http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Friday, December 16, 2016

தில்லை நடராஜர் கோவில்.






சிதம்பரம்_நடராஜர்_கோவில்#பற்றிய_75_தகவல்கள்_வருமாறு:-
































சிதம்பரம்_நடராஜர்_கோவில்#பற்றிய_75_தகவல்கள்_வருமாறு:-

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன.

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன.

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன.

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார்.

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும்.

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை 'மூத்த நாயனார்' என்கிறார்கள்.

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள்.

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது.

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது.

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது.

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன.

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். 26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது.

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது.

29. இத்தலத்துக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களை பாடினார்.

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை.

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும்.

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு.

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு.

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம்.

36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது.

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது.

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது.

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம்.

40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது.

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம்.

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் 'பார்க்க முக்தி தரும் தில்லை' என்கிறார்கள்.

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார்.

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர்.

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும்.

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது.

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர்.

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது.

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம்.

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

51. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

52. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

53. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.

54. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

55. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

56. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.

58. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

59. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம்.

60. நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.

61. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம்.

62. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.

63. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

64. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்.

65. நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

66. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

67. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

68. இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது.

69. பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.

70. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

71. திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான்.

72. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப் பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம்.

73. நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

74. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.
75. சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வர மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.



#சிதம்பர #ரகசியம்

சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?
சிதம்பர ரகசியம்!!!!! ஆன்மிக அறிவியல்
என்பதற்க்கு இதுவும் ஒரு சான்று.
********************************************************************************

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில
அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...
அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,
கணிதவியல், மருத்துவவியல் குறித்த
ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது.
( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை
குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை
குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை
குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும்
சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக
79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில்
(LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம்
வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த
துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு
பொறியியல்,புவிய ியல் மற்றும்
வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு
அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில்
இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு
வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு
நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள்
சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது
(15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை
குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத
உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று
கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில்
சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே
சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற
பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக
அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில்
இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை
அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த
படிகளை "பஞ்சாட்சர படி" என்று
அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில்
வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4
தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை
குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன,
இவை 28 ஆகமங்களையும், சிவனை
வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற்
பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9
கலசங்கள், 9 வகையான சக்தியை
குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6
தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த
மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில்
உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும்
குறிக்கின்றது.?

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால்
அழைக்கபடுகின்றது.

பஞ்சபூத ஸ்தலங்கள்!
***********************

நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்
ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில்
தென்னிந்தியாவில் ஐந்து கோவில்கள்
கட்டப்பட்டுள்ளன. இவைகள் பஞ்சபூத
ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பூகோளரீதியாக அவைகள் (தக்காண
பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப்
பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன.
நீருக்காக திருவானைக்காவல், நெருப்புக்காக திருவண்ணாமலை, காற்றுக்காக காளஹஸ்தி,
ஆகாயத்திற்காக சிதம்பரம், பூமிக்காக
காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கோவில்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் சிதம்பரம் கோவில் சுற்றுப்புற
கட்டிடங்கள் 1000 வருடம் பழமையானவை.
கோவிலின் புராதன உட்புறம் எவ்வளவு
காலத்திற்கு முந்தையது என்று யாருக்கும்
தெரியாது. 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம்.

இப்படியாகத்தான் இந்நாட்டின் கலாச்சாரம்
இருந்திருக்கிறது. ராமேஸ்வரம் கோவிலோ,
சிதம்பரம் கோவிலோ, மதுரை கோவிலோ
இவையெல்லாம் ஆயிரமாயிரம் வருடங்கள்
பழைமையானதாகும். பிரம்மாண்டமான?
கட்டிடங்கள் உடையதாகும். இத்தகைய
கோவில் கட்டப்படுகின்ற காலத்தில் அரசனைத் தவிர ஏனையோர் இப்பணி நிமித்தம் கூடாரங்களிலேயே தங்கியிருந்தனர்.

எந்திரங்களோ, வாகனங்களோ, பளு தூக்கும்
சாதனங்களோ இல்லாமல் இரண்டு
தலைமுறைக்கான காலமாக ஒரே குறிக்கோளை மனதில் கொண்டு மனிதர்களால் இக்கோவில்கள் உருவாக்கப்பட்டன. கோவில்
கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள்
இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர். ஏனெனில் இக்காரியமே அவர்கள் வாழ்வின் நோக்கமாக இருந்தது.

CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்!?
******************************************

சிதம்பரம் கோவிலில் நடனக் கலையின்
அரசனான சிவன் ‘நடராஜன்’ என்ற சிலை
வடிவில் இருக்கின்றான். நான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தபோது CERN என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்திற்குப் போனேன்.

அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அணுக்கூறுகளின்
இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே?

அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.

நடராஜரின் வடிவம் தென்னிந்தியாவில்
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வந்த
ஒன்றாகும். இவ்வடிவம் படைப்பின்
தொடக்கத்தை பரவெளியிலிருந்து ஒரு
நாட்டியம் போல தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய விதத்தைக் குறிப்பதாகும். சிதம்பரம் என்பது அசைவற்ற முடிவில்லாத நிலையைக் குறிக்கும் என்பதால் அக்கோவிலில் நடராஜர்
நிற்பது போன்ற வடிவம் அமைந்துள்ளது.

அந்நிலைதான் கோவிலின் கருவறையிலும்
குடிகொண்டுள்ளது. மனிதனுள் பொதிந்துள்ள இந்த அசைவற்ற தன்மை, நுண்கலை வடிவமாகவும் வெளிப்படுகிறது.
இத்தன்மையில்லாமல் உண்மையான
கலைவடிவு கிடையாது. நடராஜமூர்த்தி
ஒருபுறம் இருக்க கருவறையின?் மூலவர்
என்பது இங்கு எல்லையில்லாத
வடிவமில்லாத பரவெளியே ஆகும்.
பதஞ்சலி முனிவர் உருவாக்கிய கோவில்
பதஞ்சலி முனிவர்தான் இக்கோவிலை
உருவாக்கினார். நவீன யோகக் கலையின்
தந்தையாக பதஞ்சலி அறியப்படுகிறார். அவர் கண்டுபிடித்ததல்ல யோகா. மாறாக
ஏற்கெனவே பல்வேறு நிலைகளில் இருந்த
யோக முறைகளை அவர் ஒரு தொகுப்பாக
முறைப்படுத்தினார். யோக சூத்திரங்களும்
அவரால்தான் எழுதப்பட்டன.
பதஞ்சலி முனிவர் ஒரு குறிப்பிட்ட கட்டிட விஞ்ஞான (ஆகம) முறைப்படி சிதம்பரம் கோவிலைக் கட்டினார்.

அவர் வெறும் பக்தரல்லர். யோக
விஞ்ஞானியுமாவார். எனவே அந்தக்
கோவிலின் அன்றாடப் பணிகள், பூஜைகள்
எப்படி நடைபெற வேண்டும் என்றும் சொல்லி
வைத்துள்ளார். இதற்காக ஒரு குழுவுக்கு
பயிற்சி அளித்து அந்தக் கோவிலை எப்படி
ஒழுங்காக பராமரிக்க வேண்டும், அங்கு
எத்தகைய சடங்குகள் செய்ய வேண்டும்
என்பது பற்றியும் சொல்லிச் சென்றுள்ளார்.

அக்குழு பல குடும்பங்களாக பெருகி இன்றும்
கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றது.
பதஞ்சலி சொன்ன நடைமுறைகள் அவர்களால் இன்றும் கடைப்பிடிக்கப் படுகின்றன. சிதம்பரம் கோவிலின் கட்டிடங்கள் சுமார் 35
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. அவை
முற்றிலும் கற்களால் ஆனவை. இது தவிர
நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கோவிலைச் சார்ந்தவை. ஏராளமான ஆபரணங்களும், நவரத்தின மணிகளும் இருந்தன. பிரிட்டிஷார் காலத்தில் அவர்கள் இக்கோவிலின் பெருஞ்சொத்தை கொள்ளையடித்துச்
சென்றுவிட்டனர். எனவே இப்போது எந்த
நகைகளும் இல்லை. ஆங்கிலேயர்கள்
இரண்டாவது உலகப் போரை நடத்த ஏற்பட்ட
செலவில் பெரும்பகுதி இந்திய கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட
செல்வத்திலிருந்து தான் ஈடுகட்டப்பட்டதாக
சொல்லப்படுகிறது. கோவில் நிலங்களும்
பல்வேறு வகையில் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டதால் இப்போது இக்கோவிலின் அத்தியாவசிய பராமரிப்பு செலவுகளுக்குக்கூட பணம் இல்லை.

கோவிலை பராமரிக்கும் குடும்பங்கள்
********************************************

இன்று இந்த கோவில் நிர்வாகத்தைக் கொண்டு செல்லவும், சடங்குகள் மற்றும் பூஜைகளை நிறைவேற்றுவதற்காகவும் 360 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான வருமானம் இக்கோவிலில் இருந்துதான் பெறப்படுகின்றது.

ஆனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டுதான்
பராமரிப்புப் பணியை செய்து வருகிறார்கள்.
ஏனெனில் கோவிலின் சுவர்கள், சிற்பங்கள்,
தீட்டிய வர்ணங்கள் ஆகியவை மிகவும்
பழையதாகி உதிர்ந்துவிட்டன. போதிய கவனம் இன்றி கோவிலின் பல இடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. கோவிலின் அடிப்படை கட்டுமான விஞ்ஞானமறியாமல் கான்கிரீட் சுவர்கள் ஆங்காங்கே எழுப்பப்பட்டதன் விளைவாக கோவிலின் புனிதத்தன்மையும் அக இயல்பும் பாதிக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலை பதஞ்சலி முனிவர்
உருவாக்கும்போது எந்த ஆடம்பர
நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு
மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித
ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ
அதை மட்டுமே செய்தார். அந்த இடம் உரிய
முறையில் பாதுகாக்கப்பட்டு அதே புனிதத்
தன்மையுடன் தொடர்ந்து மக்களுக்கு
வழங்கப்பட வேண்டும் என்று அவர்
விரும்பினார், நாமும் அவ்வாறே
விரும்புகிறோம். இதற்காக கோவிலைச்
சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்தி
முன்பு இருந்தது போல கோவிலை பராமரிக்க
நிறைய செலவாகும். மேற்சொன்ன
நோக்கத்துடன் வியாபார ஸ்தலங்களையும்,
விடுதிகளையும் வேறு இடங்களுக்கு மாற்றி
அமைக்க முடியுமா என்று ஆலோசனை
செய்து வருகிறோம். எனினும் இது ஆரம்ப
திட்ட அளவிலேயே உள்ளது. இதற்காக எந்த
பெரிய நிறுவன (corporate) மாவது முன்
வருவார்களா என்றும் பார்க்கிறோம். ஏனெனில் சிதம்பரம் நடராஜர் கோவிலை முன்பிருந்ததைப் போல ஆன்மீகத் துடிப்புள்ள சக்திமிக்க ஸ்தலமாக மீட்க முடிந்தால் அது மகத்தான முன்னேற்றத்தை கொண்டு வரும்.

புனித ஸ்தலங்களை எப்படி பயன்படுத்திக்
கொள்வது?
********************************************

நாம் வாழும் இடம் 10,000 சதுர அடிகளாகவோ
அல்லது 1000 சதுர அடிகளாகவோ இருந்தால்
அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியப்
போவதில்லை. ஆனால் சக்தியூட்டப்பட்ட
புனித ஸ்தலத்திற்கு அருகே இருப்பதென்பது
ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை
கொண்டுவரும். இதை மனதில் கொண்டுதான் 25 வீடுகளுக்கு ஒரு கோவில் என்று ஊர்களை அமைத்தார்கள். கோவிலுக்குப் போய்
வழிபடுகிறீர்களா, மந்திரம் உச்சரிக்கிறீர்களா
என்பதல்ல முக்கியம்.

புனிதப்படுத்தப்பட்ட
இடத்திற்கு அருகே இருக்கிறீர்களா என்பதே
விஷயமாகும். வாழ்வின் இந்த பரிமாணம்
குறித்த ஞானம் நமது கலாச்சாரத்தில்
தொடர்ச்சியாக இருந்து வந்தது, மிக
முக்கியமான ஒன்றாகவும் கருதப்பட்டது. நாம்
என்ன உண்கிறோம், எப்படி வாழ்கிறோம்,
எத்தனை நாள் உயிரோடு இருக்கிறோம்
என்பதையெல்லாம் தாண்டி படைப்பின்
மூலத்தோடு எவ்வாறு தொடர்பு
வைத்திருக்கிறோம் என்பதையே தேவையாக
உணரும் ஒரு கட்டம் வாழ்வில் வரும்.

இவ்வாறு படைப்பின் மூலத்தோடு தொடர்பு
கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கத்
தவறினால் நாம் வாழும் சமூகமானது மக்கள்
நல சமுதாயமாக இருக்காது.

---------------------------------------------
-----------------------------------
ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின்
எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம்.

சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில்
தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும்
பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த
சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின்
அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

1) சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன.

2) இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.

3) பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள்
உள்ளன. இவை ஒரு மனிதனின்
ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.

4) 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை
ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையு
ம் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

5) இதையே விதியை மதியால் வெல்லலாம்
என்பார்கள்.

6) இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி
அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம்
ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க
ஆயுள் விருத்தியாகும்.

எனவே விதி முடிவும் விலகியே போகும். -

எண்ணும் எழுத்தும்
__________________

உடற்கூறு கணிதம்
21600 மூச்சுக்காற்று
உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின்
இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே
உயிரின் இயக்கமாகும். சித்தர்களின்
கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள்
ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும்.

சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று,
உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்),
நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்)
சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி
ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம்
விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும்
ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும்
கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.

ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது,
(21,600 X 10 216000 ஆன்ம சக்திக்
கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால்
மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை
அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம்
என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை
அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும்,
அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது
என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம்
என்றால் முட்டை என்று பொருள்) என்று
அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி
நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600
மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்
துக்கள் 216 என்பது இந்த 21,600
மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன்
வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு
மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய
ஆயுள் 120 ஆண்டுகளாகும்.

ஆனால்
உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும்
போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும்,
தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின்
போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில்
சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில்
ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு
எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு
தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம்

என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து
பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10
நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும்.

இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து
கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம்
வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக்
கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம
கலையாற் பகுத்து, காலக் கணக்கு
கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60
விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை
ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000
கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின்
எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம்.

சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில்
தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும்
பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த
சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின்
அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை
மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான
கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க
ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு
நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான
எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன.

இவை ஐந்தெழுத்து மந்திரமான
நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்)
குறிப்பன.இதையே விதியை மதியால்
வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று
கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால்
சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய
சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள்
விருத்தியாகும். எனவே விதி முடிவும்
விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி
என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே
அனைத்து வேதங்களும், சித்தர்களும்,
ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே
என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.

காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக்
கொண்டும், நேரத்தைக் கொண்டும்,
வான்வெளியைக் கொண்டும்
கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை
உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது
நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது
இருக்கும்.

மூச்சின் கணக்கு:
******************

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில்
நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில்
10800.

2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு:

1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440
நிமிடங்கள்

2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400
விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1
மூச்சு

3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440
விநாடிகள் (=360 மூச்சுக்கள் )
சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:

1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000

2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1
மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360
மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)

3. 60 கடிகைகள் = 1 நாள்

4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்
ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும்
இரண்டமறியாத மூடன்' என்கிறார்.

8 என்பது
'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில்
குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ'
காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிற
து. இதையே அகார உகாரம் என்று
கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும்
சந்திரகலையை குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'

என்ன என் உயிரின் மேலான இந்து
சொந்தங்களே ரகசியம் தெரிந்தா? நம்
முன்னோர்களின் அறிவாற்றல் வெளிப்பட்டதா?

மழை நீர் வடிகால்.
நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் கால்வாய்


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரிணை கொண்டு சென்றுள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.


பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரிநீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வாளர்கள் ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் பி.கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன், ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்தது: இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை.


கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாகவும் என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். சிறந்த நீர் மேலாண்மை: குறிப்பாக பராந்தகசோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம்ஏரிக்கு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான். பாம்பு போல வாய்க்கால் இருந்தால், தண்ணீ்ர் பனை ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில்நுட்பம் காட்டுகிறது.


நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமடத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். இவைகள் 24X15X5 செ.மீ நீள, அகலங்களை கொண்டதாகும். 1:3:6 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.


பிற்கால சோழர் காலம்: இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சாரா, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர். அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதனால், சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் நமக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கு இக்கால்வாய் சான்றாக அமைந்துள்ளது.

 

No comments:

Post a Comment