http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Thursday, July 8, 2010

‘அற்புதக்கோயில்கள்

திரு.வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘அற்புதக்கோயில்கள்‘ என்ற புத்தகத்துக்கான (வரம் வெளியீடு) முன்னுரையிலிருந்து சில பகுதிகளை புகைப்படக் கட்டுரையாக அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்.

திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர்

“கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான். அந்தந்த நாட்டு மதங்களைச் சார்ந்து அங்குள்ள கோயில்களை மசூதி என்றும், சர்ச் என்றும், விஹார் என்றும் சினகாக் என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். எல்லாம் பவித்திரமான இடங்கள் தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும். அதிலும் தமிழ் நாட்டின் கோயில்கள் நம் மனதில், நம் வாழ்க்கையில், தமிழ் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளதற்கு இணையாக வேறு எதையும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். அதைத் தான் கோயிலே ஒரு அற்புதம் என்று சொன்னேன்.”

   திருவரங்கம் ராஜகோபுரம்

கோயில் எல்லோருக்கும் வழிபடும் இடமாக உள்ளது, உலகம் முழுதிலும். பிரார்த்தனை செய்யும் இடமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆண்டவனை நிைனைந்து கொள்ளும் இடமாக உள்ளது. அங்கு சென்று நம்மை இழக்கும் இடமாக, நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இடமாகவும் உள்ளது. இம்மாதிரியான சிந்தனைகளும் எண்ணப்போக்கும் வழிமுறையும் நம் மனதை செயல்களை அவ்வப்போது சுத்திகரித்துக் கொள்ளும் இடமாகவும் இருந்துவருகிறது. பெரும்பாலான கோயில்கள், அதாவது வழிபாட்டு இடங்கள் கட்டிடக் கலை உன்னதத்தை உணர்த்தும் சின்னமாகவும் இருக்கிறது. வானை முட்டும் கோபுரங்கள், மினார்கள் நம் மண்ணுலக அன்றாட வாழ்க்கைப் பிணைப்புகளிலிருந்துகொண்டும் அல்லது அவற்றிலிருந்து விடுபட்டும் வானை நோக்கி நம் பார்வையை இட்டுச் செல்லும் சின்னமாகவும் திகழ்கின்றன. பரந்து விரிந்து மண்ணையும், நெடிது உயர்ந்து விண்ணையும் இணைக்கும் தத்துவத்தை படிமமாக்குவது கோயில். மண்ணில் கால் பதித்து விண்ணை லட்சியமாகக் காட்டுவது கோயில். கோயிலின் உள்ளே கால் வைத்ததுமே அதன் பிரம்மாண்டம் நம்மை ஆட்கொள்ளும். நம் அகங்காரத்தை அழிக்கும். இப்பிரபஞ்சத்துள் நம் சிற்றுருவை நினைவு படுத்தும். உலகம் முழுதுக்கும் இவை பொதுவான விஷயங்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்

ஆனால் தென்னகக் கோயில்கள் அவற்றின் ஆயிரம் இரண்டாயிரம் என நீளும் வாழும் சரித்திரைத்தைப் பறை சாற்றும். வாழும் சரித்திரம் என்றேன். அழிந்து அல்லது அழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் புணரமைக்கப்பட்ட நீண்ட வரலாற்று நினைவுகள் கொண்ட கோயில்கள் பல இந்தியாவில் உண்டு. இன்றும் நாம் காணும் சோமநாதபுர கோயிலோ காசி விஸ்வநாதர் ஆலயமோ அவற்றின் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்தவை அல்ல. ஆனால் காஞ்சி கோயில்களோ, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோ அவற்றின் தொடக்க கால உருவை இன்னும் தம்முள் கொண்டவை. அவை 1500- 2000 ஆயிரம் கால நீட்சியின் சின்னங்களை, சாட்சியங்கள் தம்முள் கொண்டவை. பூதத்தாழ்வாரும் சுந்தரரும் வழிபட்ட கோயில்கள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றன.

தஞ்சை பெரிய கோயில் பிரகாரம்

ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பல பிரகாரங்களை, மண்டபங்களைத் தாண்டி கற்பக்கிரஹம் வரையிலான நம் சில நூறு காலடித் தடங்கள், இன்றிலிருந்து பல சரித்திர காலகட்டங்களைக் கடந்து தமிழ் நாகரீகத்தின் வரலாற்றுத் தொடக்கத்தைத் தொடும் நீண்ட பயணத்தின் தடங்களை நமக்கு வழியில் பல சான்றுகளோடு உணர்த்தும். கோயில் பிரகாரச் சுற்றுச் சுவர் கல்வெட்டுக்கள் கோயிலின் அவ்வக்கால நிர்மாண, நிர்வாக சரித்திரத்தைச் சொல்லும் ஆவணங்களாகும்.

கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம், திருவரங்கம்

தமிழ் வாழ்க்கையே கோயிலை மையமாகக் கொண்டதுதான். கோயில் தமிழனுக்கு வாழ்வளித்தது. அவன் கலைகளுக்கு ஊட்டம் கொடுத்து வளமும் வாழ்வும் கொடுத்தது கோயில். சங்கீதமும் நாட்டியமும் ஓவியமும், சிற்பமும் வளர்ந்தது அங்கு.தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதி படைக்கக் காரணமாக இருந்தது கோயில். தமிழ் நாட்டுக் கோயில்களிலிருந்து பிறந்த பக்தி இயக்கம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம் முழுதுக்குமான கலை, இலக்கிய,மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்துள்ளது. அந்த ஆதர்சத்தின் நீட்சியை காரைக்கால் அம்மையாரிலிருந்து, பூதத்தாழ்வாரிலிருந்து தொடங்கி, இங்கு பாரதி வரையும், வங்கத்தில் தாகூர் வரையும் காணலாம். தேவாரத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் பிறப்பித்தவை இக்கோயில்கள் தாம். ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் தாம் நடைப்யணம் கொண்டு தரிசித்த பெருமாணை, அவன் வதியும் கோயிலையும், ஊரையும் பாடிக் கோயிலுக்கு வரலாற்றுச் சிறப்பும் தந்து, தமிழுக்கு இலக்கிய வளமும் தந்து, கலைகளை வாழச் செய்த போன்ற ஒரு மரபும் சரித்திரமும் உலகில் வேறு எங்கு காணப்படுகிறது?

தஞ்சை பெரிய கோயில் வெளித்தோற்றம்

தமிழ் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அதற்குக் குணமும் வழிமுறையும் தந்த சரித்திரம் கொண்டவை நம் கோயில்கள். நம் கோயில்கள் கட்டிடகக் கலை வளர்ச்சியைச் சொல்லும் நிதர்சன ஆவணம். சிற்பக் கலைக் கூடம். ஒவியக் கலைக் கூடம். தஞ்சை பெரிய கோவிலிலிருந்து காஞ்சி மாவட்ட ஏதோ ஒரு கிராமத்து துர்க்கை அம்மன் கோயில் வரை கோயில்கள் பக்திக்கு மாத்திரம் உறைவிடமாக இல்லை. நாடகத்தையும் ஆடல் பாடல்களையும் கூத்துக்களையும் நாட்டுப் புற கலை வடிவங்களையும் வளர்த்தன. ஒரு ஊரின் மையமாக இருந்து கொண்டு அந்த சமூகத்தின் மக்களின் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒன்றாக, ஒரு நாகரீகமாக அது இருந்துள்ளது. தென்னிந்திய மனதுக்கு, இன்னும் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மனதுக்கு கோயில் என்ற பதம், சப்தம், படிமம், எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது. வரலாறு, அர்ப்பணம், பிரார்த்தனை, இலக்கியம், கலைகள், தத்துவம், வாழ்க்கை முறை, தெய்வம், மீட்சி என அத்தனையும் தன்னுள் கொண்ட, ஒன்றிணைந்த ஒரு அனுபவம். கோயில் வேறு எங்கும் இத்தனை அர்த்தங்களை, அனுபவங்களைத் தரும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கோயிலே ஒரு அற்புதம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

கிறுக்கல்களால் சிதைக்கப்பட்டிருக்கும் நாயக்கர் காலத்து ஓவியம் - திருவலஞ்சுழி
ஆனால் தமிழ் வாழ்க்கை இப்போது இந்த அடையாளங்களையெல்லாம் இழந்து வருகிறது. இன்னமும் சரியாகச் சொல்லப் போனால், முனைந்து அழிக்கப்பட்டு வருகிறது. கோயில் என்னும் அற்புதம் தன் பல திறத்த, பல வண்ண அடையாளங்கள் ஒவ்வொன்றாய் இழ்ந்து வருகிறது. அந்த அழிவின் வேகமும் அளவும் குணமும் இடத்துக்கு இடம் வேறுபட்டுக் காணப்பட்டாலும், ஒவ்வொரு கோவிலிலும் அழிவு என்பது ஒரு நிச்சயத்துடன் படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. நிகழ்த்தப்பட்டு வருகிறது. கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டன.கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் அசுத்தப்படுத்தப்படுகின்றன. கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிகின்றன. பராமரிப்பு காணும் இடங்களில் அதன் வரலாற்று அடையாளங்கள், அதன் புனிதத்வம் அழிக்கப்பட்டு வருகின்றன.

போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும் இந்தத் திருவரங்க சுற்றுச்சுவர் பல நூற்றாண்டுகள் பழமையானது
தாராசுரம் கோயிலில் கொடிமரம் முன் வணக்கம் செலுத்தும் பக்தர்

ஒரு கலையுணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட சமூகத்தில், தமிழ் நாட்டின் ஒவ்வொரு கோவிலும் அதன் முழுமையில், அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு வரும். ஆனால் இந்த இரண்டும் இன்றைய சமூகத்தில் வரண்டுவிட்டன. ஒரு போலியான பகுத்தறிவின் தாக்கத்தில், கலையுணர்வும் வரலாற்றுணர்வும் அற்ற பகுத்தறிவு அது, அழிவு தான் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.


சூரிய அஸ்தமன சமயத்தில் கும்பேஸ்வரர் கோயிலின் தோற்றம், கும்பகோணம்
மனித ஜீவனில் வேதனைகளுக்கு ஏமாற்றங்களுக்கு குறையுண்டா? சில சமயங்களில் ரொம்ப சின்ன விஷயங்கள் கூட கிட்டாதவையங்கள் ஆகிவிடுகின்றன. எவ்வளவோ பெரிய தலைகள் உதவியும் கூட சாதாரண காரியங்கள் கூட நடப்பதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் முறையிட்டுக்கொள்ள தன் வேதனையைச் சொல்ல ஒரு பெரிய சக்தி வேண்டும். தெய்வ நம்பிக்கை அதைத்தான் தருகிறது. வேதனைகள், ஏமாற்றங்களிடையேயும் ஒரு நம்பிக்கை பெற்று நிம்மதி கொள்ளமுடிய வேண்டும். வறுமையிலேயே தியாகராஜர் தன் ஜீவனை முடித்துக்கொண்டவர். “ப்ரோசேவாரெவரே ரகுபதீ நினுவினா?” என்றும் “ஏமி நேரமு நன்னு ப்ரோவ எந்த பாரமு.?.” என்று எந்நாளும் முறையிட்டுக்கொண்டேதான் இருந்தார். ராமர் கேட்பார், காப்பாற்றுவார் என்ற பல மான நம்பிக்கையிலேயே அவர் ஜீவன் கழிந்துவிட்டது. அந்த நம்பிக்கை அவருக்கு பலம் தந்தது. வறுமை நீங்கவில்லை தான். ராமர் கேட்கவில்லை தான். வறுமை அவருக்கு வேதனை தரவில்லை. நாமெல்லாம் எளிய ஜீவன்கள். நமக்கு முறையிட, நம்பிக்கை தர ஒரு தெய்வம் வேண்டும். தெய்வ நம்பிக்கை நமக்கு நிம்மதியான வாழ்வு தரும்.
                                                              ******  
பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் கோவிலை பிரதட்சணம் செய்வதால் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரதட்சணம் செய்யும்போது நிதானமாக அடிமேல் அடி வைப்பது போல நடக்க வேண்டும்.
கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்.
மூன்று வலம் வந்தால் :‍‍இஷ்ட சித்தி அடையலாம்.
ஐந்து முறை வலம் வந்தால் : வெற்றிகள் கிட்டும்.
ஏழு முறை வலம் வந்தால் : ந‌ல்ல‌ குண‌ங்க‌ள் பெருகும்.
ஒன்பது முறை வலம் வந்தால் : ந‌ல்ல‌ புத்திர‌ பாக்கிய‌ம் கிட்டும்.
ப‌தினோரு முறை வ‌ல‌ம் வ‌ந்தால் : ஆயுள் பெருகும்.
ப‌திமூன்று முறை வ‌ல‌ம் வ‌ந்தால் : செல்வ‌ம் பெருகும்.
நூற்றியெட்டு முறை வ‌ல‌ம் வ‌ந்தால் : அசுவ‌மேத‌ யாக‌ம் செய்த‌ ப‌ல‌ன் கிட்டும். 

அருணாசல அருள் வரலாறு # 2
கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் கிருத்திகை பிரதோஷ நேரத்தில் மலைமேல் சிவனின் ஜோதி தரிசனம் கண்டுவணங்கிசிவனின் இடப்பாகம் பெற்றாள் உமாதேவி. அப்படி அன்னை உமாதேவி சிவனின் இடப்பாகம் பெற்ற பவழக்குன்றுப் பகுதி திருவண்ணாமலையில் காட்சி தருகின்றது. பகவான் ரமணர்சில காலம் பவழக்குன்றில் தங்கித் தவம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
 ===========================================================

திரு அண்ணாமலை கோயில் சுற்றுலா!

திரு  அண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. ஆறாம் பிரகாரம் என்று அழைக்கப்படும்

வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினாலும் கோயில் சுற்றிச் சுவர் உள்ளது.நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது.இந்த கோபுரம் 11 நிலைகளுடன  217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது. இதன் அடிநிலை 135 அடி நீளம்  98 அடி அகலம். தெற்கு திசை கோபுரம் திருமஞ்சன கோபுரம்.
 மேற்கு திசையிலுள்ள கோபுரத்தை பேய்க் கோபுரம் எனவும்வடக்கு திசையிலுள்ள கோபுரத்தை அம்மணி அம்மாள் கோபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
அருணாசலேஸ்வரரை தரிசிக்க முதலில் ராஜ கோபுரத்தின் வழியே செல்ல வேண்டும். நுழைந்தவுடன் அங்குள்ள செல்வ கணபதியை தரிசிக்க வேண்டும்.செல்வ கணபதியை எண்ணிக் கொண்டு தோப்பு கரணம் போடவேண்டும். வணங்கும் போது உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. கரணம் என்றால் மனம்புத்திசித்தம்அகங்காரம் எனப்படும். இவைகளை தோற்பது தான் தோற்புக்கரணம்
என்கின்றனர். விநாயகர் முன்பு நாம் செய்த தவற்றை உணர்ந்து வந்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகதான் தோப்புக் கரணம் போடுகின்றோம்.
       
இராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வலது புறத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்துள் ரமண ரிஷி வழிப்பட்ட பாதாள லிங்கேஸ்வரை காணலாம். ரமண
ரிஷிகள் ஆழ்ந்த தியானத்தில் பல காலம் அமர்ந்து தன்நிலை மறந்து இருந்த காரணத்தால் எறும்புகளாலும்நீண்ட காலம் அமர்ந்திருந்த காரணத்தாலும் புட்டம் அரிக்கப்பட்டு நோயுற்ற காலத்தில்இதனை நிஷ்டை மூலம் அறிந்த வேதாத்திரி சுவாமிகள் ரமண அங்கிருந்து கொணர்ந்து புண்ணுக்கு மருந்திட்டுகுப்புறமாகவே சுமார் இரண்டு மாதம் வைத்திம் செய்தாக சொல்லப்படுகிறது
       
இடது புறமாக இளையானார் சன்னதி உள்ளது.[முருகன் சன்னதி]அடுத்தாற்போல் ஒட்டி இருப்பது கம்பத்திளையார் சன்னதி. இங்கு முருகன் இரண்டாம் பிரபுட தேவாராய மன்னருக்கு காட்சி அளிக்க வேண்டும் என அருணகிரி நாதர் பக்தி பரசவத்துடன் பாடல் பாடி வரவழைத்த இடம். முருகன் கம்பத்தில் காட்சி அளித்தார். அதனால் கம்பத்திளையார் என முருகனுக்கு பெயர் வந்தது.

 இதன் தென்புறமாக சிவகங்கை புண்ணிய நதி தீர்த்தம்
அமைந்துள்ளது.சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் கீழ் புறமாக சிவகங்கை அமைந்துள்ளது.விநாயகர் சன்னதி ஒட்டியே
பெரிய நந்தி காணப்பெறும். பெரிய நந்தியின் எதிரில் காணப்பெறுவது வல்லாள மகாராஜன் கோபுரம். அடுத்து கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி.காலபைரவரை அஷ்டமிஞாயிற்றுகிழமையில்
தரிசித்தால் பில்லி,சூனியம் அகலும்.எதிரிகள் தோல்வி அடைவர்.வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

அடுத்து நான்காம் பிரகாரம் ஆரம்பமாகிறது.இப்பிரகாரத்தின் கீழ் திசையில் கிளி கோபுரம் அமைந்துள்ளது.அருணகிரி நாதர் கிளி வடிவம் தாங்கி வந்து பாரிஜாத மலர்களை கொண்டு சிவனை
வழிப்பட்டதால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்று வழங்கப்படுகிறது.கோபுரத்தினை சற்று உற்று நோக்கினால் ஒரு கிளி இருப்பதைக் காணலாம். கிளி கோபுரத்தின் உட்புறம் எதிரில் தோன்றும் 16 கால் மண்டபத்தில் தான் கார்த்திகை தீப விழாவின் போது பஞ்ச மூர்த்திகள் அண்ணாமலையை நோக்க ஏக காலத்தில் தீப தரிசன காட்சி நடக்கும்.
      
அடுத்து மூன்றாம் பிரகாரம்.இதில் சம்பந்த விநாயகர் சன்னதி.ஸ்தல விருட்சமாகிய மகிழ மரம் காணலாம்.இதில் உண்ணாமுலையம்மாள்அருணகிரி,காளத்தி லிங்கேஸ்வரர்,பழனி ஆண்டவர்,
ஏகாம்பரேசுவரர்,ஜம்புலிங்ககேசுவரர்,சிதம்பர லிங்கேசுவரர்,பிடாரிசப்த கன்னியர் சன்னதியை காணலாம்.
அதன்பின் அண்ணாமலையாரை தரிசிக்க செல்ல வேண்டும்.முதலில் பலி பீடம் உள்ளது. அங்கு தலை,கையிரண்டுஇருசெவிகள்இரு முழங்கால்,மார்பு ஆகியவை பூமியில் படும் படி
அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை,இரண்டு முழ்ந்தாள்கள் பூமியில் படும்படி பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வணங்கும் போது வடக்கு பக்கம் தலை
வைத்து வணங்கவேண்டும். அப்போது நம் மனதில் உள்ள காமம்,ஆசை,குரோதம்,லோபம்மோகம்பேராசை,மத,மாச்சர்யம் என்னும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுத்தாக உறுதி செய்து
கொள்ள வேண்டும்.
அடுத்து அருணாசல பெருமான் சன்னதி உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரம் ஆரம்பம். சகல மூலவர்களும்,உற்சவமூர்த்திகளும்சமயாசாரியார்கலும்நாயன்மார்களும்,வேணுகோபால சுவாமியும்
காணலாம்.இதன் மேல்பத்தியின் முதற்பிரகாரத்தில் தடசிணாமூர்த்தியும்,சண்டிகேசுவரரும்        விளங்குகின்றனர்.
 இருதய ஸ்தானமாக விளங்கும் அண்ணாமலை பெருமான் அரூஉருவ திருமேனியாய் காட்சி அளிக்கிறார்.
முதலில் அடியும்,முடியும் நெருங்க முடியா அண்ணாமலையானை தரிசித்து விட்டு அம்பாள் உண்ணாமுலை அம்மையை தரிசிக்கவேண்டும்.
 திருவண்ணாமலையில் கிரிவலம் [மலை வலம் வருதல்]
எங்காவது துவங்கி,எப்படியாவது முடிக்ககூடாது.மலையை சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது..இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும்.மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும்,பேசிக்கொண்டும் நடக்க கூடாது.
சாதாரணமாக நச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும். இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு.இப்போதும் பலரும் அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு. அது சாத்தியமில்லாது போது நடந்து சென்றாலே போதும். எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு
ஏற்ற மாதங்களான போதும் ஐப்பசி,கார்த்திகைமார்கழிபெளர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும்,மாதங்களும் ஆகும்.

 மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால்  தான் மலைவலம் முடித்தாக அர்த்தம். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும்.மலையின்
எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்குவதற்காக அஷ்டதிக்கு பாலகர்களில் கிழக்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை வழிபடவேண்டும்.பிறகு மலை சுற்றும் சாலையில்
நந்திகேசுவரர் சன்னதி உண்டு. இங்கு வணங்கி வழிபட்டு தான் மலைவலம் வரவேண்டும்.ஏனெனில் மலை சுற்றுகையில் நமக்கு சிவன் அளித்த அதிகார மூர்த்தி அவர். அடுத்து தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது.
இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.இந்த தீர்த்தத்தின் கரையில் அரிச்சந்திர மகாராஜாவின் சிலை ஒன்றும் உள்ளது.அதன் வழியே சென்றால் பிருங்கி மகரிஷி முனிவரின் வழிபாட்டு தலம் உள்ளது. அடுத்து தெற்கு திசைக்கு அதிபதி எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர்
 என்ற ஐதீகம் உள்ளது.இங்கு தியானம் செய்தால் நம்மிடையே உள்ள தீய எண்ணங்கள் மறையும் நினைக்கின்ற செயல்கள் நிறைவேறும்.
       
தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை பார்க்க வேண்டும்.இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் நந்தியின் தலை திரும்பி நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதை வணங்கி செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு.இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. ஆஞ்சனேயர் சன்னதி,
ராகவேந்திரா ஆலயம்,முருகன் ஆலயம் உள்ளது.இங்குள்ள முருகன் சிலை பழநி மலை சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்டது. பழநியில் நவபாஷாண சிலை அமைத்த போகர் இங்கு மூலிகைகளால் சிலை
அமைத்தார் (இந்த சிலை நவாப்புகள் காலத்தில் திருட்டு போய்விட்டது) அடுத்து இராஜராஜேஸ்வரி ஆலயம் புதுபித்து புத்தொளியுடன் இருக்கிறது.இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு நேர் எதிரில் மலை அடிவாரத்தில் கண்ணப்பர் கோயில் அமைதியான சூழ்நிலையில் குளிர் மரங்களுக்கு இடையில் இருக்கிறது. தியானத்திற்கு ஏற்ற இடம்.சாதுக்களும்,ஆங்கிலேயரும்
இங்கு தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம்,



No comments:

Post a Comment