அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் மற்றும் கோயில் எழுந்து அருளிய வரலாறு:
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
இந்த ஆலயம் சுமார் 3000 வருடம் பழமையான ஆலயம். இந்த ஆலயம் உலகில் உள்ள 108 சக்தி பிடத்தில் ஒன்று. இந்த ஆலயத்தை கட்டியவர் பரசுராமர்.இதுவே துர்க்கை அம்மனுக்கு எழுப்பபட்ட ஆலயம்.
பானாசுரன் என்னும் அரக்கன் பிரம்மனிடம் தனக்கு மரணம் நேரக்கூடாது, அப்படி நேர்ந்தால் அது கன்னி பெண் கையால் மட்டும் தான் நேர வேண்டும் என்று தவம் செய்தான். அவன் கேட்ட மாதிரியே அவன் ஆசை நிறைவேறியது. இதனால், ஆணவம் தலைக்கு ஏறிய பானாசுரன், இந்திரனை அவன் அரியாசனத்தில் இருந்து துரத்தினான். தேவர்களை கொடுமை செய்தான். இதனால், அனைவரும் சிவனையும், விஷ்ணுவையும் நாடினார்கள். அவன் வரம் வாங்கியுள்ளதால் அவனை அழிக்க முடியாது என்பதால் விஷ்னு சக்தியிடம் வேண்ட சொன்னார்.சக்தியிடம் அனைவரும் நடந்த அனைத்தையும் கூறினார்கள். இதனால் சக்தி கன்னி பகவதி பெண்னாக தோன்றினார். பகவதி மீது அன்பு வைத்த சிவன் பகவதியை மணக்க விருப்பம் தெரிவித்தார்.பகவதியும் மணக்க சரி என்று விருப்பம் தெரிவித்தனர். பகவதிக்கும், சிவனுக்கும் திருமணம் நடந்தால் பானாசுரனை அழிக்க முடியாது என்பதால் நாரதர் இந்த திருமணம் நடக்ககூடாது என்று முடிவு செய்தார். அதனால், நாரதர் முதலில் பகவதியை குழப்ப முடிவு செய்தார். நாரதர் பகவதியிடம் சென்று பானாசுரன் சிவனை விட பெரிய வலிமையானவன் என்று குழப்பினார். இதனால், சிவனின் வலிமையை அறிய உலகில் யாராலும் செய்ய முடியாத 3 நிபந்தனைகளை பகவதி தன்னை திருமணம் செய்ய நிறைவேற்ற வேண்டும் என்று சிவனிடம் கூறினார்.
1.கண் இல்லா தேங்காய்.
2.நரம்பு இல்லா வெற்றிலை.
3.அடி தண்டு இல்லா கரும்பு.
இதை எல்லாம் தன்னை திருமணம் செய்ய வரும் போது கொண்டு வரவேண்டும்.பின்பு காலை சேவல் கூவும் முன் வர வேண்டும் என்று பகவதி கூறினார்.
சிவன் அனைத்தையும் தன் வலிமையால் செய்தார்.திருமணத்திற்கு சிவன் சுசீந்திரத்தில் இருந்து கிளம்பினார். இதை கவனித்த நாரதர் 12.00 மணிக்கே சேவல் வடிவம் எடுத்து கூவி விட்டார். இதனால், காலம் கடந்து விட்டது என்பதால் சிவன் மறுபடியும் சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார். ஆனால் அங்கு பகவதி காத்து கொண்டு இருக்கிறார். திருமண சமையலுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் சமைக்காமல் இருக்கிறது. சிவன் வராததால், பகவதி கோபத்தில் எல்லா சமையல் பொருட்களையும் தூக்கி விசிவிட்டனர். கோபத்தில் தீயசக்தியை அழிக்க தவம் செய்தனர். பகவதி தவத்தில் இருந்த பகவதியை பார்த்த பானாசுரன் பகவதியை திருமணம் செய்ய வேண்டும் என்றான். இதற்கு பகவதி மறுப்பு தெரிவித்ததால், பானாசுரன் தன் வலிமையால் பகவதியை அடைந்து விடலாம் என்று நினைத்து பகவதியிடம் தன் வீரத்தை காட்டினான் பானாசுரன். பகவதி தன் சக்தியால் பானாசுரனை அழித்து விட்டாள். பின்பு அந்ந கடற்கரையிலேயே தெய்வமாக அனைவருக்கும் அருள் பாலிக்கிறார் பகவதி அம்மன். கன்னி+கழியாத+குமரி என்பதால் கன்னியாகுமரி என்று அந்த மாவட்டத்திற்கு பெயர் வந்தது.
ஸ்ரீ துர்க்கை என்ற பெயரில் எல்லாம் சாத்தியம்.
******************ஸ்ரீ துர்க்கை போற்றி******************
மந்திரம்:அம்மே நாராயணா, தேவி நாராயணா, லஷ்மி நாராயணா, பத்ரே நாராயணா.
பகவதி அம்மன் மூக்கில் ஓரு நாகரத்தின மூக்குத்தி உள்ளது. இந்த நாகரத்தினம் ராஜநாக பாம்பின் வயிற்றில் உருவாகுவது. அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதன் ஒளி கடல் வரைக்கும் விசும். ஒரு முறை கப்பல் காரன், கலங்கரை விளக்கம் என்று நினைத்து அந்த ஒளியை நோக்கி வந்து பாறையில் மோதிவிட்டான். அதனால் வருடத்திற்கு 5 முறை மட்டும் தான் அந்த கதவு திறக்கப்படும்.
தேர் திருவிழா :மே/ஜீன்.
நவராத்திரி திருவிழா:செப்டம்பர்/அக்டோபர்.
நடை திறப்பு:
காலை:4.30-11.30.
மாலை:4.00-8.30.
ஆலயத்தின் உள்ளே தொலைபேசி,புகைபட கருவி மற்ற அனுமதி கிடையாது.
|
No comments:
Post a Comment