http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, October 7, 2017

பசுவும் பாம்பும் தெய்வங்களே!



இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??

இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ?

பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ?

மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது.

இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது..

அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர்.

சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.

பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார்.

பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார்.

முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது.

மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை.

இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன்.

உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ?

நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி...

கடவுள் ஒன்றுதான்.






Saturday, August 26, 2017

தெந்திருப்பேரை திவ்ய தேசம்



குண்டலம் அணிந்த பெருமாளைத் தரிசித்திருக்கிறீர்களா???? தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத ஒதுங்கிய கருடனைத் தரிசித்திருக்கிறீர்களா??? ஏன் கருடன் ஒதுங்கி காட்சி தருகிறார்??? வாருங்கள் பெருமாளைத் தரிசித்து, அவரின் அருளைப் பெற்றிடலாம்.

அப்படி என்ன இத்தலத்தில் சிறப்பிருக்கிறது??? அறிந்திடலாமா??

பூமி பிராட்டிக்கே ஏற்பட்டுள்ள சாபத்தை நீக்கி அழகிய உடலமைப்பைக் கொடுத்த பெருமாள் அருள்புரியும் தலமாம் தென்திருப்பேரை.

நவக்கிரகங்களுடன் தொடர்புடையதாகக் கருதி வழிபடும் தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாக வழிபாடு செய்யப்படும் அற்புதத் திவ்யதேசம்.

அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில் :-
திருத்தென்திருப்பேரை.

மூலவர் : மகரநெடுங்குழைக்காதர், நிகரில் முகில்வண்ணன்

தாயார் : குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்

உற்சவர் : நிகரில் முகில்வண்ணன்

கோலம் : வீற்றிருந்த திருக்கோலம்

திசை : கிழக்கு

விமானம் : பத்ர விமானம்

தீர்த்தம் : சுக்ர புட்கரணி, சங்க தீர்த்தம்

மங்களாசாசனம் : நம்மாழ்வார்

நாமாவளி : ஸ்ரீ குழைக்காதுவல்லீ ஸமேத ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதன் ஸ்வாமிநே நமஹ.

ஊர் : தென்திருப்பேரை

🌺🌺 திருப்பேரை :-

"பேரை" என்பதற்கு "உடல்" என்பது பொருள். பூமிப்பிராட்டி இத்தல பெருமாளின் திருவருளால் சாபம் நீங்கி அழகிய உடலமைப்பைப் பெற்றதால் இத்தலத்திற்கு "திருப்பேரை" என்று பெயர். சோழ நாட்டில் "திருப்பேர் நகர்" என்ற திவ்யதேசம் ஒன்று இருப்பதால், இத்தலமானது "தென்திருப்பேரை" என்று அழைக்கப்பட்டு வருகிறது.

🌺🌺 சுக்கிரனுக்குரிய தலம் :-

நவதிருப்பதிகளில் நவக்கிரகங்களாக தொடர்புடையதாகக் கருதி வழிபடப்படும் இத்தலம் சுக்கிர பகவானுக்குரிய தலமாக வழிபடப்படுகிறது.

🌺🌺 தலவரலாறு :-

துர்வாசர் முனிவர் வைகுண்டத்திலுள்ள பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ கரிய அலங்கோலமான உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார்.

பூமிதேவியும் கரிய அலங்கோலமான உருவத்தை அடைந்தாள். அதனால் தன் பிழையை மன்னித்து, சாபவிமோசனம் அளிக்கும்படி துர்வாசரிடம் பூமிபிராட்டி துர்வாச முனிவரிடம் வேண்டினாள்.

அதற்கு துர்வாச முனிவர், "தாமிரபரணியின் தென் கரையில் உள்ள "ஹரிபதம்" என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள பெருமாளை நினைத்து தவம் செய்து வந்தால் பாவம் தொலைந்து பழைய உருவம் கிடைக்கும்" என்று விமோசனம் தந்தார்.

அதன்படி தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள "தென்திருப்பேரை"(ஹரிபதம்) என்னும் தலத்திற்கு வந்து "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது.

திருக்குளத்தில் மகர குண்டலங்கள் தோன்றியதால் சிறிதும் தாமதிக்காது மகர குண்டலங்களை இத்தல பெருமாளுக்கே சமர்ப்பித்தாள். அந்த இரண்டு குண்டலங்களையும் காதில் அணிந்து கொள்ளும் படி பெருமாளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தாள் பூமிபிராட்டி.

அந்த நேரத்தில் திருமால் பூமிதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமிதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

அந்த நிமிடமே பூமாதேவி தன் சாபவிமோசனம் அடைந்து, தனது சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம் "திருப்பேரை" என பெயர் பெற்றது.

இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவனுக்கு "மகர நெடுங்குழைக் காதன்" என்ற திருநாமம் உண்டானது.

இத்தல உற்சவருக்கு "நிகரில் முகில் வண்ணன்" என்பது திருநாமம். இத்தலத்தின் வரலாற்றை "பிரம்மாண்ட புராணம்" தெளிவாக எடுத்துரைக்கிறது.

🌺🌺 வருணன் வழிபட்ட தலம்:-

ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடனே, இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான்.

இதன் காரணாமாகவே, தற்போதும் மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

🌺🌺 விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:-

முன்பொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் "ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது". நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது.

அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார்.

அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

🌺🌺 ஒதுங்கிய கருடன் :-

ஸ்ரீமந்நாராயணன் அவதரித்துள்ள எல்லா திருக்கோவில்களிலும், வாகனமான கருடாழ்வார் மூலவர் சன்னதிக்கு நேர் எதிரில் தான் எழுந்தருளியிருப்பார். ஆனால், தென்திருப்பேரையான இத்திருத்தலத்தில் மட்டும் தான் முற்றிலும் புதுமையாக இடது பக்கமாக, அதாவது ஆழ்வார்களின் பக்கம் ஒதுங்கி நின்று சேவை சாதிக்கிறார். இது தமிழகத்தில் வேறு எங்கும் எங்கும் காண முடியாத கருடனின் திருக்காட்சி ஆகும்.

அப்படி கருடன் ஒதுங்கியிருக்க காரணம் என்ன??? அதைப்பற்றி அறியலாம்.

இந்த தென்திருப்பேரை திருத்தலத்தில் "பிரம்மனுக்கும், ஈசான்ய ருத்திரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார்".

பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோயிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தனான கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்னாராம் இத்தல இறைவன்.

பெருமாளே சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால் காரணத்தால், இத்திருக்கோயிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.

🌺🌺 மங்களாசாசனம் :-

""நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லை என் தோழிமீர்காள்
சிகரமணி நெடுமாட நீடு தென் திருப்பேரையில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்
காதன் மாயன்நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன்
நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே".
-நம்மாழ்வார்.

இத்தல இறைவனை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

🌺🌺 வழித்தடம் :-

திருநெல்வேலியிலிருந்து 39 கி.மீ தொலைவில் திருப்பேரை உள்ளது. திருச்செந்தூரிலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு குழைக்காதுவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

""ஓம் நமோ நாராயணாய நமஹ!!!"".

Thursday, July 20, 2017

Amar Seva Sangam.



ஓம்


சமீபத்தில் (14/07/2017 to 16/07/2017) ஆகிய மூன்று நாடகள்
அமர்சேவாசங்கத்தில் உலக நன்மைக்காக நடந்தேறிய
சத சண்டி மஹா யாஹம்.
புகைப் படங்கள்.


சண்டி ஹோமம்

சாண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது.அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சாண்டி.இந்த மகா சாண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும்.செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும்.

சாண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சாண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார்.தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சாண்டி

சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம்
இல்லை.இது அனுபவம் வாய்ந்த 9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம்.இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டாள் பயனுள்ளவையாக இருக்காது.

9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும்.இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும்.அதில் சில மந்திரங்கள்

கணபதி பூஜை:

கணபதியின் ஆசியில் தான் இந்த பூஜை வழி நடத்தப்படும்.முதலில் கணபதியை வணங்கினாள் அனைத்து தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.அதனால் முதலில் கணேஷனை வணங்க வேண்டும்

அனுக்கைய சங்கல்பம்:
இது ஒரு புதிய சடங்கு வேள்வி செய்ய கடவுளை அனுமதிக்க வேண்டி இந்த பூஜை வழி நடத்தப்படும்.
இதன் முலம் எங்கே வேள்வி நடத்தப்படவேண்டும் யாருக்காக நடத்த பட வேண்டும் என்பதை காட்டுகிறது

புண்ணியகவஞ்சனம்:
இதை ஆரம்பிபதற்கு முன்பு மனம் இடம் உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்
வழிபடும் இடத்தை சுற்றி மா இலை கொண்டு மந்திர தண்ணீர் தெளிக்கவேண்டும்

கலச சதப்பனம்:
கலச சதப்பனம் என்பது ஒரு பானையை குறிக்கும்.இதில் உலோகம் மற்றும் தண்ணீர் மூழ்க மா இலை வைக்கவேண்டும்.இந்த கலசம் தேவியின் அருளை வெளிக்கொணர்வதற்காக செய்யபட்டது

ப்ரயாண சமர்ப்பணம்:

இது சிவனுடைய அவதாரமாக கொண்டு இந்த பூஜை வழி நடத்தப்படும்.

கணபதி பூஜை:

வேள்வியை தொடங்குவதற்கு முன் கணபதியை வழிபடவேண்டும்.

புண்ணியகவஜனம்:
இடம் மற்றும் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக
இந்த வழிபாடு

கோ பூஜை:
சமஸ்கிருத வார்த்தையான கோ என்பது மாடு என்று பொருள்.இந்து மதத்தில் மாடு தெய்வீக குணம் கொண்டதாக கருதப்படுகிறது.பூஜை செய்வதற்கு வைக்கப்பட்ட பொருட்கள் ஆசிர்வாதம் பெறுவதற்காக மாடுவிற்கு வைக்கபடுகிறது

சுஹாசினி பூஜை:
வயதான தம்பதியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக இந்த பூஜை செய்யபடுகிறது

தம்பதி பூஜை:

இதில் பூஜை செய்து வயதான தம்பதியிடம் வழங்கபடுகிறது.வயதான தம்பதியிடம் தான் கொடுக்கபடவேண்டும்.
பிரம்மச்சாரி பூஜை

திருமணம் ஆகாத ஒரு ஆண்மகனை கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது.பூஜையில் அவரது ஆசி இந்த பூஜை நடத்தபடுகிறது

சாண்டி வேள்வி:
நெருப்பு சடங்கு மந்திரங்கள் கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது.

பூரண ஹோதி:
வெற்றிலை,பாக்கு,பருப்புகள்,நாணயம்,தேங்காய்,குங்குமம்,மஞ்சள்,பூக்கள் இந்த
பூஜையில் வைக்கபடுகிறது.

மகா தீபாராதனை:
சடங்குகள் அனைத்தும் முடிக்கபட்டு பூஜை தீபாராதனையுடன் முடிவடையும்






















































































ஆயக்குடி அமர் சேவா சங்கம்
அன்பு நண்பர்களே
சில இடங்களுக்கு நாம் அதன் அருமை பெருமை தெரிந்து செல்வோம்.சில இடங்களுக்கு இறைவன் நம்மை அழைத்து தரிசனம் தந்து அதன் மஹிமையை நாம் உனரும்படி செய்வார். அப்படிப்பட்ட ஒரு புண்ணிய ஷேத்திரம்தான் ஆயக்குடி அமர் சேவா சங்கம். 
கடந்த 24/07/2017 அன்று அமர் சேவா சங்கத்தினர் தனது ஆண்டு விழாவைச் சிறப்பாக கொண்ட்டாடினார்கள். சில புகைப் படங்களை கண்டு களிக்க கீழ் காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.

https://picasaweb.google.com/lh/sredir?uname=108430730402411158600&target=ALBUM&id=6446970540171061745