப்பிரதேசத்திற்கு இரண்டு மூன்று உள்ளாடைகளுடனும் கம்பளிப் போர்வைகளுடனும் செல்ல வேண்டும். குளிர்தாங்கும் பருவம் இளமை என்பதால் (கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் என்றாற்போல்) மிக இளமை வயதிலேயே இங்கு சென்று வந்துவிட வேண்டும். மிக்க இளம் வயதில் இங்கு செல்ல வேண்டுமென்பதை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார். ஹரித்துவாரில் தங்குவதற்குப் பல வசதிகள் உண்டு. இங்கு தங்கி இங்குள்ள பிரம்ம குண்டம் தீர்த்தத்தில் நீராடி 15 மைல் தொலைவில் உள்ள ரிஷிகேசம் சென்று அங்கிருந்து சுமார் 80 மைல் தூரம் பேருந்து மூலம் சென்று பத்ரியை அடையலாம். ரிஷிகேசத்திலிருந்து பத்ரி செல்லும் வழியில்தான் கண்டமென்னும் கடிநகர் உள்ளது. 4. பத்ரிநாத்தானது, அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது. இந்த பத்ரிநாதனைக் குறித்து நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் ஜபம் செய்து மஹா விஷ்ணுவின் அருள்பெற்றார் என்னும் ஓர் வரலாறும் உண்டு. 5. பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார். கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர். 6. இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக (ஸாளக்கிராமச் சிலையாக) எழுந்தருளியுள்ளார். 7. இங்கு பெருமாளுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும் (திருமஞ்சனம்) திருவாராதனம், சாத்துமரை மக்களுக்கு எதிரிலேயே நடைபெறுகின்றன. திரைபோடுவது இல்லை. இங்கு நடைபெறும் பூஜா முறைகளை பக்தர்கள் நேருக்கு நேர் நின்று காணலாம். 8. இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். இந்த பூஜைக்குரிய மந்திரங்களை வடநாட்டு பிராம்மணரே ஓதுவர். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள தேசத்து நம்பூதிரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து செயல்படுவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர். இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். மிகவும் நல்லொழுக்கம் வாய்க்கப் பெற்றவர்களும், சாஸ்திரங்களிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களே இந்த நிகழ்ச்சிக்கு குழுவினராக நியமிக்கப்படுவர். இந்த பூஜை நடைபெறும் சமயம் பெருமாளின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு. 9. இங்கு கோவிலின் வடபுறம் கங்கை கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுகிறது. இவ்விடத்தில் சிரார்த்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோட்சம் கிடைப்பதாகவும், அதற்குப் பிறகு சிரார்த்தம் செய்ய வேண்டியதில்லை என்பதும் ஐதீஹம். 10. இங்கு இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன. 11. இங்கு அமைந்துள்ள வசுதரா என்ற பனிமலையில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் பனித்திவலைகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை என்றும், இவைகள் மேனியில் படுதலால் புனிதம் உண்டாகிறதென்றும் நம்பிக்கை. இங்கு யாத்திரை செல்வோர் இந்த திவலைகளில் குளித்து வருவர். 12. எல்லையற்ற பெருமைகொண்ட இத்தலத்திற்கு விசாலபுரி என்ற பெயரும் உண்டு. பாண்டவர்களின் அவதாரஸ்தலம் இதுதான் என்று ஒரு கருத்தும் உண்டு. 13. இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்துவிடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று மீண்டும் திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் இரவில் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர். அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும்போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள் மறுநாள் காலையில் பார்த்தால் எந்த அளவுக்கு லேசாக வாடியிருக்குமோ அந்த அளவிற்குத்தான் மலர்களின் வாட்டம் இருக்குமாம். அதனால் தான் மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர் என்னும் ஐதீஹம் உண்டானது. மே மற்றும் ஜூன் மாதங்களே இந்த யாத்திரைக்கு மிகவும் உகந்ததாகும்.