வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்குமூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
வலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்து அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவானதத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தே ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியன்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கும் அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணிக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியெ
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் என் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.
ஆலய தரிசன விதி முறைகள் :
1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.
2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.
3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.
4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.
5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.
6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.
7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.
8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.
9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.
10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.
தீபம் ஏற்றும் முறை :
வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.
நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.
தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :
கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.
மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.
வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.
தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.
திரி ஏற்றும் முகப்பக்கம் :
ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.
இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.
மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.
நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்
ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.
திரி தரும் பலன்கள் :
பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.
தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.
வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.
வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்
புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.
புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
அம்மை துதி :
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.
முருகப் பெருமான் துதி:
கொன்றை வேணியார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகினார்.
அம்பலவாணன் துதி :
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக்
கருத்து இருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்ததியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே.
குறிப்பு :
வழிபாட்டின் தொடக்கத்திலும் நிறைவிலும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி மகுடம் சொல்வது நலமாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி !!
திருச்சிற்றம்பலம்.
திருக்குறள் அனைத்து சமயங்களுக்கும் உரிய பொது மறையாகும். இதில் நேரடியாக இல்லாமல்
மறைமுகமாகச் சில புராண வரலாறுகள் சுட்டப்படுகின்றன. அவற்றிலென்று சிவபெருமான் நஞ்சு
உண்ட வரலாறாகும். தேவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்காக அவருக்கு நஞ்சினை அளித்து
அருந்தும்படி வேண்டினர். இறைவன் அதனை மறுத்திருக்கலாம் என்றாலும் நயத்தக்க நாகரீகமும்
பண்பாடும் காக்க வேண்டி அதனை உண்டு அவர்களைக் காத்து அருள் புரிந்தார். இந்த வரலாறு
மறைமுகமாகத் திருக்குறளில்..,
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்
நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்.
- என்று குறிக்கப்பட்டுள்ளது.
நமது சமயம் விஞ்ஞானத்தின் அடிப்படை தத்துவம் கொண்டது.
சரி, விஞ்ஞானம் என்ன கூறுகிறது.
பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து இவ்வுலகைத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள்
முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான். ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷணு, மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினர். இந்த நால்வரையும் சதுர்வேதங்கள் என்றும்
குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணங்களும் ஆவர். பாரசக்தி, பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன்
இவர்களின் சக்திகளைக் கொண்டு அறிவியல் நிபுணர்கல் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாக சுட்டிள்ளனர்.
பராசக்தி - கரியமிலா வாயு [ Carbon Dioxide ]
மகாவிஷ்ணு - பிராண வாயு [ Oxygen ]
பிரம்மதேவன் – நைட்ரஜன் [ Nitrogen ]
மகேஸ்வரன் – ஹைட்ரஜன் [ Hydrogen
Asrto Physics என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துகொள்ளலாம்.
திரிமூர்த்தி என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் “எலக்ரோன்” (Electron ), ”நியுட்ரோன்”,(Neutron)
, “புரோட்டன்” (Proton) - என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே.
எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்து விட்ட மையப்
புள்ளியாக ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமையின் கீழ் பிரம்மதேவன்
சிருஷ்ப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்பவராகவும்
பொறுப்பேற்றனர்.
நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயமாக ஆதிபராசக்தி திகழ்கின்றாள்.
அவளுக்கு துணையாக :-
“ எலக்ரோன்” (Electron), - பிரம்மதேவனும்,
” நியுட்ரோன்”, (Neutron), - விஷ்ணுவும்,
“ புரோட்டன்” (Proton) - மகேஸ்வரனும்,….,
-- விளங்குகின்றனர்.
இதை கண்ணுறும்போது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் வெளியான அரும்பெரும்
தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகிறது.
மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். “கார்பன்’ தான் உலகில் சக்தி பெற்ற உலோகம்.
இந்த உலோகமே காந்த சக்தி பெற்ற உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில் அதிகமாக இருப்பதால்
மற்ற கிரங்களையும் அதைச் சுற்றி வரச் செய்கிறது.
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோதுதான் முதன் முதலில் இரும்பு சக்தி வெளியானது.
இரும்பு சக்தி மகாலெட்சுமி. மகாலெட்சுமி கருமை நிறமாகக் காட்சி தந்தாள். அதுவே கார்பனாகிய
இரும்பு சக்தி. இதிலிருந்து செம்பு, சொர்ணம், கனகம், வைரம் வெளியானது என்பது இங்கு
குறிபிடத்தகக்கதாகும். மகாலெட்சுமி என்ற இரும்புச் சக்தியைக் காப்பாற்றவே விஷ்ணு வந்தார்.
உலகின் ஒப்பற்ற சக்தியான இரும்புச் சக்தியைப் பத்திரப்படுத்த வேண்டும்.
பாற்கடலில் பிறந்த பாவையான மகாலெட்சுமி கருநெய்தல் பூவால் புனைந்த
மாலையை ஏந்தி, உவந்து திருமாலுக்குச் சூட்டி அவனைத் தழுவினாள்
இச்செய்தி செவ்வை சூடுவார் பாகவத்தில் இடம் பெற்றுள்ளது.
இதனை பிரதோஷ காலத்தில் கூறி பெண்கள் வழிபட்டு வந்தால் நல்ல கணவன் கிடைப்பான்
என்றும், இப்பாடலை ஓதும் அனைவருக்கும் திருமகளின் அருள் கிடைக்கும். அப்பாடலை
இனிக் காணலாம்.
’ உளத்திடை இவ்வாறு உன்னி
உவந்திலன் எனை என்றாலும்
களிப்புறும் யானே சென்று
கலப்பன் என்று “அமலை” யாவும்
அளிப்பவன் அலங்கல் சூட்டி
அருமனை “முதலி” மார்பின்
துளிப்பு யன் மணக்கு மின்னில்
தோய்ந்தனன் துயக்கு அற்றான்.
...................................................................................................
திருப்பாற் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை நினைவுக் கொள்ளூம் வண்ணம், இன்றும் திபேத்தியர்கள்
அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்கிறார்கள். திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் தேவர் பள்ளத்தாக்கில்
God of Valley -இல் திபேத்திகள் பெரும் திரளாகக் கூடி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
வண்ணத் தோரணங்கள் கட்டி, கொடியேற்றும் விழாவும் உண்டு.
திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் கடலைக் கடைவதாக பாவனையில் இரு பக்கதிலிருந்தும் கயிற்றை
கட்டி இழுக்கிறார்கள். இறுதியாக சுமார் 15 அடி உயரமுள்ள கொடி மரத்தை கயிற்றின் மூலம் தூக்கி
நிறுத்துகிறார்கள்.அந்த கொடி மரம் மறுவருடம் வரை இருக்கும். மறு வருடம் விழாக்கொண்டாடி புதிய
கொடி மரத்தினை நடுவார்கள்.
இமையாது உயிராது இருந்தாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி ஏழான ஒருவா போற்றி....
-- திருநாவுக்கரசர்-
சக்தி பீடங்கள் மொத்தம் 51.
அவற்றுள் முக்கியமானவை ஒன்பது.
1. ஸ்ரீ நைனா தேவி - இமயமலைப் பகுதியில் சதியின் இரு கண்கள் விழுந்த இடம்.
2. ஸ்ரீ சிந்த்த பூர்ணா தேவி - பாதங்களின் சில பாகங்கள் விழுந்த இடம்.
3. ஸ்ரீ ஜ்வாலாமுகி - நாக்கு விழுந்த இடம். ஜ்வாலாமுகி சன்னிதியில் அம்மனுக்கு விக்ரகம் எதுவும் கிடையாது. இங்கு ஜோதி வடிவாக அம்பாள் காட்சி தருகிறாள்.
4. ஸ்ரீ வஜ்ரேஷ்வரி - மார்பகங்கள் விழுந்த இடம்.
5. ஸ்ரீ வைஷ்ணோ தேவி - சதியின் ஒரு புஜம் விழுந்த இடம்.
6. ஸ்ரீ சாமுண்டா தேவி - இங்கு சதியின் உடல் பகுதி எதுவும் விழவில்லை. ஆனால், அன்ன சண்ட,
முண்ட அசுரர்களை வதம் செய்த இடம் என்பதால் இரட்டிப்பு சக்தி வாய்ந்த மிகவும் உக்கிரமான தலம்.
7. ஸ்ரீ மானஸா தேவி - சதியின் தலை விழுந்த இடம்.
8. ஸ்ரீ ஷாகும்பரி தேவி - தலையின் நெற்றிப்பகுதி விழுந்த இடம்.
9. ஸ்ரீ காலிகாஜி - சதியின் கூந்தல் விழுந்த இடம்.
இதனை சக்தி பீடமாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், மிகப் புனிதமான
மகா சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி திங்கள்
புரட்டாசி சனிக்கிழமை. ஒரு பழமையான மரபு இன்று அனுசரிக்கப்படும் விழா.
தீவிர சைவர்களைத் தவிர மற்றவர்கள் இன்று விரதம் இருந்து, திருப்பதி வெங்கடாசலபதியை
வழிபடுகிறார்கள்..
எனது கடந்த காலங்களில் புரட்டாசி மாதங்களில் தமிழ் நாட்டிலிருந்த போது இந்த காட்சியை
கண்டுள்ளேன். புரட்டாசி சனிக்கிழமை அதிகாலையில்,நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு,
கையில் ஒரு செம்பு ஒன்றை ஏந்திய வண்ணம் வீடுவீடாகச் செல்வார்கள். வீட்டுக்காரர்கள்
செம்பில் அரிசி போடுவார்கள். செம்பு நிறைந்தவுடன் வீடு திரும்புவார்கள். அந்த அரிசியைச்
சமைத்து ஏழைகளுக்கு உணவாகப் படைப்பார்கள். அல்லது கோயிலில் கொடுப்பார்கள்.
இதன் அடிப்படையே - காருண்யம், தர்மம், இரக்கம் – இது பெரிய தொண்டு!தானே உஞ்சவிருத்தி
செய்து, அதனையும் தானே உண்டுவிடாமல், அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது என்பது பெரிய
தொண்டு அல்லவா.
ஆதிசங்கரர் தன்னுடைய ஐந்தாவது வயதில் ஒரு குறிப்பிட்ட மரபின்படி உஞ்சவிருத்தி செய்யப்
போனார்.
அன்று ஏகாதசி. அன்று ஒரு பரம ஏழையின் வீட்டின் முன்னால் நின்று "பவதிபிக்ஷந்தேஹி" என்று
குரல் கொடுத்தார். அவ்வாறு மூன்றே முறைதான் குரல் கொடுக்கலாம். அதற்குள் ஏதேனும் பிட்சை
கிடைக்கவில்லை என்றால் இடத்தைக் காலி பண்ணிவிடவேண்டியதுதான். அன்று பட்டினிதான்.
ஆதிசங்கரர் அப்படி ஒரு ஏழையின் மனைவி வீட்டில் முன் நின்று "பவதிபிக்ஷந்தேஹி" என்று
குரல் கொடுத்தார் அவ்வீட்டின் மனைவி உணவு ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள்.
ஒன்றுமே கிடைக்கவில்லை. காரணம் அவளே பரம் ஏழை ஏகாதசி விரதம் முடிந்து, உண்ணா
நோன்பை முடிப்பதற்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனி இருந்தது. அது இல்லையெனில்
நோன்பை முடிக்கமுடியாது. மரபும் கெட்டும்விடும்.
தர்மமா, நோன்பு மரபா?
டக்கென்று நெல்லிக்கனியை எடுத்துப்போய், சங்கரரின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டாள்.
அந்த உண்மையா அன்பு உள்ளதையும், அருள் உள்ளத்தை அறிந்தார்.
அந்த கருணை உள்ளத்தை கண்ட ஆதிசங்கரர் உள்ளத்தில் கழிவிரக்கம் பீரிட்டு, பெருகி
ஓடியது,அது பொன் மகளின் மீது அழகிய துதியாக உருவெடுத்தது. கூரையை பிளந்து
பொன்னாக கொட்டியது.
அந்த கனகதாரா தோத்திரத்தின் 21ஆம் பாடலின் போது பொன் நெல்லிக்கனிகளாக மழை
பெய்தது.
புரட்டாசி சனிக்கிழமை இவ்வாறு செம்பில் அரிசியை உஞ்சவிருத்தியில் வாங்கி சமைத்துப்
போடுவதற்குப் பெயர் "கோபாலம் எடுத்தல்" என்பார்கள்..
வேங்கடவனையும் தாயாரையும் ஒருசேர எண்ணி துதி பாடுவோம்
."அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" - அப்பர் வாக்கு.
# [கனகதாரா தோத்திரத்தின் 21ஆம் பாடலை நமது கோப்பில் இருந்தது. தேடினேன் கிடைக்கவில்லை.
ஒருகால் பொன்னின் விலை அதிகரித்துவிட்டதால் அரங்கனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதோ?!]
# சில காலத்திற்கு முன் செய்தி தாளில் ஒரு படம் பார்த்தேன். “கனகதாரத்தின் போது’’ கொட்டிய வீடு
பிரசிரித்து இருந்தார்கள். பழைய வீடு. கேளராவில் இருப்பதையும் செய்தியாக போட்டு இருந்தார்கள்
கடவுள் இருக்கிறாரா இல்லையா
ஒரு நாள் உலகின் ஓவியர்களுக்கு எல்லாம் யாரோ ஒருவரின் ஒரு அறிவிப்பு வந்தது. அது, "நான் நாளை ஒரு நாள் முழுதும் உங்களுக்கு என் நிழலைக் காட்சியாகத் தருவேன்". என் நிழலை மட்டுமே பார்த்து என்னை வரைந்து, அதனைக் கொண்டு என்னை யார் அடையாளம் கண்டறிகிறீர்களோ, அவர்களுக்கு நான் மிகச்சிறந்த பரிசை அளிக்கப் போகிறேன் என்பதாகும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அது "என் நிழலை ஒவ்வொரு ஓவியனும் தனித்தனியாக ஒரே முறை மட்டும் பார்க்கலாம்".
போட்டிக்கான நாள் வந்தது. தன்னை மிகச்சிறந்த ஓவியர் என்று நினைத்துக் கொண்ட ஓவியர்கள் ஒவ்வொருவரும் நிழலைத் தனித்தனியாகக் காணச் சென்றனர். நிழலைக் கண்டு வந்தவர்கள் ஒவ்வொருவரும் உயரமான உருவமாய், குள்ளமான உருவமாய், பருமனாய், ஒல்லியாய் என பலவிதமாய் தான் கண்ட நிழலை வரைந்தனர்.
காரணம் அந்நிழலைத் தருபவரின் மேல் விழும் சூரியனின் கதிருக்கேற்ப நிழல் மாறியதே. இது மட்டுமல்ல ஒரு ஓவியர் தான் காணச் சென்ற போது அவருக்கு நிழலே கிடைக்கவில்லை. காரணம் சூரியனின் கதிர்கள் நிழலைத் தரும் உருவத்திற்கு செங்குத்தாய் அமைந்து விட்டது.
கடைசியாக உருவாதைப் பார்க்க காத்திருந்த ஒரு ஓவியன், அனைவரின் ஓவியத்தையும் பார்த்து வெறுத்துப் போய், நிழலே இல்லை என்று நிழலைப் பார்த்து விட்டு வந்த ஒருவன் சொல்கிறான் என்றால் அதனைக் காணவும் வேண்டுமா என்று தன் கண்களை மூடியவாறு நிழலைக் காணச் சென்று நிழல் விழும் இடத்தைக் கடந்து வெளியே வந்து நிழல் தருபவனே இல்லை என்றும் கூறலானான்.
ஓவியர்கள் ஒவ்வொருவரின் உருவத்தின் நிழலும் வேறுபட்டதாக உள்ளதாலோ, அல்லது நிழலில்லா உருவம் என்று ஒருவன் சொன்னதாலோ அல்லது கண்ணை மூடிக் கொண்டு ஒருவன் உருவமே இல்லை என்று சொன்னதாலோ உருவம் இல்லாததாகி விடுமா?
"உருவம் ஒன்றே, பார்க்கும் விதத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப உருவம் மாறுபடுகிறது என்பது தானே நிஜம்.
இப்பொழுது நீங்கள் சொல்லுங்களேன், கடவுள் இருக்கிறாரோ, இல்லையா...