http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, November 13, 2010

ஆன்மீகச் செய்திகள்.

                                                                                 
                                                                     

                                                                                                  ஓம்

ஆன்மீகம் என்பது இறைவனின் அன்பு மூலமாக தன்னை உணர்தல் .
 பழம்பாடல் ஒன்று 
.விதைப்பேனோ விதைப்பினும் முளைக்குமோ ,முளைகினும் கைக்கு கிடைக்குமோ கிடைக்கினும்உண்பேனோ உண்பினும் விக்கிகொள்ளுமோ ஜோதி திருஉளம் எதுவோ?
 வாய்வழி கேட்ட பாடல்.
 அன்றாட செயலே இறைவனால் நடக்கிறது என்பது இதனால் அறியப்படும் கருத்து.

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை

களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.

--

சிவத்தை அறிவது மாபெரும் தவம்,
சிவத்தை அறியாதவர் சவம்!
சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம்;
சிவம் இல்லையேல் எல்லாம் சவம்!!
சிவம் அறிவது மாபெரும் தவம்;
சிவம் அறியாதது சவம்!!!


ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு.



வாழ்க்கை உலகில் பிறந்த ஜீவராசிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்று. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.விரும்பினாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் வாழ்ந்துதான் தீரவேண்டும். இவ்வுலக வாழ்வு நமக்கு இன்பமானதாக அமைவதும் நமது வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்வதும் நமது குறிக்கோள் என்ன? இங்கு நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதைப் பொறுத்தே அமைகிறது. உலக வாழ்வில் பல இன்பங்களும் துன்பங்களும் பகலும் இரவும் மாறிமாறி வருவதுபோல் வருவது இயற்கை. இன்பம் வருகையில் மிகவும் மகிழ்ச்சியடைவதும் துன்பம் வருகையில் துவண்டுபோவதும் அவ்வின்ப துன்பங்களுக்கு நம்மை 
அடிமையாக்கும் விதமாக அமையும்.


இத்தகைய நிலையில் நாம் சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஆளப்பட்டு, நமது சுயக் கட்டுப்பாட்டை இழக்கிறோம். இந்நிலையை மாற்றி நம்மை நாமே ஆளும் தன்மையை நாமடைந்தால் சுற்றுப்புற சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாழ்வு நாம் விரும்புவதுபோல் அமையும். இடையில் வரும் எந்த இன்பங்களும் துன்பங்களும் நம்மை பாதிக்காமல் நாம் சலனமற்ற சிந்தையோடு இனிமையான வாழ்வு வாழ்வதுடன் முன்னேற்றப் பாதையில் நாம் தொடர்ந்து செல்வது உறுதி.
வாழ்வில் முன்னேறவும், வாழ்வை என்றும் இன்பகரமாக அமைத்துக்கொள்ளவும் நம் முன்னோர்கள், மற்றும் கல்வி அறிவும் அனுபமும் மிக்க அன்பர்கள் பலரும் உரிய வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றை அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்து, குழந்தைகள் மற்றும் அனைவரும் வாழ்வில் உயர வழிசெய்வதே ந்மது நோக்கம்.
இந்து மதத்தின் மூலமாக,அதிலுள்ள இதிகாசம் புராணங்கள் மூலமாக, வாழ்ந்து மறைந்த - வாழ்ந்து காட்டிய,நமக்கு உபதேசம் செய்த ஞானிகள்,  மகான்கள் , மகரிஷிகள் , சித்தர்கள் எண்ணற்றோர். அன்னவருள் பிரபலமான சிலரைப் பற்றி தெரிந்து கொள்வோம். 




மும்மூர்த்திகள்

1) பிரம்மா
2) விஷ்ணு
3) சிவன்



நால்வேதங்கள்

1) ரிக் வேதம்
2) யஜுர் வேதம்
3) சாம வேதம்
4) அதர்வண வேதம்



பஞ்சகன்யா

1) அகல்யா
2) தாரா
3) த்ரௌபதி
4) சீதா
5) மண்டோதரி



சப்தரிஷிகள்

1) காஸ்யபர்
2) கௌதமர்
3) பாரத்வாஜர்
4) விஸ்வாமித்திரர்
5) வசிஷ்டர்
6) ஜமதக்னி
7) அத்ரி



யோகங்கள்

1) ஸ்பர்ச யோகம்
2) பாவ யோகம்
3) ஞான யோகம்
4) மஹா யோகம்



நவவித பக்தி

1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு
    செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே
    அற்பணித்தல்

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்



பதினாறு பேறுகள்

1) புகழ்
2) கல்வி
3) ஆற்றல்
4) வெற்றி 5) நன்மைகள்
6) பொன்
7) தானியம்
8) அழகு
9) இளமை
10) நல்வாழ்வு
11) அறிவு
12) பெருமை
13) துணிவு
14) நீண்ட வாழ்வு
15) நோயின்மை
16) நுகர்ச்சி

பதினெட்டு சித்தர்கள்
குடி கொண்டுள்ள இடம்

1) திருமூலர் - சிதம்பரம்
2) ராமதேவர் - அழகர்மலை
3) கும்பமுனி - திருவனந்தபுரம்
4) இடைக்காட்டு சித்தர் - திருவண்ணாமலை
5) தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்
6) வால்மீகர் - எட்டுக்குடி
7) பாம்பாட்டி சித்தர் - திருமுதுகுன்றம் என்ற
    விருத்தாசலம்
8) குதம்பை சித்தர் - மயிலாடுதுரை
9) கமலமுனி - திருவாரூர்
10) போகர் - பழனி
11) மச்சமுனி - திருப்பரங்குன்றம்
12) கொங்கணவர் - திருப்பதி
13) பதஞ்சலி - ராமேஸ்வரம்
14) நந்தி - காசி
15) காங்கேயர் - கரூர்
16) கோரக்கர் - பொய்யூர்
17) சட்டைமுனி - திருவரங்கம்
18) சுந்தரானந்தர் - மதுரை

இதர மஹரிஷிகள்

1) நாரதர்
2) பராசரர்
3) வியாசர்
4) வைசம்பாயனர்
5) விபாண்டகர்
6) ரிஷ்யசிருங்கர்
7) துருவாசர்
8) பரசுராமர்
9) கபிலர்
10) கண்வ மஹரிஷி
11) வால்மீகி
12) ஜனகர்
13) லோமசர்

நாயன்மார்கள்

1) ஆனாய நாயனார்
2) அதிப்பத்த நாயனார்
3) ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4) அமர்நீதி நாயனார்
5) அப்பூதியடிகள் நாயனார்
6) அறிவாட்டய நாயார்
7) சந்தேசுவர நாயனார்
8) தண்டியடிகள் நாயனார்
9) ஏனாதிநாத நாயனார்
10) ஏரிப்பத்த நாயனார்
11) ஏயக்கொங்கலிக்காம நாயனார்
12) ஞானநாத நாயனார்
13) இடங்கழி நாயனார்
14) இளையாங்குடிமாற நாயனார்
15) இசைஞானியார்
16) இயற்பகை நாயனார்
17) காரி நாயனார்
18) கலிக்கம்ப நாயனார்
19) கலிய நாயனார்
20) கணம்புள்ள நாயனார்
21) கண்ணப்ப நாயனார்
22) காரைக்காலம்மையார்
23) கழற்சிங்க நாயனார்
24) கழரீரவிவார் நாயனார்
25) கோச்செங்கட்சோழ நாயனார்
26) கூற்றுவ நாயனார்
27) கொட்புலி நாயனார்
28) குளச்சிறை நாயனார்
29) குங்கிலியக்கலய நாயனார்
30) மணக்கணைச்சார நாயனார்
31) மங்கையர்க்கரசியார்
32) மெய்ப்பொருள் நாயானார்
33) மூர்க்க நாயனார்
34) மூர்த்தி நாயனார்
35) முனையாடுவார் நாயனார்
36) முருக நாயனார்
37) நமிநந்தியடிகள்
38) நரசிங்கமுனையரய நாயனார்
39) நேச நாயனார்
40) நின்றசீர் நெடுமாற நாயனார்
41) பெருமிழலைக்குறும்ப நாயனார்
42) பூசலார் நாயனார்
43) புகழ்ச் சோழ நாயனார்
44) புகழ்த்துணை நாயனார்
45) சாக்கிய நாயனார்
46) சடைய நாயனார்
47) சத்தி நாயனார்
48) செறுத்துணை நாயனார்
49) சிறப்புலி நாயனார்
50) சிறுத்தொண்டா நாயனார்
51) சோமாச்சிமாற நாயனார்
52) சுந்தரமூர்த்தி நாயனார்
53) திருஞானசம்பந்தர்
54) திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
55) திருமூல நாயனார்
56) திருநாளைப்போவார் நாயனார்
      (நந்தனார்)
57) திருநாவுக்கரசர்
58) திருநீலகண்ட நாயனார்.

59) யாழ்ப்பான நாயனார்.
60) திருநீலனக்க நாயனார்
                                                                             61) உருத்திரபதி நாயனார்.
                                                                             62) வாயிலார் நாயனார்.
                                                                             63)விரன்மிண்ட நாயனார்.

 சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் மாணிக்கவாசகர்.
அறுபத்து மூவர் பட்டியல் இதோ:



எண்
பெயர்குலம்இடம் 
1அதிபத்தர்பரதவர்நாகப்பட்டினம் 
2அப்பூதியடிகள்அந்தணர்திங்களூர் 
3அமர்நீதி நாயனார்வணிகர்பழையாறை 
4அரிவட்டாயர்வேளாளர்புள்ளமங்கலம்
5ஆனாய நாயனார்இடையர்திருமங்கலம் 
6இசைஞானியார்ஆதி சைவர்திருவாரூர் 
7இடங்கழி நாயனார்செங்குந்தர் குல குறுநில மன்னர்புதுக்கோட்டை 
8இயற்பகை நாயனார்வணிகர்காவிரிப்பூம்பட்டினம் 
9இளையான்குடிமாறார்வேளாளர்இளையான்குடி 
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்திறுத்தளையூர்
11எறிபத்த நாயனார்
செங்குந்தர் 
கரூர் 
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்பெருமங்கலம் 
13ஏனாதி நாதர்சான்றார்ஏனா நல்லூர் 
14ஐயடிகள் காடவர்கோன்குறுநில மன்னர்காஞ்சி 
15கணநாதர்அந்தணர்சீர்காழி 
16கணம்புல்லர்
செங்குந்தர் 
சிதம்பரம் 
17கண்ணப்பர்வேடர்காலஹஸ்தி
18கலிய நாயனார்செக்கார்திருவொற்றியூர் 
19கழறிற்றறிவார்அரசர்கொடுங்கோளூர் 
20கழற்சிங்கர்குறுநில மன்னர்காஞ்சி 
21காரி நாயனார்
செங்குந்தர் 
திருக்கடையூர் 
22காரைக்கால் அம்மையார்வணிகர்காரைக்கால் 
23குங்கிலியகலையனார்அந்தணர்திருக்கடையூர் 
24குலச்சிறையார்மரபறியார்மணமேற்குடி
25கூற்றுவர்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
களப்பால்
26கலிக்கம்ப நாயனார்வணிகர்பெண்ணாடகம் 
27கோச் செங்கட் சோழன்அரசன்திருவானைக்கா
28கோட்புலி நாயனார்வேளாளர்திருநாடியத்தான்குடி 
29சடைய நாயனார்ஆதி சைவர்திருநாவலூர் 
30சண்டேஸ்வர நாயனார்அந்தணர்செயஞலூர் 
31சத்தி நாயனார்வேளாளர்இரிஞூர்
32சாக்கியர்வேளாளர்சங்கமங்கை 
33சிறப்புலி நாயனார்அந்தணர்ஆக்கூர் 
34சிறுதொண்டர்சாலியர்திருசெங்காட்டங்குடி 
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்திருநாவலூர் 
36செருத்துணை நாயனார்வேளாளர்திருக்கண்ணபுரம் 
37சோமசிமாறர்அந்தணர்அம்பரகத்தூர் 
38தண்டியடிகள்
செங்குந்தர்
திருவாரூர் 
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர்காஞ்சி 
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்சீர்காழி 
41திருநாவுக்கரசர்வேளாளர்திருவாமூர் 
42திருநாளை போவார்புலையர்ஆதனூர் 
43திருநீலகண்டர்குயவர்சிதம்பரம் 
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்ராசேந்திர பட்டினம் 
45திருநீலநக்க நாயனார்அந்தணர்சியாதமங்கை 
46திருமூலர்இடையர்திருவாவடுதுறை 
47நமிநந்தியடிகள்அந்தணர்திருநெய்ப்பேறு
48நரசிங்க முனையர்
செங்குந்தர் குல குறுநில மன்னர் 
சேந்தமங்கலம் 
49நின்றசீர் நெடுமாறன்அரசர்மதுரை 
50நேச நாயனார்சாலியர்மாயவரம் 
51புகழ்சோழன்அரசர்உறையூர் 
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்அழகாபுத்தூர் 
53பூசலார்அந்தணர்திருநின்றவூர் 
54பெருமிழலைக் குறும்பர்
செங்குந்தர்
மிழலை 
55மங்கையர்க்கரசியார்அரசர்மதுரை 
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்ஆனதாண்டவபுரம்
57முருக நாயனார்அந்தணர்திருப்புகலூர் 
58முனையடுவார் நாயனார்வேளாளர்திருநீடூர் 
59மூர்க்க நாயனார்வேளாளர்திருவேற்காடு 
60மூர்த்தி நாயனார்வணிகர்மதுரை 
61மெய்ப்பொருள் நாயனார்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
திருக்கோவிலூர் 
62வாயிலார் நாயனார்வேளாளர்மைலாப்பூர் 
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்திருவாரூர்

ஆழ்வார்கள்

1) பொய்கையாழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) பெரியாழ்வார்
5) நம்மாழ்வார்
6) ஆண்டாள்
7) திருமழிசையாழ்வார்
8) மதுரகவியாழ்வார்
9) குலசேகராழ்வார்
10)தொண்டரடிபொடியாழ்வார்.
11)திருமங்கையாழ்வார்.
12)திருப்பானாழ்வார்.
                                                                                                                                                                                                                                             
திருமாலின் தசாவதாரம்!
வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக 
தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.


மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.


கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.


வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.


நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.


வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.


பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


ராமாவதாரம்: ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.


பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.


கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.


கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
                                                             திருச்சிற்றம்பலம்


ஆலகாலமும் அமுதாகும்!

விநாயகர் வழிபாடு
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர்தம் கை.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.


பிரதோச வரலாறு :

உலகாளும் நாயகியான அன்னை பராசக்தி தன்னுடைய பீடத்தில் அமர்ந்திருக்குங்கால், தேவலோகக் கன்னிகையை நடனம் ஆடப் பணித்தார். அன்னையின் ஆவலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அக்கன்னிகை, அற்புதமாக நடம் ஆடி அன்னையை உளம் குளிரச் செய்தாள். அன்னையும் உளம் குளிர்ந்து, அவள் நாட்டியத்தை மெச்சி, தன் கழுத்தில் அணிந்திருந்த மலர் மாலையை எடுத்து அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அக்கனிகையையும் பேரானந்தம் கொண்டு அம்மாலையுடன் செல்லும் வழியில் துர்வாச முனிவரைச் சந்திக்கிறார். அம்மாலையின் மகத்துவம் குறித்து முனிவரிடம் அப்பெண் கூறக் கேட்ட துர்வாசரும் மனம் மகிழ்ந்து அப்பெண்ணை வாழ்த்தினார். அப்பெண்ணும் அம்மாலை தன்னிடம் இருப்பதைவிட இம்மாமுனிவசம் இருப்பதுதான் சிறப்பாகும் என்றெண்ணி, அம்மாலையை முனிவர் வசம் ஒப்படைத்தார்.

      துர்வாச முனிவரும் அம்மாலையை நேராக தேவலோகம் எடுத்துச் சென்று, தேவேந்திரனிடம் அம்மாலையின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறி அதை அவருக்கே அளித்தார்.

      தேவேந்திரனோ, அம்மாலையைத் தன் வஜ்ராயுதம் கொண்டு வாங்கி, அதனை அருகில் நின்று கொண்டிருந்த யானையிடம் கொடுக்கிறார். யானையோ அதன் மகத்துவம் உணராமல் கீழே போட்டு காலால் மிதித்து விடுகிறது. இதனைக் கண்ணுற்ற துர்வாச முனி கடுங்கோபம் கொண்டு, தேவேந்திரனையும், தேவலோகத்தை சேர்ந்த அனைவரையும் கடுமையாகச் சபித்து விட்டுச் சென்றார். அதன் காரணமாக தேவேந்திரனும் ஏனைய தேவலோகத்தாரும், சாப விமோசனம் பெற்று, நரை, மூப்பு, மரணம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழும் ஆவல் கொண்டு நாரத முனியின் துணையுடன், பிரம்ம தேவனிடம் சென்று முறையிட்டனர்.

        பிரம்ம தேவனும் அவர்களை, பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனிடம் அழைத்துச் சென்று நடந்த விவரங்களைக் கூறி, பாபவிமோசனம் நாடினர்.

      திருமால் தேவர்களிடம், அவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் எடுத்து உண்டால், அவர்களின் சாபம் நீங்கி, பாபவிமோசனம் பெற்று, அசுரர்களின் பிடியிலிருந்து விலகுவதோடு, மரணம் நீங்கி என்றும் இளமையான தோற்றம் பெறலாம் என்றுரைத்தார். நாரதரும், யார் யார் பாற்கடலைக் கடைதல் நலம்தரும் என்பதனையும் திருமாலிடமே கேட்க, அவரும், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தே கடைதல் வேண்டும் என்றும், தேவர்கள் வால் பகுதியையும், அசுரர்கள் தலைப் பகுதியையும் பிடித்துக் கடைதல் வேண்டும் என்றருளினார்.

     இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடலை அடைந்து மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற அரவத்தை தாம்புக் கயிறாகவும் அமைத்து திருப்பாற்கடலைக் கடையும் சமயம், மந்திரகிரி மலை சாய்ந்து, கடலில் மூழ்கிப் போகும்போது தேவேந்திரன் திருமாலிடம் ஓடி முறையிடுகிறார். ஸ்ரீமந்நாராயணன் அவ்வேளையில், “கூர்ம அவதாரம் “ எடுத்து கடலுக்குள் சென்று, தன்னுடைய முதுகின்மேல் மந்திரகிரி மலையை தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். அந்த நாள் பத்தாவது திதியான தசமித் திதியாகும். 

       பிறகு தொடர்ந்து தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்து வரும்போது, மறுநாள் 11 வது திதியான ஏகாதசித்திதியாகும். வாசுகி வலி யினால் ஏற்பட்ட துன்பம் தாளாமல் கடலில் நஞ்சை உமிழ்ந்தது. கடலிலும் நஞ்சு உண்டானது. கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி கக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து “ஆலாலம்” ஆனது. கடல் முழுவதும் நஞ்சாய் ஆனது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணு மூர்த்தியும்  கடும் நஞ்சினால், நீலநிறமானார். இதைக் கண்ணுற்ற வானவர்கள் அஞ்சி, நடுங்கினர். திரும்பவும் திருமாலின் பதம் நாடினர். திருமாலும், நான்முகனும் சேர்ந்து, தேவர்களை திருக்கைலாயம் செல்லும்படிக் கூறினர். அனைவரும் ஒன்று சேர்ந்து கைலாயம் விரைந்தனர்.

    திருக்கையிலையில் சிவபெருமான் சந்நிதியில் நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி, காவல் புரிந்து கொண்டிருந்தார். தேவர்கள் முதலில் நந்திதேவனை வணங்கி, திருப்பாற்கடலைக் கடையவேண்டிய காரணத்தையும், அதனால் நேர்ந்த இன்னல்கள் குறித்தும் விவரமாக நந்திதேவனிடம் கூறி, அந்த இன்னல் தீர்க்கும் பொருட்டேத் தாங்கள் அகிலாண்டகோடி நாயகனைக் காண வந்த சேதியும் கூறினர். நந்திதேவனும் இவர்களை வாயிலிலேயே நிறுத்திவிட்டு, சிவபெருமானிடம் சேதி சொல்லி, சர்வேஸ்வரனின் அழைப்பிற்குப் பிறகு தேவர்கள் , நவரத்தினமணி பீடத்தில் எழுந்தருளியுள்ள சிவ சக்தியைக் கண்டு, தங்கள் இன்னல்களைக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டி இறைஞ்சினர்.

       சிவபெருமானும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் பொருட்டு, அருகில் நின்றிருந்த தன் தொண்டனான சுந்ததரை திருநோக்கம் செய்து, “ சுந்தரா, அந்நஞ்சை, அவ்விடம் அகற்றி, இவ்விடம் கொண்டுவருவாயாக”, என்று பணித்தார். சுந்தரரும், மாலைப்பொழுதான காரணத்தினால், வானவர்கள் அணுக இயலாத அக்கொடிய விடத்தை நாவற்கனி போன்ற வடிவத்தில் திரட்டி, உருட்டிக் கொண்டுவந்து சிவபெருமானிடம் கொடுத்தார்.திரிசடைப்பெருமானோ, அக்கொடிய விடத்தை, அமரர்களான தேவர்கள் வாழும் பொருட்டு அமுதம் போல அதனை உண்டருளினார். அவ்விடம் உள்ளே சென்றால், உள் முகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமே என்றும், உமிழ்ந்தாலோ வெளிமுகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமாதலாலும், உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார்.

     இக்காரணத்தினாலேயே எம்பெருமானின் செம்பொன்மேனியானது, கன்னங்கரிய மேனியானது. இக்காரணத்தினாலேயே ஐயனுக்கு, “மணிகண்டன்” மற்றும் “திருநீலகண்டர் “ என்றும் பெயர் ஏற்பட்டது. இது நிகழ்ந்தது, ஏகாதசி திதியன்று மாலைப் பொழுதாகும். சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலைக் கடையும்படிப் பணித்தருளினார். அவ்வாறே, தேவர்களும், அசுரர்களும் சென்று திரும்பவும் திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டனர். 

      தேவர்கள் கடையும் போது, அதிலிருந்து, இலட்சுமி ஐராவதம் என்ற வெண்யானை, காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைஸ்வரம் என்ற குதிரை முதலானவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இலக்குமியைத் திருமால் எற்றருளினார். மற்றவற்றை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். 

         தேவர்கள் தொடர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தனர். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றலாயிற்று ! தேவர்கள் அதனைப் பகிர்ந்து உண்டனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சியில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து , இவற்றுக்குக் காரணமான ஈசனையே வணங்க மறந்து விட்டனர். பிறகு பிரம்மதேவர், தேவர்களின் தவறை உணரச் செய்து, அவர்களை சிவபெருமானிடம் சென்று பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளும்படி வேண்டச் செய்தார். 

      பரம்பொருளான எம்பெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு திருக்கயிலையில் அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையிலான, பிரதோச வேளையில் தம் திருமுன் இருந்த ரிசப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகையைக் காண திருநடனம் செய்தருளினார்கள். தேவர்கள் அதைகண்டு பேரானந்தம் கொண்டு, சிவபெருமானை வணங்கினர். அதுமுதல், திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோச காலம் என்று வழங்கலாயிற்று. இது கார்த்திகை மாதம் சனிக் கிழமையன்று நடந்ததால் சனிப்பிரதோசமாகும். பிரதோசம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியதாம். அனைத்து உலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என்று அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=O1QFoxjVCQs


shivaparvathi.jpg

  பிரதோச விரதம்

பிரதோச விரதம், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதி அன்று நீராடி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.சுவாமிக்கும், அம்பிகைக்கும் அபிசேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது சிவன் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிசேக ஆராதனைகள் பிரதோச காலத்தில் நடக்கும். அதில் கலந்து கொண்டு அருள் பெறலாம். பிரதோச பூசையன்று முதலில் நந்தி தேவருக்கு பூசை நடைபெறும். சிவபெருமான் பிரதோச காலத்தில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருநடனம் புரிந்தார். 

இப்பிரதோச வேளையில் பூலோகம் மட்டுமல்லாமல், ஈரேழுலகத்தில் வசிப்பவர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரதோசத்தின் வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும். குறிப்பாக தேவர்கள் தாங்கள் பிரதோச வழிபாடு செய்வதோடு அவ்வழிபாடு செய்பவர்களுக்கும் தாங்களே முன்வந்து உதவுவதாக புராணங்கள் கூறுகின்றன. 

திருவாரூரில் உள்ள சிவாலயத்தில்தான் முதன் முதலில் பிரதோச பூசை ஆரம்பித்துள்ளது. தேவலோகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தான் முதன் முதலில் இப்பூசையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். பிரதோச தினத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்து பிரதோச தரிசனம் முடிப்பது அதிக நற்பலனை அளிக்கவல்லது என்பது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ‘பிர’ என்பதன் பொருள் பாவம், அந்த பாவத்தைப் போக்கும் தோசம் என்பது நேரம் என்பர் ஆன்றோர். 

பிரதோச காலத்தில் சிவபெருமான் அனைத்துப் பொருட்கள், அதாவது உயிருள்ள மற்றும் ஜடமான அனைத்துப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கின்றார். அதனால் பிரதோச காலம் என்பது அகிலாண்ட நாயகனான பரமேச்வரனை தியானம் செய்வதற்கும் அந்த ஈச்வரனையே தம் வசப்படுத்திக் கொள்வதற்கும் உகந்த காலமாகும். பிரதோச வேளையில் ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் போது உடல், மனம் இரண்டும் தூய்மை பெறுகிறது. அதனால் பல நன்மைகளும் விளைகின்றது. பிரதோச காலத்தில் சிவபுராணப் பாடலைப் பாடி வழிபடுதல் நலம். 

பிரதோச காலங்களில் ஐந்து வகையுண்டு.
1. நித்ய பிரதோசம் : தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையுள்ள காலகட்டமே நித்ய பிரதோசம் எனப்படும்.
2. பஷ பிரதோசம் : வளர்பிறையில் [ சுக்லபட்சம்] சதுர்த்தி திதியில் மாலைக் காலமே பஷ பிரதோசம் எனப்படும்.
3. மாத பிரதோசம் : தேய்பிறையில்
 [ கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் வரும் பிரதோசமே மாத பிரதோசம் எனப்படும்.
4. மஹா பிரதோசம் : தேய்பிறையில் [கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் சனிக்கிழமையில் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹாபிரதோசம் எனப்படும்.
5. பிரளய பிரதோசம் : பிரளய காலத்தில் இவ்வுலகின் அனைத்து சீவராசிகளும் சிவனிடம் ஒடுங்கும். அதுவே பிரளய பிரதோசமாகும்.

பிரதோச பூசை செய்தால் ஒருவருக்குக் கிட்டும் பலன்கள்.
1. துன்பம் நீங்கி இன்பம் எய்துவர்.
2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.
3. கடன் நீங்கி தனம் பெறுவர்.
4. வறுமை ஒழிந்து செல்வம் சேரும்.
5. நோய் நீங்கி நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கி ஞானம் பெறுவர்.
7. பாவம் தொலைந்து புண்ணியம் எய்துவர்.
8. பிறவி ஒழிந்து முக்தி எய்துவர்.

ஒரு வருட பலன் : சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோச தினத்தன்று பிரதோச வேளையாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் அன்று, முழுவதும் விரதம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் கோவில்சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.
மஹா பிதோசம் : 
ஐந்து வருட பலன் : சனிக்கிழமை வரும் பிரதோச வேளையில் நாள் முழுவதும் விரதமிருந்து சிவாலயம் சென்று வழிபாடு செய்தால் ஐந்து வருடம் தினமும் தவறாது கோவிலுக்குச் சென்று வழிபடும் புண்ணியம் கிட்டும். 
பஞ்சமாபாபமும் விலகும் என்பர்.

பிரதோச காலத்தில் நந்தீஸ்வரர் பூசை.
1. ஒவ்வொரு பிரதோச வேளையிலும் சிவபெருமானை பூசிப்பதற்கு முன் நந்தியெம்பெருமானை பூசிப்பது நலமாகும்
2. பிரதோச வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் இறைவனை தரிசித்து வணங்கினால் கடன், வறுமை, நோய், பயம், மனகிலேசம், மரணவேதனைகள் நீங்குதல், புத்திர பாக்கியம் பெறுதல், காரியசித்தி பெறுதல் ஊக்கத்தை உண்டாக்குதல், சகல சௌபாக்கியங்களையும் பெறுதல் இவைகளுடன் கைலாயமும் அடைந்து இம்மை, மறுமையில் அனைத்து நன்மைகளையும் பெற்று பயனடைவர்.
3 . எனவே பிரதோச காலத்தில் நந்தியெம் பெருமானின் தரிசனமும் பூசையும் பெறும் பலனளிக்கக் கூடியதாகும்.
பிரதோச பூசையன்று முக்கிய அபிசேகப் பொருள்களும் அதன் பலனும்:
1. அபிசேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்.
3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்.
4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்.
5. பஞ்சாமிர்தம் கொடுத்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்.
6. நெய் கொடுத்தால் முக்திப் பேறு கிடைக்கும்.
7. இளநீர் கொடுத்தால் - நன்மக்கட்பேறு கிட்டும்.
8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்.
9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுக வாழ்வு கிட்டும்.
10 சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்.
11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்.
பிரதோச நாளன்று கூடியவரை விரதம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோசப் பலன் முழுமையாகக் கிட்டும்.
நந்தியெம் பெருமான் வழிபாடு.
ஐயிரு புராணநூல் அமலற்கு ஓதியும்
செய்யபன் மறைகளும் தெரிந்து மாயையான் 
மெய்யறு சூள்புகல் வியாதன் ஈட்டிய
கையறு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.
நந்தீஸ்வரர் பெருமை 
நந்தியெம் பெருமான் தன்னை
  நாள்தோறும் வணங்குவோர்க்குப்
பக்தியால் ஞானம் சேரும்
   பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கிக்
   குன்றுபோல் செல்வம் சேரும்
சிந்தையில் அமைதி தோன்றும்
   சிறப்புறு மக்கள் சேர்வர்
இந்திர போகம் கிட்டும்
   இணையிலா வாழ்வு தானே
உளம்நிறை எண்ணம் கூடி
   உயர்ந்திடும் வாழ்வு தானே.


shiv5.jpg

சண்டீஸ்வரர் வழிபாடு

பொன்னக் கடுக்கை முடிவேய்ந்த 
  புனிதற்கு அமைக்கும் பொருள் அன்றி
மின்னும் கலன்ஆடைகள் பிறவும்
  வேறுதமக்கு என்று அமையாமே
மன்னாந் தலைவன் பூசனையின்
  மல்கும் பயனை அடியார்கள்
துன்னும்படி பூசனை கொள்ளும்
  தூயோன் அடித்தா மரைதொழுவாம்.

நலம் தரும் நந்தி

கந்தனின் தந்தையைத்தான் கவணமாய் சுமந்துசெல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தை காக்க வந்தாய்
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்து எம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்:களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவை சூடிடும் நந்தி தேவா
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
தஞ்சையில் பெரியநந்தி தளிருடன் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சடனாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.

      பஞ்ச புராணம்

இடரினுந் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
  கடல்தனி லமுதொடு கலந்த நஞ்சை
   மிடறினி லடக்கிய வேதியனே
    இதுவோ எமை ஆளுமா
   றீவதொன்றெமக் கில்லையேல்
     அதுவாஉன தின்
    னருளாவடுதுறை அரனே -- தேவாரம்

சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உன்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
ஈசன்னடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை 
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்
கண்னுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்குமூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
வலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்து அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் 
தாயிற் சிறந்த தயாவானதத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தே ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியன்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கும் அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணிக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியெ
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் என் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

            திருச்சிற்றம்பலம்

lord-shiva_912.jpg


வாழ்த்து 

வான்முகில் வழாது பெய்க
 மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
  குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
  நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
  விளங்குக உலகம் எல்லாம்.

ஆலய தரிசன விதி முறைகள் :

1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.

2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.

3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.

4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.

5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.

6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.

7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.

8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.

9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.

10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும். 
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.

 தீபம் ஏற்றும் முறை :

வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.

நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.

தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :

கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.

மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.

வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.

திரி ஏற்றும் முகப்பக்கம் :

ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.

இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.

மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.

நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்

ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.



திரி தரும் பலன்கள் :

பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.

தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.

வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்

புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.

புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

அம்மை துதி :

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.

முருகப் பெருமான் துதி:

கொன்றை வேணியார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகினார்.

அம்பலவாணன் துதி :

1b31frontlight.jpg

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக்
கருத்து இருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்ததியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே.

குறிப்பு :

வழிபாட்டின் தொடக்கத்திலும் நிறைவிலும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி மகுடம் சொல்வது நலமாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி !!

        திருச்சிற்றம்பலம்.



திருக்குறள் அனைத்து சமயங்களுக்கும் உரிய பொது மறையாகும். இதில் நேரடியாக இல்லாமல் 
மறைமுகமாகச் சில புராண வரலாறுகள் சுட்டப்படுகின்றன. அவற்றிலென்று சிவபெருமான் நஞ்சு 
உண்ட வரலாறாகும். தேவர்கள் தாங்கள் உயிர்  வாழ்வதற்காக அவருக்கு நஞ்சினை அளித்து 

அருந்தும்படி வேண்டினர். இறைவன் அதனை மறுத்திருக்கலாம் என்றாலும் நயத்தக்க நாகரீகமும் 

பண்பாடும் காக்க வேண்டி அதனை உண்டு அவர்களைக் காத்து அருள் புரிந்தார். இந்த வரலாறு 

மறைமுகமாகத் திருக்குறளில்..,


                              பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்
                              நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்.
-          என்று குறிக்கப்பட்டுள்ளது.

 நமது சமயம் விஞ்ஞானத்தின் அடிப்படை தத்துவம் கொண்டது.
சரி, விஞ்ஞானம் என்ன கூறுகிறது.
பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து இவ்வுலகைத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள் 
முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான். ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷணு, மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினர். இந்த நால்வரையும் சதுர்வேதங்கள் என்றும் 

குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணங்களும் ஆவர். பாரசக்தி, பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன் 

இவர்களின் சக்திகளைக் கொண்டு அறிவியல் நிபுணர்கல் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாக சுட்டிள்ளனர்.



 பராசக்தி       -  கரியமிலா வாயு [ Carbon Dioxide ]
 மகாவிஷ்ணு   -  பிராண வாயு    [ Oxygen ]
 பிரம்மதேவன்  – நைட்ரஜன்       [ Nitrogen ]
 மகேஸ்வரன்  – ஹைட்ரஜன்      [ Hydrogen
Asrto Physics என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துகொள்ளலாம். 
திரிமூர்த்தி என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் “எலக்ரோன்” (Electron ), ”நியுட்ரோன்”,(Neutron)
, “புரோட்டன்” (Proton) - என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே.

எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்து விட்ட மையப்
புள்ளியாக ஆகிறார்.  புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமையின் கீழ் பிரம்மதேவன் 
சிருஷ்ப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்பவராகவும்
பொறுப்பேற்றனர்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயமாக ஆதிபராசக்தி திகழ்கின்றாள். 
அவளுக்கு துணையாக :-      
                             “ எலக்ரோன்” (Electron), - பிரம்மதேவனும்,
                             ” நியுட்ரோன்”, (Neutron), - விஷ்ணுவும்,
                            “  புரோட்டன்” (Proton)   - மகேஸ்வரனும்,…., 
                                                                 --  விளங்குகின்றனர்.
இதை கண்ணுறும்போது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் வெளியான அரும்பெரும் 
தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகிறது.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். “கார்பன்’ தான் உலகில் சக்தி பெற்ற உலோகம். 
இந்த உலோகமே காந்த சக்தி பெற்ற உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில் அதிகமாக இருப்பதால் 
மற்ற கிரங்களையும் அதைச் சுற்றி வரச் செய்கிறது.

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோதுதான் முதன் முதலில் இரும்பு சக்தி வெளியானது. 
இரும்பு சக்தி மகாலெட்சுமி. மகாலெட்சுமி கருமை நிறமாகக் காட்சி தந்தாள். அதுவே கார்பனாகிய 
இரும்பு சக்தி.  இதிலிருந்து செம்பு, சொர்ணம், கனகம், வைரம் வெளியானது என்பது  இங்கு 
குறிபிடத்தகக்கதாகும். மகாலெட்சுமி என்ற இரும்புச் சக்தியைக் காப்பாற்றவே விஷ்ணு வந்தார். 
உலகின் ஒப்பற்ற சக்தியான இரும்புச் சக்தியைப் பத்திரப்படுத்த வேண்டும்.
       பாற்கடலில் பிறந்த பாவையான மகாலெட்சுமி கருநெய்தல் பூவால் புனைந்த
       மாலையை ஏந்தி, உவந்து திருமாலுக்குச் சூட்டி அவனைத் தழுவினாள்
இச்செய்தி செவ்வை சூடுவார் பாகவத்தில் இடம் பெற்றுள்ளது. 

இதனை பிரதோஷ காலத்தில் கூறி பெண்கள் வழிபட்டு வந்தால் நல்ல கணவன் கிடைப்பான்
என்றும், இப்பாடலை ஓதும் அனைவருக்கும் திருமகளின் அருள் கிடைக்கும். அப்பாடலை 
இனிக் காணலாம்.

              ’ உளத்திடை இவ்வாறு உன்னி
               உவந்திலன் எனை என்றாலும்
               களிப்புறும் யானே சென்று
               கலப்பன் என்று “அமலை” யாவும்
               அளிப்பவன் அலங்கல் சூட்டி
               அருமனை “முதலி” மார்பின்
               துளிப்பு யன் மணக்கு மின்னில்
               தோய்ந்தனன் துயக்கு அற்றான்.
              ...................................................................................................
திருப்பாற் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை நினைவுக் கொள்ளூம் வண்ணம், இன்றும் திபேத்தியர்கள்
அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்கிறார்கள். திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் தேவர் பள்ளத்தாக்கில்
God of Valley -இல் திபேத்திகள் பெரும் திரளாகக் கூடி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
வண்ணத் தோரணங்கள் கட்டி, கொடியேற்றும் விழாவும் உண்டு.

திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் கடலைக் கடைவதாக பாவனையில் இரு பக்கதிலிருந்தும் கயிற்றை
கட்டி இழுக்கிறார்கள். இறுதியாக சுமார் 15 அடி உயரமுள்ள கொடி மரத்தை கயிற்றின் மூலம் தூக்கி 
நிறுத்துகிறார்கள்.அந்த கொடி மரம் மறுவருடம் வரை இருக்கும். மறு வருடம் விழாக்கொண்டாடி புதிய
கொடி மரத்தினை நடுவார்கள்.
            இமையாது உயிராது இருந்தாய் போற்றி
             என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
             உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
             ஊழி ஏழான ஒருவா போற்றி....
                                              -- திருநாவுக்கரசர்-



                                                                      
கீழேயுள்ள PDF பைலைப் படிக்கவும்.
http://xa.yimg.com/kq/groups/18997398/1898998426/name/Devas.pdf










சக்தி பீடங்கள் மொத்தம் 51.
அவற்றுள் முக்கியமானவை ஒன்பது.

1. ஸ்ரீ நைனா தேவி - இமயமலைப் பகுதியில் சதியின் இரு கண்கள் விழுந்த இடம்.
 2. ஸ்ரீ சிந்த்த பூர்ணா தேவி - பாதங்களின் சில பாகங்கள் விழுந்த இடம்.
 3. ஸ்ரீ ஜ்வாலாமுகி - நாக்கு விழுந்த இடம். ஜ்வாலாமுகி சன்னிதியில் அம்மனுக்கு விக்ரகம் எதுவும் கிடையாது. இங்கு ஜோதி வடிவாக அம்பாள் காட்சி தருகிறாள்.
 4. ஸ்ரீ வஜ்ரேஷ்வரி - மார்பகங்கள் விழுந்த இடம்.
 5. ஸ்ரீ வைஷ்ணோ தேவி - சதியின் ஒரு புஜம் விழுந்த இடம்.
 6. ஸ்ரீ சாமுண்டா தேவி - இங்கு சதியின் உடல் பகுதி எதுவும் விழவில்லை. ஆனால், அன்ன சண்ட, 
 முண்ட அசுரர்களை வதம் செய்த இடம் என்பதால் இரட்டிப்பு சக்தி வாய்ந்த மிகவும் உக்கிரமான     தலம்.
 7. ஸ்ரீ மானஸா தேவி - சதியின் தலை விழுந்த இடம்.
 8. ஸ்ரீ ஷாகும்பரி தேவி - தலையின் நெற்றிப்பகுதி விழுந்த இடம்.
 9. ஸ்ரீ காலிகாஜி - சதியின் கூந்தல் விழுந்த இடம். 
    இதனை சக்தி பீடமாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், மிகப் புனிதமான 
     மகா சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி திங்கள்

 புரட்டாசி சனிக்கிழமை. ஒரு பழமையான மரபு இன்று அனுசரிக்கப்படும் விழா.

தீவிர சைவர்களைத் தவிர மற்றவர்கள் இன்று விரதம் இருந்து, திருப்பதி வெங்கடாசலபதியை
வழிபடுகிறார்கள்..


எனது கடந்த காலங்களில் புரட்டாசி மாதங்களில் தமிழ் நாட்டிலிருந்த போது இந்த காட்சியை

கண்டுள்ளேன். புரட்டாசி சனிக்கிழமை அதிகாலையில்,நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு,

கையில் ஒரு செம்பு ஒன்றை ஏந்திய வண்ணம் வீடுவீடாகச் செல்வார்கள். வீட்டுக்காரர்கள்

செம்பில் அரிசி போடுவார்கள். செம்பு நிறைந்தவுடன் வீடு திரும்புவார்கள். அந்த அரிசியைச்

சமைத்து ஏழைகளுக்கு உணவாகப் படைப்பார்கள். அல்லது கோயிலில் கொடுப்பார்கள்.

இதன்  அடிப்படையே - காருண்யம், தர்மம், இரக்கம் – இது  பெரிய தொண்டு!தானே உஞ்சவிருத்தி

செய்து, அதனையும் தானே உண்டுவிடாமல், அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது என்பது பெரிய

தொண்டு அல்லவா.

ஆதிசங்கரர் தன்னுடைய ஐந்தாவது வயதில் ஒரு குறிப்பிட்ட மரபின்படி உஞ்சவிருத்தி செய்யப்

போனார்.
அன்று ஏகாதசி. அன்று ஒரு பரம ஏழையின் வீட்டின் முன்னால் நின்று "பவதிபிக்ஷந்தேஹி" என்று

குரல் கொடுத்தார். அவ்வாறு மூன்றே முறைதான் குரல் கொடுக்கலாம். அதற்குள் ஏதேனும் பிட்சை

கிடைக்கவில்லை  என்றால் இடத்தைக் காலி பண்ணிவிடவேண்டியதுதான். அன்று பட்டினிதான்.



ஆதிசங்கரர் அப்படி ஒரு ஏழையின் மனைவி வீட்டில் முன் நின்று "பவதிபிக்ஷந்தேஹி" என்று

குரல் கொடுத்தார் அவ்வீட்டின் மனைவி உணவு ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள்.
ஒன்றுமே கிடைக்கவில்லை. காரணம் அவளே பரம் ஏழை ஏகாதசி விரதம் முடிந்து, உண்ணா

நோன்பை முடிப்பதற்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனி இருந்தது. அது இல்லையெனில்

நோன்பை முடிக்கமுடியாது. மரபும் கெட்டும்விடும்.
             தர்மமா, நோன்பு மரபா?
டக்கென்று நெல்லிக்கனியை எடுத்துப்போய், சங்கரரின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டாள்.
அந்த உண்மையா அன்பு உள்ளதையும், அருள் உள்ளத்தை அறிந்தார்.

அந்த கருணை உள்ளத்தை கண்ட ஆதிசங்கரர் உள்ளத்தில் கழிவிரக்கம் பீரிட்டு, பெருகி

ஓடியது,அது பொன் மகளின் மீது அழகிய துதியாக உருவெடுத்தது. கூரையை பிளந்து

பொன்னாக கொட்டியது.
அந்த கனகதாரா தோத்திரத்தின் 21ஆம் பாடலின் போது பொன் நெல்லிக்கனிகளாக மழை
பெய்தது.

புரட்டாசி சனிக்கிழமை இவ்வாறு செம்பில் அரிசியை உஞ்சவிருத்தியில் வாங்கி சமைத்துப்

போடுவதற்குப் பெயர் "கோபாலம் எடுத்தல்" என்பார்கள்..


வேங்கடவனையும் தாயாரையும் ஒருசேர  எண்ணி துதி பாடுவோம்
."அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" - அப்பர் வாக்கு.



# [கனகதாரா தோத்திரத்தின் 21ஆம் பாடலை நமது கோப்பில் இருந்தது. தேடினேன்  கிடைக்கவில்லை.

 ஒருகால் பொன்னின் விலை அதிகரித்துவிட்டதால் அரங்கனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதோ?!]



# சில காலத்திற்கு முன் செய்தி தாளில் ஒரு படம் பார்த்தேன். “கனகதாரத்தின் போது’’ கொட்டிய வீடு

பிரசிரித்து இருந்தார்கள். பழைய வீடு. கேளராவில்  இருப்பதையும் செய்தியாக போட்டு இருந்தார்கள்



 


கடவுள் இருக்கிறாரா இல்லையா


ஒரு நாள் உலகின் ஓவியர்களுக்கு எல்லாம் யாரோ ஒருவரின் ஒரு அறிவிப்பு வந்ததுஅது, "நான் நாளை ஒரு நாள் முழுதும் உங்களுக்கு என் நிழலைக் காட்சியாகத் தருவேன்". என் நிழலை மட்டுமே பார்த்து என்னை வரைந்துஅதனைக் கொண்டு என்னை யார் அடையாளம் கண்டறிகிறீர்களோஅவர்களுக்கு நான் மிகச்சிறந்த பரிசை அளிக்கப் போகிறேன் என்பதாகும்ஆனால் ஒரே ஒரு நிபந்தனைஅது "என் நிழலை ஒவ்வொரு ஓவியனும் தனித்தனியாக ஒரே முறை மட்டும் பார்க்கலாம்".

போட்டிக்கான நாள் வந்ததுதன்னை மிகச்சிறந்த ஓவியர் என்று நினைத்துக் கொண்ட ஓவியர்கள் ஒவ்வொருவரும் நிழலைத் தனித்தனியாகக் காணச் சென்றனர்நிழலைக் கண்டு வந்தவர்கள் ஒவ்வொருவரும் உயரமான உருவமாய்குள்ளமான உருவமாய்பருமனாய்ஒல்லியாய் என பலவிதமாய் தான் கண்ட நிழலை வரைந்தனர். 

காரணம் அந்நிழலைத் தருபவரின் மேல் விழும் சூரியனின் கதிருக்கேற்ப நிழல் மாறியதேஇது மட்டுமல்ல ஒரு ஓவியர் தான் காணச் சென்ற போது அவருக்கு நிழலே கிடைக்கவில்லைகாரணம் சூரியனின் கதிர்கள் நிழலைத் தரும் உருவத்திற்கு செங்குத்தாய் அமைந்து விட்டது. 
கடைசியாக உருவாதைப் பார்க்க காத்திருந்த ஒரு ஓவியன்அனைவரின் ஓவியத்தையும் பார்த்து வெறுத்துப் போய்நிழலே இல்லை என்று நிழலைப் பார்த்து விட்டு வந்த ஒருவன் சொல்கிறான் என்றால் அதனைக் காணவும் வேண்டுமா என்று தன் கண்களை மூடியவாறு நிழலைக் காணச் சென்று நிழல் விழும் இடத்தைக் கடந்து வெளியே வந்து நிழல் தருபவனே இல்லை என்றும் கூறலானான்.
ஓவியர்கள் ஒவ்வொருவரின் உருவத்தின் நிழலும் வேறுபட்டதாக உள்ளதாலோஅல்லது நிழலில்லா உருவம் என்று ஒருவன் சொன்னதாலோ அல்லது கண்ணை மூடிக் கொண்டு ஒருவன் உருவமே இல்லை என்று சொன்னதாலோ உருவம் இல்லாததாகி விடுமா?

"உருவம் ஒன்றேபார்க்கும் விதத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப உருவம் மாறுபடுகிறது என்பது தானே நிஜம்.
இப்பொழுது நீங்கள் சொல்லுங்களேன்கடவுள் இருக்கிறாரோஇல்லையா...









No comments:

Post a Comment